என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "in the market is high"
- வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
- கடந்த வாரத்தை விட காய்கறிகள் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.
தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக காய்கறிகள் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் காய்கறிகள் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததை யொட்டி காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் பெரும்பா லானோர் அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறி உள்ளதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.
இதைபோல் முகூர்த்த நாட்களும் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் விலை கடந்த வாரத்தை விட இன்று அதிகரித்து விற்கப்படுகிறது.
இன்று வ.உ.சி. மார்க்கெட்டிற்கு 800 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ரூ.100-க்கு விற்கப்பட்ட கருப்பு அவரை ஒரு கிலோ இன்று ரூ.130 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் கடந்த வாரம் ரூ.80-க்கு விற்ற ஒரு கிலோ பீன்ஸ் இன்று ரூ.90 முதல் ரூ.100 வரை உயர்ந்து விற்கப்படுகிறது.
ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ புடலங்காய் இன்று ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. ரூ40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்திரிக்காய் இன்று ரூ.50-க்கு விற்கப்படுகிறது.
ரூ 40-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.50-60-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.30-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.70-க்கும் விற்கப்பட்டது.
இதை போல் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட பீர்க்கங்காய் இந்த வாரம் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:
பாவைக்காய்-60, முருங்கைக்காய்-60, கொத்த வரங்காய்-30, கேரட்-60-70, பச்சைமிளகாய்-50, பட்டவரை - 70, பழைய இஞ்சி - 270, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்கா யம்-80-90,
முட்டை கோஸ்-20, காலிங்பிளவர்-40, காளான்-60, உருளைக் கிழங்கு-40-60, தக்காளி-15. கடந்த வாரத்தை விட காய்கறிகள் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
- முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது.
- இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி, பெங்களூர், தாளவாடி, ஒட்டன்சத்திரம், மேச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
தற்போது முகூர்த்த நாட்கள், கோவில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது. இதனால் கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட ரூ.60 வரை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கேரட், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இன்று ஒரு கிலோ கேரட், பீன்ஸ் விலை உயர்ந்து ரூ.120-க்கு விற்பனையானது. இதேப்போல் கத்திரிக்காய் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.
வ.உ.சி. மார்க்கெட்டில் மற்ற காய்களின் விலை கிலோவில் வருமாறு:
பீர்க்கங்காய்-70, பாவைக்காய்-50, கருப்பு அவரை-110, பட்ட அவரை-70, சுரைக்காய்-20, பச்சைமிளகாய்-50, முட்டைகோஸ்-50, காலி பிளவர்-40, முருங்கைகாய்-120, வெண்டைக்காய்-40, முள்ளங்கி-50, பீட்ரூட்-80, சின்ன வெங்காயம்-80, பெரிய வெங்காயம்-45, தக்காளி-30.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்