என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "in-house agitation"
- சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
- மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.
அவினாசி:
அவிநாசி நகரப் பகுதியில் சாலையோரங்களில் புதிய புதிய கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.
சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் செப்டம்பா் 22-ந் தேதி நடைபெற்றது. இதில், சாலையோரக் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை வளாகத்துக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், அக்டோபா் 1-ந் தேதி முதல் தீா்மானம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.
- மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
- இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 40 பேர், நேற்று மாலை திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. இதனை 30 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அனல் மின் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
- ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும்
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சண். ராமநாதன் பேசும்போது, மாநகராட்சி 51 வார்டுகளிலும் தரமான முறையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இன்னும் மூன்று மாதத்தில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலைகள் அமைக்கப்படும். இந்த பணிகளும் விரைவில் முடிவடையும்.
ஆட்டோக்களில் கியூ ஆர் கோடு மூலம் சரியான கட்டணம் நிர்ணயம் செய்ய முடியும் என்றார்.
ஆணையர் சரவணகுமார் பேசும்போது, பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 1-ந் தேதி நடைபெறுகிறது.
சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் தேரோட்டத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த முறை தேரோட்டம் அனைவரும் போற்றும் வகையில் நடைபெறும்.
தேரோட்டத்தை சிறப்பாக நடத்தஜ மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
கவுன்சிலர் கண்ணுக்கி னியாள் :
தஞ்சை கீழ வாசலில் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களில் பாலம் இடிந்து விழுந்தது. இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன. சரியான முறையில் பாலம் கட்டப்பட்டதா? என்றார்.
இதே பிரச்சினையை எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டது.
கோரிக்கை குறித்து பதில் அளித்த
மேயர் சண். ராமநாதன் :
கீழவாசல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்காத நிலையில் தடையை மீறி லாரி டிரைவர் அதிக லோடு மணல் ஏற்றி சென்றதால் விபத்து ஏற்பட்டது. லாரி டிரைவர், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டுமான பணிக்கு தேவையான பணத்தை லாரி உரிமையாளர் தருவதாக கூறியுள்ளார். பாலம் தரமான முறையில் தான் கட்டப்பட்டது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட சாந்த பிள்ளை பாலம் தரமான முறையில் கட்டவில்லை என்றார்.
அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் சாந்த பிள்ளை கேட் பாலம் சேதம் குறித்த புகைப்படத்துடன் கூடிய பேனரை காண்பித்து கோஷம் எழுப்பினர். இதனால் அ.தி.மு.க, அ.ம.மு.க. பா.ஜ.க. கவுன்சிலர்கள் பதிலுக்கு கோஷம் எழுப்பினர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் அமளி ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் மாறி மாறி கடும் வார்த்தைகளால் பேசிக்கொண்டனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக மேயர் சண். ராமநாதன் கூறி சென்றார்.
அப்போது கூட்ட அரங்கில் மைக், விளக்கு அமைக்கப்பட்டது.
இதனை கண்டித்தும் கூட்டத்தில் தங்களது கருத்துகளை தெரிவிக்க சுதந்திரமான முறையில் பேச அனுமதிக்க வேண்டும், பேசும்போது மைக்கை ஆப் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்களான மணிகண்டன், கோபால், கேசவன், தட்சிணாமூர்த்தி, சரவணன், காந்திமதி ,கலை வாணி, கண்ணுக்கினியாள், ஜெய்சதீஷ் ஆகிய 9 பேரும் மாநகராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பால பிரச்சனை குறித்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் பேசும்போது மைக், லைட் ஆப் செய்ததை கண்டித்தும், கவுன்சிலர் கேசவனை தள்ளி விட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷமிட்டனர்.
தகவல் அறிந்து ஆணையர் சரவணகுமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். நீங்கள் கருத்துகளை கூற சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கூட்ட அரங்கில் இருந்து போராட்டம் நடத்துவது முறையல்ல. எனது அறைக்கு வாருங்கள். அங்கு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.
இதனை ஏற்றுக் கொண்டு போராட்டத்தில் ஏற்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் மாநகராட்சி ஆணையர் அறைக்கு சென்று பேசினர்.
இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பூதலூர் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.
- தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனகூறி உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியக்கு ழுவின் சாதாரண கூட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றிய அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் உறுப்பினர்கள் கலந்துெகாண்டு பேசினர்.
கேசவமூர்த்தி (தி.மு.க.):
அகரப்பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் மின்விளக்கு வசதி வேண்டும்.
மயில்சாமி (தி.மு.க.):
வேப்பங்குடி ஆனந்த காவேரி வாய்க்காலில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும். மனையேரிப்பட்டி கடம்பன்குடி சாலையை சீரமைத்து தர வேண்டும்.
