search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "In private banking"

    • 10 நாள் விடுமுறையில் செல்வதாக கூறி, அந்த கிளையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரிடம் அடமான நகைகளை ஒப்படைத்து உள்ளார்.
    • ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பு உள்ள 137 கிராம் தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41). இவர் சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் நகை பிரிவு துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம், 10 நாள் விடுமுறையில் செல்வதாக கூறி, அந்த கிளையில் வேலை பார்க்கும் பெண் ஊழியர் ஒருவரிடம் அடமான நகைகளை ஒப்படைத்து உள்ளார்.

    அப்போது அந்த பெண் ஊழியர் நகைகளை சரிபார்க்கும் போது ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பு உள்ள 137 கிராம் தங்க நகைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் சிவக்குமார் நேற்று இரவு பள்ளப்பட்டி போலீசில் புகார் ெசய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×