search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Increase in supply"

    • சேலம் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.
    • இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட்டாத்து ப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டா புரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த மாம்பழங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைனிலும் உலகம் முழுவதும் இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    வழக்கமாக மார்ச் மாதம் மாத மத்தியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய் வரத்து குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சேலம் கடை வீதிகளில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் -பெங்களூரா, சேலம் குண்டு, அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி , செந்தூரா, கிளிமூக்கு, குதாதத், உள்பட பல ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 40 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ வாசம் வீச தொடங்கி உள்ளது.

    சேலம் மாநகர தெருக்கள், ஏற்காடு சாலை, செவ்வாய்ப்பேட்டை கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டிகளிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதிகளிலும், சேலம் மாநகர தெருக்களிலும் மாம்பழ வாசம் கம, கமக்க தொடங்கி உள்ளது.

    ேசலம் கடை வீதியில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த ஆண்டு இதே நாளில் 50 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 40 டன்னாக உள்ளது. தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது, இனி வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது.
    • இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்காக தினமும் கொண்டு வரப்படுகிறது. இதனை சுற்று வட்டார வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு கடந்தாண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை சின்னவெங்காயம் வரத்து அதிகமாக இருந்ததால் அந்த நேரத்தில் அவற்றின் விலை ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை இருந்தது. பின்னர் மழைக்காலம் தொடங்கியதும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வரத்து குறைய ஆரம்பித்தது. எனவே சின்ன வெங்காயத்தின் விலை கடந்த அக்டோபர் மாதம் கிடுகிடுவென உயர்ந்தது. இதற்கிடையே நவம்பர் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து மழைப்பொழிவு குறைந்து உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மீண்டும் தொடங்கியது. மேலும் கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் ஆந்திராவில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பொள்ளாச்சி மார்க்கெட்டில் சின்ன வெங்காயத்தின் விலை மளமளவென குறைய தொடங்கி உள்ளது. அங்கு தற்போது மொத்த விலைக்கு ஒரு கிலோ சின்ன வெங்காயம் முதல் தரம் அதிகபட்சமாக ரூ.30-க்கும், இரண்டாவது தரம் ரூ.20-க்கும் விற்பனையாகி வருகிறது.

    இதுதொடர்பாக பொள்ளாச்சி மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அறுவடை நடந்து வருவதால் அவை டன் கணக்கில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக சின்ன வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்து உள்ளது. இனிவரும் நாட்களில் சரக்கு வரத்தை பொருத்து அவற்றின் விலையில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும் என தெரிவித்து உள்ளனர்.

    • தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
    • இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இன்று வெண்டைகாய், புடலங்காய், வாழைபழம் உள்ளிட்டவற்றின் வரத்து அதிகமாக இருந்தது.

