என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in fire"

    • துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மனைவி சாந்தி (48). இவர் தனது தாயார் துளசி மணி மற்றும் இளைய மகள் சரண்யா பிரபா ஆகியோருடன் அதே பகுதியில் குடியிருந்து விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு துளசி மணி வீட்டுக்கு முன்பு இருந்த காலி இடத்தில் பழைய துணிகளை போட்டு தீ வைத்து எரித்துக் கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென அவரது அலறல் சத்தம் கேட்டு சாந்தியும் அவரது மகளும் வெளியே வந்து பார்த்தனர்.

    துளசிமணியின் சேலையில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அருகில் கிடந்த சாக்குப் பையை எடுத்து தீயை அணைத்த னர். இருப்பினும் துளசி மணியின் தலையைத் தவிர உடல் முழுவதும் தீக்கா யங்கள் ஏற்பட்டிருந்தது.

    உடனடியாக அவர்கள் ஒரு ஆட்டோவை வரவழைத்து அங்கிருந்த வர்கள் உதவியுடன் பெருந்துறை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துளசி மணி பரிதாபமாக இறந்து போனார்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×