என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in a year"

    • ஆப்பக்கூடல் ஏரியானது தனது முழு கொள்ளளவான 16.59 மில்லியன் கன அடி நிரம்பி மூன்று வழிந்தோடிகள் வழியாக உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது.
    • கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி நிரம்பிய ஏரி தற்போது 2-வது முறையாக ஒரே ஆண்டில் நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் சத்தி-பவானி சாலையின் வழியாக அமைந்துள்ளது ஆப்பக்கூடல் ஏரி. ஆப்பக்கூடல் சாலையி னையொட்டி சுமார் 57 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது.‌

    கடந்த சில நாட்களாக அந்தியூர், ஆப்பக்கூடல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு ஆப்பக்கூடல் ஏரியானது தனது முழு கொள்ளளவான 16.59 மில்லியன் கன அடி நிரம்பி மூன்று வழிந்தோடிகள் வழியாக உபரி நீர் வெளியேறி பவானி ஆற்றில் கலக்கிறது.

    ஆப்பக்கூடல் ஏரியில் உபரிநீர் வெளியேறி ரம்மி யமாக காட்சியளிப்பதால் இதனை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு வந்து செல்கின்றனர். ஆங்காங்கே சிலர் மீன் பிடித்து செல்வ தையும் காண முடிகிறது.

    கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி நிரம்பிய ஏரி தற்போது 2-வது முறையாக ஒரே ஆண்டில் நிரம்பி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×