search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian soldiers"

    • மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.
    • நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரதமர் மோடியின் 'மங்கள்சூத்ரா' கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:-

    புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

    வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த 10 வருடங்களாக நம்மை மறக்கடிக்க பல விசித்திரமான பிரச்சினைகளை கொண்டு வருகிறார்கள்.

    இது அரசியல் சாசனத்தைக் காப்பாற்றும் போராட்டம் என்பதால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலில் கவனமாகப் போராட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
    • இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.

    இந்நிலையில், 74-வது குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையையொட்டி பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

    பஞ்சாப் மாநில எல்லையான வாகாவிலும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.

    • அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
    • இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் தேசிய கொடியை இறக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரு நாட்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இந்த எல்லைப் பகுதியில் இரு நாடுகளின் படைகளும் அவரவர் நாட்டு தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த தேசியக் கொடியை மாலை இறக்கும் நிகழ்வு உலக அளவில் மிகவும் பிரபலமானதாகும்.

    இந்நிலையில், 75-வது சுதந்திர தினத்தன்று இந்திய வீரர்கள் மிடுக்குடன் வீறுநடை போட்டு தேசிய கொடியை இறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. வாகா எல்லையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து தேசியக்கொடி இறக்கும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீறுநடை போட்டுச்சென்றனர். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர். ஜெய்ஹிந்த் என்ற முழக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு மக்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

    முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI
    புதுடெல்லி:

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள முதல் உலகப் போர் தியாகிகள் நினைவு சின்னத்தில் ராணுவ உயரதிகாரிகளும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில், முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

    முதல் உலகப் போரில் இந்தியாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் இதில் நமது வீரர்களும் பங்கேற்று போரிட்டனர்.

    இந்த அதிபயங்கரமான போர் முடிவடைந்த நூற்றாண்டு நினைவுநாளை அனுசரிக்கும் இந்நாளில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதிப் பாதையில் செல்வதன் மூலம் மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகளும், பேரழிவும் ஏற்படாத சூழலை உருவாக்கும் நமது நிலைப்பாட்டில் என்றென்றும் உறுதியாக நிற்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI

    ×