என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "in the murder"
- கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
- போலீசாரின் விசாரணையில் முன் விரோத தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் கடந்த 30-ந் தேதி ஈரோடு கனிராவுத்தர்குளம் பகுதியில் காந்தி நகர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு அருகில் உள்ள பாரில் மது குடித்துள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஜின்னா(30) தலைமையிலான 4 பேர் கொண்ட கும்பல் ஒன்றாக மது குடித்து கொண்டி ருந்தனர்.
சந்தோஷ் மது குடித்து விட்டு டாஸ்மாக் பாரினை விட்டு வெளியே வந்தபோது, ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 பேர் சந்தோஷை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு ள்ளனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜின்னா, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷின் வயிற்றில் குத்தினார். இதை யடுத்து சந்தோஷ் நிலை குலைந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தோஷ் இறந்ததை உறுதி செய்தபின், ஜின்னா மற்றும் அவருடன் வந்த 4 வாலிபர்கள் 3 மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றனர்.
கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் நிலையங்களில் 2 வழிப்பறி மற்றும் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது.
அதேபோல் சந்தோஷை கத்தியால் குத்திய ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் முன் விரோத தகராறில் இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இந்த கொலை சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் குற்றவா ளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின்பேரில் டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெ க்டர்கள் சண்முகம், சோம சுந்தரம், முருகன், தெய்வ ராணி ஆகியோர் தலைமை யில் தனிப்படை அமைக்க ப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சந்தோஷை கொலை செய்த ஜின்னா, ஈரோடு கருங்க ல்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன்(27) ஆகியோர் நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களைப் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்பு உடைய சின்னசேமூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் சித்தீக் (34), பவானியை சேர்ந்த மனோஜ் குமார்(37), கனி ராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(30) ஆகிய 3 பேரை வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கோர்ட்டில் சரணடைந்த 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வீரப்பன் சத்திரம் போலீசார் முடிவு செய்து ள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பதால் ஜின்னா, மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியை கோரியு ள்ளனர்.
இன்னும் ஓரிரு நாளில் அனுமதி கிடைத்ததும் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர். அதன்பிறகு இந்த கொலையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்