என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode"

    • துாத்துக்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம் ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.
    • மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தட ப்பள்ளி அரக்கன்கோட்டை, காளிங்கராயன் பாசன பகுதியில் சம்பா பாசனத்து க்காகவும், கீழ்பவானி, மேட்டூர் வலது கரை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி பணிகள் நடக்கிறது.

    மேலும் கரும்பு, வாழை, மஞ்சள், மரவள்ளி, நிலக் கடலை, மக்காசோளம், எள் ஆகிய பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் துாத்து க்குடியில் இருந்து ஸ்பிக் நிறுவனம் மூலம் 720 டன் பாரத் யூரியா உரம், 195 டன் டி.ஏ.பி. உரம், 64 டன் சூப்பர் பாஸ்பேட் உரம் ஆகியவை ெரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தடைந்தது.

    இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சி.சின்னசாமி கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் 4,438 டன், டி.ஏ.பி. 1,820 டன், பொட்டாஷ், 1,228 டன், காம்ப்ளக்ஸ், 10,364 டன், சூப்பர் பாஸ்பேட், 906 டன், தொடக்க வேளாண் கூட்டு றவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் திரவ உயிர் உரங்களும், வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் விற்பனைக்கு உள்ளன.

    ஈரோடு திண்டலில் உள்ள வேளாண்மை துறை யின் மண் பரிசோதனை நிலையத்தில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து அவர்களது பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்து வதன் மூலம் தேவையற்ற உரச்செலவை குறைக்கலாம்.

    இவ்வாறு கூறினார்.

    • சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தமிழகத்தில் இன்று சத்துணவு ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் சுப்புலட்சுமி, செல்வி, கவுரி, சாந்தி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இந்த போராட்டத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.

    காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    மணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம்மும், உதவியாள ர்களுக்கு ரூ.3 லட்சமும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    • ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர்.
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு:

    2023-ம் ஆண்டு புத்தாண்டை மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இதற்காக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் நேற்று இரவு 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டனர். நேரம் செல்ல செல்ல மக்களின் கூட்டம் அதிகரித்தது.

    இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் வந்திருந்தனர். சரியாக நள்ளிரவு 12 மணி அளவில் புத்தாண்டு பிறந்ததும் குடியிருந்த பொதுமக்கள் உற்சாகம் மிகுதியில் ஹேப்பி நியூ இயர் என்று விண்ணை தொடும் அளவுக்கு கோஷம் எழுப்பினர். ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் டவுன் டி.எஸ்.பி.ஆனந்த குமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் குறித்து போலீசார் கண்காணி த்தனர்.

    அப்போது சில இளைஞர்கள் மது அருந்து கொண்டு உற்சாகமிகுதியில் கத்திக்கொண்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு போலீசார் இவ்வாறு மது அருந்தி செல்வது தவறு என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இன்னும் சில இளைஞர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததால் அவர்களது வாகனங்களை வாங்கிக் கொண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து பின்னர் அந்த வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பொது மக்களுடன் இணைந்து புத்தாண்டு வரவேற்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடினார்.

    ஈரோடு காளைமாட்டு சிலை, ரெயில் நிலையம், பஸ் நிலையம், ஸ்வஸ்திக் கார்னர், மணிக்கூண்டு ஜி.எச். ரவுண்டானா , மக்கள் அதிக கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புத்தாண்டையொட்டி இன்று அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்கள் புத்தாடைகள் அணிந்து சாமியை வழிபட்டனர்.

    புத்தாண்டையொட்டி ஈரோடு ரெயில் நிலையத்தில் கடந்த 2 நாட்களாக பயணிகள் கூட்டம் அலை மோதி காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகளின் உடைமை களை தீவிர பரிசோதனை செய்து அதன் பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையும் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த பயணிகள் உடைமை களையும் பரிசோதனை செய்தனர்.

    கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, மொடக்குறிச்சி,கொடுமுடி, சத்தியமங்கலம், பெருந்துறை என மாவட்ட முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. 

