search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IND vs BAN"

    • டைகர் ராபி அங்கிருந்து செக்கியூரிட்டிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
    • முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் பால்கனியில் ஏறி தப்பித்ததாகவும் டைகர் ராபி தெரிவித்தார்

    இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் இன்றைய தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    போட்டியின்போது பார்வையாளராக வந்திருந்த வங்கதேச அணியின் தீவிர ரசிகராக அறியப்படும் டைகர் ராபி என்பவரை இந்திய அணி ரசிகர்கள் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் படுகாயமடைந்துள்ள டைகர் ராபி அங்கிருந்து செக்கியூரிட்டிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

    தனது முதுகிலும் அடிவயிற்றிலும் அவர்கள் அடித்ததாகவும் அவர்களிடம் இருந்து தப்பிக்க பால்கனியில் ஏறிக்கொண்டதாகவும் தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்றும் ராபி கடுமையான வலியில் பேச முடியாமல் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இந்திய அணி ரசிகர்கள் ராபியை தாக்கினர் என்பதை மைதானத்தில் காவலுக்கு நின்ற உள்ளூர் போலீஸ் மறுத்துள்ளது. 

    • 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர்.
    • சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணி ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் ஆடுகிறது. இதன்படி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில், நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேசத்தை நியூயார்க் நகரில் இன்று சந்திக்கிறது. நட்சத்திர வீரர் விராட் கோலி நேற்று தான் இந்திய அணியுடன் இணைந்தார். இதனால் அவர் உடனடியாக ஆடுவாரா என்பது சந்தேகம் தான். மற்ற 14 வீரர்கள் பயிற்சி போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். பயிற்சி ஆட்டத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடையாது என்பதால் 14 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு.

    தொடக்க ஆட்டத்திற்கு சரியான ஆடும் லெவன் அணியை கண்டறிய இந்த பயிற்சி போட்டி உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். இதற்கு முன்பு இந்திய அணியினர் நியூயார்க்கில் விளையாடியதில்லை. அதனால் அங்குள்ள சீதோஷ்ண நிலையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்வது முக்கியம். இங்குள்ள சூழலை சாதகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்படுவோம் என்று கேப்டன் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்திய அணி வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த பயிற்சி ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×