சுப்பிரமணியன் (அ.ம.மு.க.):
சானூரப்பட்டியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை பயன்பாடு இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. ஒன்றிய நிர்வாகத்தில் வெளிப்ப டைத்தன்மை இல்லாத சூழ்நிலை உள்ளது.
தீர்மான புத்தகத்தை எப்போதும் காண்பிப்பதில்லை. தீர்மான புத்தகத்தை உறுப்பினர்களுக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டும்.
வெங்கடேசன் (பா.ஜ.க.):
சோளகம்பட்டி ெரயில் நிலைய இணைப்பு பாதை குறித்து தீர்மானம் நிறைவேற்றி தாருங்கள்.
கென்னடி (பா.ஜ.க.):
திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் ெரயிலை பூதலூரில் நிறுத்த வேண்டும்.
மதுபாலா (அ.தி.மு.க.): சுரக்குடிபட்டியில் பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சீர்செய் தர வேண்டும்.
ரம்யா (தி.மு.க):
இளங்காடு கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்து தர வேண்டும்.
தலைவர்:
வேப்பங்குடி ஆனந்த காவேரி பாலம் கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது.
பூதலூர் ஒன்றியத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மான புத்தகத்தை அதிகாரிகள் படிக்கலாம் காண்பிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு கூறி கூட்டத்தை முடித்து விட்டு தனது அறைக்கு சென்றார்.
அப்போது தீர்மான புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனக்கோரி பா.ஜ.க. மற்றும் அ.ம.மு.க. உறுப்பினர்கள் அவைக்கூடத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் போராட்டம் நடத்திவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- போலீசார் பேச்சுவார்த்தை
- அமைதி கமிட்டி கூட்டம் அமைப்பதாக உறுதி
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காஞ்சனகிரி மலையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சிவன் கோயில் உள்ளது.
இந்த கோவிலில் லாலாப்பேட்டையை சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவர் காஞ்சனகிரி மலைக்கோயில் எங்கள் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எனவும் இனி நாங்கள் தான் நிர்வாக செய்வோம் என தெரிவித்தாக லாலாப்பேட்டை பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து நேற்று லாலாப்பேட்டை ஊராட்சி பொது மக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் அனைவரும் முகுந்தராயபுரம் ஊராட்சிமன்ற தலைவரை கண்டித்து ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு செய்தனர்.
இதனையடுத்து காஞ்சனகிரி மலையடிவாரத்தில் லாலாப்பேட்டை பொதுமக்கள் ஒன்றுகூடி இன்று கலெக்டரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்து பின்னர் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் 2-வது நாளாக லாலாப்பேட்டை கிராம பொதுமக்கள் லாலாப்பேட்டையில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை கோட்டாட்சியர் வினோத்குமார், தாசில்தார் நடராஜன், டி.எஸ்.பிக்கள் பிரபு, ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர் லாலாப்பேட்டை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்துனர்.
இதனை அனைத்தும் கேட்ட கோட்டாட்சியர் வினோத் குமார் பேசியதாவது:-நீங்கள் அனைவரும் தெரிவித்த குற்றச்சாடுகளுக்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பீஸ் கமிட்டி கூட்டம் அமைத்து இதற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் லாலாப்பேட்டை ஊராட்சியை மறுவரையறை செய்ய பொதுமக்கள் நீங்கள் மனுக்களாக கொடுங்கள் அது அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டனர்.
- சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை சுங்க ச்சாவடி பணியாளர்கள் 28பேர் பணி நீக்கம், ஆள் குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட சுங்க சாவடி அனைத்து ஊழியர்கள் சேர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சென்னை-திருச்சி செல்லும் வாக னங்கள் அனைத்தும் பணம் வழங்காமல் சுதந்திரமாக செல்கிறது.
அதோடு மட்டும ல்லாமல் ஊழியர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் இருப்பதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமை யில் 50-க்கும் போலீசார் மேற்பட்டோர் குவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுங்கச்சாவடி பணியா ளர்கள் அனைவரும் 15 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.
- நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனா்.
- இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பணியைப் புறக்கணித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பெரியகிணறு பகுதியில் ஒரு வாரத்துக்கு முன் அப்பகுதியைச் சோ்ந்த ஊராட்சி வாா்டு உறுப்பினா் புதியதாக 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தண்ணீா் தொட்டியைக் கட்டியுள்ளாா். இந்த நிலை யில் கடந்த 23-ந் தேதி தேசிய ஊரக வேலையளிப்புத் திட்ட பாப்பாத்தி (வயது 50) என்பவா் அங்கு தண்ணீா் பிடிக்க சென்றபோது தொட்டி இடிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.
மேலும் ஒருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப ட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் உத்தரவின்பேரில் விரிவான விசாரணை மேற்கொள்ள ப்பட்டது. இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலத்திடம் உரிய அனுமதியில்லாமல் கட்டியதற்கு உதவியதாக ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்ட அனுமதியளித்ததாக அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் தங்கராஜிடம், விளக்கம் அளிக்கக் கோரி ஆர்.டி.ஓ. நோட்டீஸ் வழங்கி உள்ளாா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நாமக்கல் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பணியைப் புறக்கணித்து, நாமக்கல் ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் செய்தனா்.
இதையடுத்து கோட்டாட்சி யா் த.மஞ்சுளா வுடன், கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட வில்லை. மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா். இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்க நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- கூட்டத்தில் தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.
- 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டன.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்தில் தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டன. முறையாக அனைத்து வார்டுகளிலும் 53 தீர்மா னங்களில் உள்ள பணிகள் நடைபெறவில்லை என்று கூறி துணைத் தலைவர் ராஜா உட்பட 5 தி.மு.க உறுப்பினர்கள், பா.ம.க-வைச் சேர்ந்த ஒரு உறுப்பி னர் மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 9 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
எங்களது வார்டுகளில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் பணி நடைபெற்றதாக நீங்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொடுத்துள்ளீர்கள். நாங்கள் இதனை வன்மை யாக கண்டிக்கின்றோம் என கூறினர்.
பேரூராட்சி தலைவர் லட்சுமிமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் இருவரும் உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து வேலூர் பேரூராட்சி 9 வார்டு உறுப்பினர்கள் மன்ற கூட்டரங்கில் தொடர்ந்து பகல் 12 மணி முதல் இரவு 9.45 மணி வரை சுமார்10மணிநேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் சேலம் மண்டல பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள், செயல் அலுவ லர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் கூட்டத்தில் தீர்மா னங்கள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை என கூறியதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி கூறுகையில், நான் பெண் தலைவர் என்பதால் கவுன்சி லர்கள் யாரும் என்னை மதிப்பதில்லை. பேரூராட்சி பகுதிகளில் இதுவரை எந்த வேலையும் நடைபெற விடவில்லை.அதனால் வேலையே நடைபெறாமல் எப்படி ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
கவுன்சிலர்கள் போராட்டம் காரணமாக வேலூர்பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
- தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள்.
பல்லடம் :
பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் செயல்படும் கல்குவாரி நிர்வாகத்தை கண்டித்து செந்தில்குமார் என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 11 வது நாளாக ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், தாசில்தாரிடம் பேச்சுவார்த்தைக்காக வந்தவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து அங்கேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் பல்லடம் தாசில்தார் நந்தகோபால், பல்லடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இன்றுகாலையும் போராட்டம் நீடித்தது. அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு சேத்துப்பட்டு வட்ட செயலாளர் ஜான்சன், தலைமை தாங்கினார் வட்டத் தலைவர் மோகன்ராஜ், மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், ஆகிய முன்னிலை வகித்தனர்.
கடந்த 24-ந்தேதி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேத்துப்பட்டு, தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டம் நடத்தியும் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.
மேலும் 7 அம்ச கோரிக்கைகளை எந்த முடிவும் எடுக்காததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் தாலுக்கா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பின்னர் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 10 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்க வேண்டிய ஜமாபந்தி நிலுவை தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
பின்னர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலந்து சென்றனர் இதில் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்
- 6 மணி நேரம் நடந்ததால் பரபரப்பு
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே சின்னவயரிகம் ஊராட்சியில் தனியார் ஷூ கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கடந்த 2 மாதம் சம்பளம் உட்பட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
உள்ளிருப்பு போராட்டம்
இதே உரிமையாளர் நடத்தி வரும் விண்ண மங்கலம் ஊராட்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஷூ கம்பெனி பெண் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் கொட்டும் மழையிலும் கடந்த வாரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையின் போது 10-ந்தேதிக்கு பிறகு நிலுவையில் உள்ள சம்பளப் பணம் பி.எப், இ.எஸ்.ஐ. மற்றும் ஊழியர்களின் கோரிக்கை யை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலா ளர்கள் உள்ளிருப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு 11 மணிக்கு உமராபாத் போலீசார் மற்றும் கம்பெனி நிர்வாகம் தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்று காலை அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும் என எழுத்து மூலம் தெரிவித்தனர்.
இதையடுத்து 6 மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்த சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்