    • 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.

    பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

    இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோ னா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது.

    • மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
    • முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.

    கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

    இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 729 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 975 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் 20 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருவதால் கொரோனா தினசரி பரிசோதனையை அதிகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தற்போது நாளொன்றுக்கு 60 முதல் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    இதேப்போல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முககவசம் அணிந்து செல்வது அவசியம் என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    • தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர உத்தரவு விடப்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து வேகம் எடுக்க தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதன் எதிரொலியாக தமிழ்நாட்டிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    தற்போது தினமும் 500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் தடுப்பு நடவடி க்கையை தீவிரப்படுத்தி உள்ள சுகாதாரத் துறையினர் பல்வேறு கட்டுப்பா டுகளையும் விதிக்க தொடங்கியுள்ளனர்.

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதும் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுபோல் சோப்பு களை கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் கவனமு டன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதி ப்பு பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்க ளாக தி னசரி பாதிப்பு 7 ஆக பதிவாகி வருகிறது.

    தினசரி பாதிப்பு பெ ரிய அள வில் இல்லா விட்டா லும் சுகாதா ரத்துறையினர் தடுப்பு நடவடிக்கை களில் ஈடு பட்டு வருகின்றனர்.

    முதற்க ட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறும் நோயா ளிகள், நோயாளிகளுடன் வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    இதனையடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் முககவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்குள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு அமலுக்கு வந்தது.

    தற்போது அங்கு வரும் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு சம்பந்தமாக வரும் போலீ சார் அனைவரும் முககவசம் அணிந்து வருகின்றனர்.

    தொடர்ந்து தற்போது தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்தரவு விடப்பட்டு ள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. இது தொடர்பாக அந்தந்த தியேட்டருக்கு முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் பார்க்க வரும் மக்கள் கண்டிப்பாக முகக வசம் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

    இதனால் பெரும்பா லானவர்கள் முககவசம் அணிந்து படம் பார்க்க சென்றனர். முககவசம் அணியாமல் வருபவ ர்களுக்கு தியேட்டர் சார்பில் முககவசம் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    அவ்வாறு செல்ல நேரிட்டால் கண்டிப்பாக முகவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    • 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
    • கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவ டிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. கடந்த ஒரு மாதமாக மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத்து றையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 880 உள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 7 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 124 பேர் கொரோனா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரி ழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    • ட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ர ஹாரம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பெருமாள் (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு கோபால கிரு ஷ்ணன்(25), பால கிருஷ்ணன்(23) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    இதில் மூத்த மகன் கோபால கிருஷ்ணன் தார்ப்பாய் வேலைக்கு சென்று வந்து ள்ளார். இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக கோபால கிருஷ்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்த ன்று கோபால கிருஷ்ணன் பெற்றோர் வெளியே சென்று விட்டனர். அப்போது வீட்டில் கோபாலகிருஷ்ணன் மட்டும் இருந்துள்ளார். மதியம் வெளியே சென்று விட்டு மீண்டும் கோபாலகிரு ஷ்ணனின் தாய் மாதம்மாள் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் கோபாலகி ருஷ்ணன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோபால கிருஷ்ணனை மீட்டு ஒரு ஆட்டோவில் சிகிச்சை க்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற னர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியி லேயே கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக தெரி வித்தார்.

    இது குறித்து கருங்கல்பா ளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு பழைய பாளையம் ,இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி லோகநாயகி(42).

    கடந்த சில வருடங்க ளாகவே லோகநாயகி வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இருந்தாலும் வயிற்று வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. வயிற்று வலியால் வாழ்வதை விட செத்து விடலாம் என்று அடிக்கடி அவர் கூறி வந்துள்ளார். அவருக்கு அவரது உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த துரை சாமி கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழி யாக பார்த்த போது லோக நாயகி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று லோக நாயகியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வரும் வழியி லேயே லோகநாயகி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது.
    • வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    ஈரோடு, 

    தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வெயில் முடிந்தாலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது.

    மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கு வதற்கு முன்பே வெயிலின் தாக்கம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 107 டிகிரி வரை ஈரோடு மாவட்டத்தில் வெயில் பதிவானது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வெயில் நிறை வடைந்ததால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முன்பை விட வெயிலின் தாக்கம் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

    நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டுக்கு ள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

    முக்கிய சாலைகள் மதிய நேரம் வெறிச்சோடி காணப்படுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது.

    குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் வெளியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அனல் காற்று, புழுக்கத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் அவதி வருகின்றனர்.

    வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். முடிந்தவரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறு த்தியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

    வெயில் தாக்கத்தின் போது வெளியே செல்வ தால் உடலில் நீர் சத்து குறைந்து மயக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவில் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெயிலின் தாக்கம் காரணமாக 1 - ந் தேதிக்கு பதிலாக 7-ந் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    எனினும் தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகி வருவதால் பள்ளி திறப்பை மேலும் தள்ளி போட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
    • காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 163 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.65 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.

    இதைப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.92அடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிட த்தக்கது.

    • தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.
    • கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை நிலையம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என 4 இடங்களில் மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.

    கடந்த சில நாட்களாக தரமான மஞ்சள் வரத்தும், விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் குவிண்டாலுக்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மேலும் 500 ரூபாய் அதிகரித்துள்ளது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-

    கடந்த வாரம் மஞ்சள் விலை குவிண்டால் 9,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று மேலும் 500 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விரலி மஞ்சள் 6,206 முதல் 9,589 ரூபாய் வரையிலும், கிழங்கு மஞ்சள் 6,089 ரூபாய் முதல் 8,600 ரூபாய் வரையிலான விலையில் விற்பனையானது.

    ஈரோடு மஞ்சள் வளாக விற்பனை கூட ஏல மையத்தில் தரமான பெருவட்டு மஞ்சள் ஒரு குவிண்டால் 10,286 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த 2 மாதங்களில் ஏற்றுமதி 25 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

    மஹராஷ்டிரா மாநிலத்தில் கோடை காலத்தில் பெய்த எதிர்பாராத மழையால் பெருவாரியான மஞ்சள் தரம் குறைந்து காணப்படுகிறது.

    இதனால் தற்போது மார்க்கெட்டுக்கு தரமான மஞ்சள் வரத்து அங்கு குறைந்து வருகிறது. கடந்த காலங்களில் குறைவான விலை மற்றும் போதிய பருவமழை இல்லாததால் நடப்பு ஆண்டு அனைத்து பகுதிகளிலும் விவசாயிகளின் மஞ்சள் நடவும் குறைந்துள்ளது.

    ஓராண்டு பயிராக மஞ்சள் இருப்பதால் அடுத்து வரும் ஆண்டின் தேவைகளை கருத்தில் கொண்டு வணிகர்கள் கூடுதல் வர்த்தகம் செய்து வருகின்றனர்.

    தவிர 'என்.சி.டெக்ஸ்' ஆன்லைன் வர்த்தகத்திலும் ஆகஸ்ட் மாத டெலிவரி விலை 10,000 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பத்தில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் ஆர்வம் காட்டாததால் பெருவாரியான மஞ்சள் வேகவைக்கப்பட்டு விட்டது.

    தற்போது விதை மஞ்சள் கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.

    தேசிய அளவில் அனைத்து பகுதியிலும் மஞ்சள் நடவு பணிகள் நடந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பின் வடமாநில தேவைகளுக்காக ஈரோடு மார்க்கெட்களில் அதிக அளவில் மஞ்சள் விற்பனை நடக்கிறது.

    மஹராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு முழுமையாக தெரியும் வரை எதிர்ப்பு அடிப்படையில் மஞ்சள் வர்த்தகம் கூடுதல் விலையுடன் அதிகமாக நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஈரோடு:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ×