search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independent"

    • பீகாரின் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பப்பு யாதவ் வென்றார்.
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை இன்று அவர் சந்தித்தார்.

    பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற பப்பு யாதவ் மீண்டும் காங்கிரசில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து தனது விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களின் எண்ணிக்கை 100 லிருந்து 101 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏற்கனவே மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
    • மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் சங்லி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட விஷால் பாட்டில் பாஜக வேட்பாளர் சஞ்சய்காகா பாட்டீலை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 30 இடங்களையும் பாஜக கூட்டணி 17 இடங்களையும் வென்றுள்ளது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளரான விஷால் பாட்டில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

    இதன் மூலம் மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் வசந்ததாதா பாட்டீல் குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த விஷால் பாட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×