என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "india communist party"
- வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது.
- தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
வள்ளியூர்:
வள்ளியூர் பஸ் நிலையத்தில் கிளை அஞ்சல் நிலையம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. இந்த அஞ்சலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட பதிவு தபால், மணிஆர்டர் சேவைகள் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த கிளை அஞ்சல் அலுவலகத்தில் 500-க்கும் அதிகமான சிறுசேமிப்பு கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தினமும் அஞ்சல் தலை விற்பனை உள்ளிட்ட அஞ்சலக பணிகள் நடைபெற்று வந்தது. பஸ் நிலையத்திற்குள் அஞ்சலகம் செயல்பட்டு வந்ததால் வெளியூர் பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு அதிக பயனுள்ளதாக இருந்து வந்தது. இந்நிலையில் வள்ளியூர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனை அடுத்து பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த கடைகள், புறக்காவல் நிலையம், நூலகம், அஞ்சலகம் அனைத்தும் காலி செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டுள்ளது.
இதில் கடை வியாபாரிகளுக்கு பஸ் நிலையத்தின் வெளிப் பகுதியில் சாலையை யொட்டி தற்காலிகமாக கடைகள் அமைத்து கொடுக்கப் பட்டு அதில் வியாபாரங்கள் நடந்து வருகிறது. கிளை அஞ்சல கத்திற்கும் தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சல் பணியாளர்கள் இந்த தற்காலிக இடத்தில் செயல்படமுடியாது என கூறி கிளை அஞ்சலகத்தை வள்ளியூர் தலைமை அஞ்சல கத்துடன் இணைத்துவிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு வள்ளியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து பஸ் நிலையத்தின் அருகில் கிளை அஞ்சல் நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராதாபுரம் வட்டார செயலாளர் சேது ராமலிங்கம் பாளையங்கோட்டை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் பஸ் நிலையத்தில் கடந்த 50 ஆண்டுகளாக கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது பஸ் நிலையம் விரி வாக்கம் பணியை யொட்டி கிளை அஞ்சல் நிலையம் மூடப்பட்டு செயல்பட வில்லை. இதனால் இப்பகுதி யைச் சேர்ந்த நூற்றுக்கும்மேற்பட்ட பொது மக்கள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் பாதிக்க ப்பட்டுள்ளனர். எனவே வள்ளியூர் பஸ் நிலையம் அருகிலேயே மாற்று இடத்தில் கிளை அஞ்சல் நிலையம் அமைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடலூர்:
புயல், மழையால் பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட செயலாளர் ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் கல்யாண சுந்தரம், காசிநாதன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். 4 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலபரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளனர். உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து விரட்டிய நிலையில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அரசின் அனுமதியை பெற்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆதரவளித்து அமைதியாக உள்ளனர். உயிரே போனாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம். அதன் ஒரு கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #indiacommunistparty #hydrocarbonproject
பெண்ணாடம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில் வேலை செய்த பயனாளிகளுக்கு அரசு அறிவித்த 223 ரூபாய் வழங்க வேண்டும், குடிநீர், தெரு மின்விளக்கு, தொகுப்பு வீடுகளின் பராமரிப்பு பணிகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும், ஒன்றியம் முழுவதும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திட்டக்குடி தாலுகா அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காசிநாதன், ரஜினி, கோவிந்தன், அம்பிகா, பழனிவேல், கருப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் கலியமூர்த்தி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்