என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian player"

    • இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர்.
    • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில் இந்திய அணி ஹோலி பண்டிகையை கொண்டாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்திய அணி வீரர்கள் தங்களது டீம் பஸ்ஸில் ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளைப் பூசி ஹோலியை கொண்டாடினர். இதுதொடர்பான வீடியோவை சுப்மன் கில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவும் வைரலாக பரவியது.

    அதில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கில், உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஆகியோர் முகத்தில் வண்ணம் பூசி இருந்தது. பின்னணியில் ராங் பார்சே பாடல் ஒலிக்க, அனைத்து வீரர்களும் ஜாலி மனநிலையில் இருந்தனர்.

    • மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.
    • போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    சிட்னி:

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 13-21 என்ற நேர்செட்டில் 6-ம் நிலை வீரரான கோடை நரோகாவிடம் (ஜப்பான்) தோற்று நடையை கட்டினார். மற்றொரு இந்திய வீரர் சமீர் வர்மா 12-21, 13-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் லின் சுன்யிடம் அடங்கினார்.

    பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 12-21 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் யு போ பாயிடம் தோல்வி கண்டார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமீத் ரெட்டி-சிக்கி ரெட்டி இணை 12-21, 14-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜியான் ஜென் பாங்-வெய் யாஜின் ஜோடியிடம் பணிந்தது. அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

    • பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட்டின் அணியின் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஷலகா மேகேஷ்வார் ஆகியோர் ஆகஸ்டு 8-ந் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    30 வயதான ஜிதேஷ் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்களை பதிவிட்டு இதனை தெரிவித்தார். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

    இந்த நிகழ்வுக்காக பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் காய்க்வாட், மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

    ஷலகா மேகேஷ்வார் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தவர் மற்றும் நாக்பூரில் Advent Software Pvt. Ltd-ல் Software Engineer-ஆக பணியாற்றுகிறார்.

    ஜிதேஷ் ஷர்மா இந்தியா சார்பாக 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆனால் சமீபத்திய ஐபிஎல் சீசனில் பெரிதாக ரன் எடுக்கவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பை 2024 அணியில் இடம் பெற முடியவில்லை.

    • 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் வெற்றி பெற்றார்
    • காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    டாடா ஸ்டீல் செஸ் இந்தியா திருவிழா 2024 நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 7/7 என்ற புள்ளிகளுடன் ஆல் இந்தியா ராபிட் ஈவண்ட் (Event B) இல் இளம் வீராங்கனை பிரிஸ்டி முகர்ஜி வெற்றி பெற்றார்.

    உலகின் நம்பர் 1 செஸ் ஜாம்பவான் நார்வே நாட்டு வீரர் மாக்னஸ் கார்ல்சன், பிரிஸ்டி முகர்ஜியிடம் டிராபியை கொடுக்கும் சமயத்தில் பிரிஸ்டி அவரது காலைத் தொட்டுக் கும்பிட்ட சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரஸ்டியின் செயலை கவனித்த கார்ல்சன் முகத்திலும் புன்னகை அரும்பியது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டாடா ஸ்டீல் செஸ் இந்தியா நிகழ்வானது மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள தன்யோ ஆடிட்டோரியத்தில் வைத்து நவம்பர் 13 தொடங்கி நேற்று நவம்பர் 17 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    ×