    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

    கத்தரிக்காய் ஒரு கிலோ - ரூ. 24 முதல் 36, தக்காளி - ரூ.12 முதல் 16, வெண்டைக்காய் - ரூ. 20 முதல் 25, அவரை - ரூ.40 முதல் 50, கொத்தவரை - ரூ.25, முருங்கைக்காய் -ரூ.30, முள்ளங்கி -ரூ.16, புடல்- ரூ.32 முதல் 40, பாகல்-ரூ.40 முதல் 44, பீர்க்கன் -ரூ.40 முதல் 56, வாழைக்காய் -ரூ.28, வழைப்பூ (1)- ரூ.7 முதல் 10, வாழைத்தண்டு (1)- ரூ.5 முதல் 10, பரங்கிக்காய் -ரூ.20, பூசணி- ரூ.15, சுரைக்காய் -(1) ரூ.10 முதல் 12, மாங்காய்- ரூ.60, தேங்காய் -ரூ. 27, எலுமிச்சை -ரூ. 80, கோவக்காய்- ரூ.40, சி.வெங்காயம்- ரூ. 30 முதல் 46, பெ.வெங்காயம்- ரூ.30 முதல் 35, கீரை -ரூ.30, பீன்ஸ் -ரூ.60 முதல் 68, கேரட் -ரூ.40 முதல் 48, பீட்ரூட்- ரூ.30 முதல் 40, உருளைக்கிழங்கு -ரூ.27 முதல் 30, சவ்சவ்- ரூ.28, முட்டைகோஸ்- ரூ.15 முதல் 20, காளிபிளவர்- ரூ.15 முதல் 25, குடைமிளகாய் -ரூ.50, கொய்யா -ரூ.30 முதல் 40, மலைவாழைப்பழம்- ரூ.50, பச்சை பழம்- ரூ.25, கற்பூரவள்ளி- ரூ.40, ரஸ்தாளி- ரூ.30, செவ்வாழை -ரூ.50, பூவன் -ரூ.20, இளநீர்- ரூ.15 முதல் 25, கறிவேப்பிலை -ரூ. 40, மல்லிதழை -ரூ. 40, புதினா -ரூ. 30, இஞ்சி- ரூ.150, பூண்டு- ரூ. 50, ப.மிளகாய்- ரூ. 40 முதல் 50, வாழை இலை- ரூ.30, மரவள்ளிக்கிழங்கு- ரூ. 30, மக்காச்சோளம்- ரூ. 25 முதல் 28, வெள்ளரிக்காய்- ரூ.20 முதல் 70, சேனைக்கிழங்கு- ரூ.70, கருணைக்கிழங்கு- ரூ.70, பப்பாளி- ரூ. 30, நூல்கோல்- ரூ. 32 முதல் 36, நிலக்கடலை- ரூ. 50, கொலுமிச்சை- ரூ.30, சப்போட்டா- ரூ.40, தர்பூசணி- ரூ.15, விலாம்பழம்- ரூ.40.

    • இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • ரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. வடமாநிலங்களில் பெய்த மழை மற்றும் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

    ரேசன் கடைகள் மற்றும் பசுமை பண்ணை கடைகள்மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட போதும் பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. அதன்பிறகு படிப்படியாக தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலையும் குறைந்து வந்த நிலையில் தற்போது கடும் வீழ்ச்சி அடைந்ததால் குப்பையில் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஒட்டன்சத்திரம் காந்தி, காமராஜர் மார்க்கெட்டு களுக்கு தினந்தோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருக்கும். இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தற்போது பெரும்பாலான ஊர்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து ள்ளதால் வெளியூர் வியாபாரிகள் வருவது குறைந்து விட்டது. குறிப்பாக உடுமலைப்பேட்டையில் இருந்து வரும் வியாபாரிகள் இல்லாததால் மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.

    காந்தி மார்க்கெட்டுக்கு 2 ஆயிரம் பெட்டிகளும், காமராஜர் மார்க்கெட்டுக்கு 2500 பெட்டிகளும் விற்பனைக்கு வந்தது. ஒரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.4.50 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிலும் முதல் தர தக்காளி மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

    இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டிச் சென்றனர். செடியை பராமரித்து தண்ணீர் விட்டு, ஆட்களை வைத்து பறித்து மார்க்கெட்டுக்கு எடுத்து வரும் செலவை கணக்கிட்டால் பெரிய அளவு நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் காய்கறி செடிகள், மலர் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி விவசாயம் அதிக அளவு நடைபெற்று வந்தாலும் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைப்பதி ல்லை என்ற நிலை உள்ளது.

    எனவே அதிகாரிகள் இதனை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது.
    • வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தைகளில் வாரம் தோறும் முருங்கைக்காய் சந்தை நடைபெறுவது வழக்கம். மூலனூர், கன்னிவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர், கன்னிவாடி வாரச்சந்தை மற்றும் தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக்காய்களை வாங்கி செல்கிறார்கள்.

    பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது வட மாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை நிறுத்தி உள்ளனர். இதனால் மூலனூர் பகுதியில் வரத்து அதிகமானதால் இந்த வாரம் முருங்கை விலை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.37-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கை இந்த வாரம் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் மரம், செடி முருங்கை, கருமுறுங்கை என அனைத்து முருங்கைகளும் இதே விலை நிலவரத்தில் விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×