search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INCREASE AIR POLLUTION"

    • திருச்சியில் தீபாவளி பட்டாசால் ஒலி மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
    • மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவின்படி, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளிக்கு முன் மற்றும் பின்பு 7 நாட்களுக்கு என் 14 நாட்களுக்கு காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது.

    அதன்படி, ஒலி மாசுபாடு அளவு தீபாவளிக்கு முன்பாக 18-ந்தேதியும், தீபாவளி பண்டிகையன்று தில்லைநகர் பகுதியில் எடுக்கப்பட்டது. 18-ந்தேதி தில்லைநகரில் ஒலி மாசு குறைந்தபட்சம் 57.5 டெசிபலும், அதிகபட்சமாக 69 டெசிபலும் கண்டறியப்பட்டது. தீபாவளியன்று தில்லைநகரில், குறைந்தபட்சம் 65.1 டெசிபலும், அதிகபட்சமாக 87.4 டெசிபலும் அளவிடப்பட்டது.

    இந்த அளவிடப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளியன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலி மாசுபாட்டின் அளவுகளை (பகல்-65 டெசிபல், இரவு-55 டெசிபல்) விட அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

    தீபாவளியன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு குறித்து காலை 6 மணி முதல் மறுநாளான 25-ந்தேதி காலை 6 மணி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காற்றுத்தர குறியீடு, 46-ல் இருந்து (மாசுபடாதது) 130 வரை (மிதமான மாசுபட்டது) என்று கண்டறியப்பட்டது. குறைந்த அளவாக உறையூரில் 111-ம், தென்னூரில் 130-ம் கண்டறியப்பட்டது.

    மாநகரில் பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளையும், வாண வெடிகளையும் அதிகம் வெடித்ததே இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. அன்று காற்றில் ஏற்பட்ட அதிகமான ஈரத்தன்மையும், காற்றின் மிகக்குறைந்த வேகமும் பட்டாசு வெடித்ததனால் ஏற்படும் புகை வான்வெளியில் பரவுவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படவில்லை.

    இதுவே திருச்சி மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு இந்தாண்டு தீபாவளியன்று சற்று அதிகமானதற்கு காரணமாகும்.

    வரும் காலங்களில் ெபாதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தீபாவளி பண்டிகையின் போது பின்பற்றி காற்றின் தரம் மற்றும் ஒலி மாசு அளவுமிகாமல் இருக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இத்தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருச்சி இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×