என் மலர்
நீங்கள் தேடியது "indigestion"
- உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் ஏற்படுகிறது.
- ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் பிரச்சனை கண்டிப்பாக இருக்கும்.
மலஜலம் கழிக்கும் வயிற்று உறுப்புகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நரம்புகளின் தூண்டுதலால் இந்த பிரச்சினை உங்களுக்கு ஏற்படுகிறது.
மலக்குடலில் ஒன்றும் இல்லாதபோதும் கூட, மலக்குடலிலுள்ள நரம்புகளை தொந்தரவு பண்ண ஆரம்பிக்கும். உடனே நரம்புகள் மூளைக்கு செய்தியை அனுப்பி மலக்குடலில் உள்ள தசைகளை சுருங்கி விரியச் செய்து மலத்தை வெளியேற்று என்று தெரிவிக்கிறது.

இதனால் தான் இந்த வயித்தைக் கலக்குவது, உடனே பாத்ரூம் ஓடுவது எல்லாமே. இது வயிற்றில் உணவுப் பாதையில் ஏதாவதொரு நாள்பட்ட நோயினால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இது குணப்படுத்தக் கூடிய நோய்தான்.
மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவீதம் பேருக்கு பெருங்குடலின் கடைசி பாகத்திலும், ஆசனவாய்ப் பகுதியிலும் நோய் இருந்தால் மேலே கூறிய பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். அதீத அமிலச் சுரப்பு இந்த பிரச்சனையை உண்டாக்கும் என்பது மிகமிகக் குறைவே.
மருந்துகளின் பக்கவிளைவுகள், செரிமானப் பிரச்சனைகள், உணவு ஒத்துக்கொள்ளாமல் போகுதல், உணவுக் குடலில் நோய்கள், உணவுப் பழக்க வழக்க மாற்றங்கள், உடலில் இருக்கும் மற்ற நோய்களினால் ஏற்படும் மன அழுத்தம், திடீரென்று ஒரு குறிப்பிட்ட உணவை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அதிக கொழுப்பு நிறைந்த உணவைத் தொடர்ந்து பல நாட்கள் உண்ணுதல், அதிக காரம், அதிக மசாலா நிறைந்த உணவுகளை அடிக்கடி உண்ணுதல், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாமல் போகுதல், ஹைப்பர் தைராயிடிசம் பிரச்சனை உள்ளவர்கள், நாள்பட்ட சர்க்கரை வியாதி உள்ளவர்கள், பெருங்குடல் நோய்கள், மலக்குடலில் கட்டி, திசு வளர்ச்சி, திசு திரட்சி, மூலம், ஆசன வாயிலுள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம், மலக்குடல் புற்றுநோய் இன்னும் பல பெருங்குடல் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு நோய்களினால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனையால் மன இறுக்கம், கவலை, பதற்றம், எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை முதலியவைகளை உண்டாக்கும்.
வேளாவேளைக்கு சாப்பிடுதல், வெளியில் சாப்பிடுவதை அறவே தவிர்த்தல், அதிக காரம் மசாலா உள்ள உணவுகளை தவிர்த்தல், உணவில் அளவுக்கட்டுப்பாடு, உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடுதல், மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், அதிக அளவில் தண்ணீர் அருந்துதல், பதற்றம், டென்ஷன், கவலை இல்லாமலிருத்தல் போன்றவைகளை கடைப்பிடித்தால் பாத்ரூமுக்கு அவசர அவசரமாக ஓடும் பிரச்சனை இல்லாமல் வாழலாம்.
பிரச்சனைக்கு மூல காரணம் என்ன என்பதை உணவு மண்டல சிகிச்சை நிபுணரை (கேஸ்ட்ரோ என்டராலஜிஸ்ட்) உடனடியாக சந்தித்து சிகிச்சை பெறுவது சிறந்தது.
- மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
- செரிமான அமைப்பு வழியாகத்தான் நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது.
மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். பல உணவுகளில் இருந்து இந்த நார்சத்துக்களை நம்மால் பெற முடியும். ஆனால் நமது உடலால் இந்த நார்ச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சவோ அல்லது ஜீரணிக்கவோ முடியாது. செரிமான அமைப்பு வழியாகத்தான் இந்த நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது. குடல் இயக்கங்களுக்கு ஏற்றதாக நார்ச்சத்து பார்க்கப்பட்டாலும், அதிகப்படியாக இதை எடுத்துக்கொள்வதால் நமக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும். எனவே இத்தகைய நார்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சினைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டால், நீரில் கரையக்கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் என இரு வகைகள் உள்ளது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நீரில் கரையாத நார்சத்துக்கள் முறையாக உணவுடன் செரிக்கப்படுவதில்லை. இவை நேரடியாக இரைப்பை குடல் வழியாக பயணித்து மலத்தில் கலக்கிறது. இவை மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
நீங்கள் நார்ச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், பருப்பு வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள், விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நார் சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால், சில எதிர்மறை பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உட்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் இவை துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சில தாது வகைகளை உறிஞ்சுவதில் சிக்கலை உண்டாக்கலாம். எனவே இவை இரைப்பை குழாயில் சேதத்தை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளை உறிஞ்சுவதில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். சில மருந்துகளின் செயல் திறனையும் இது பாதிப்பதாக சொல்லப்படுகிறது.
அதிகப்படியான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அதிகப் படியான தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை எடுப்பதை தவிருங்கள். நடைப்பயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறிப்பாக மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
- உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.
- குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது.
உங்களுக்கு ஜவ்வரிசி எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? நம்முள் பலருக்கு அதை எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்பதே தெரியாது. மரவள்ளிக் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் மாவில் இருந்துதான் ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறது.
இதை சபுதானா, சாகோ என்றும் அழைக்கிறார்கள். முற்றிலும் ஸ்டார்சால் நிறைந்துள்ள சவ்ரிசியில் ரசாயனங்கள், செயற்கை இனிப்புகள் போன்ற எதுவும் இல்லாததால் பரவலாக அனைவரும் இதை விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவை தாராளமாக அளிக்கலாம். ஏனென்றால் ஜவ்வரிசி உடனடி ஆற்றலையும் செரிமான சக்தியையும் ஒருவருக்குக் கொடுக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சிப்படுத்துவதிலும் இது பங்குவகிக்கிறது.
உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது. எனவே ஒருவர் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், ஜவ்வரிசி சிறந்த உணவாக இருக்கும். இதில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்கள் வழியே ரத்த ஓட்டம் சீராக பாய வழிவகுப்பதால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கான சிரமத்தை குறைக்கிறது.
தசை வளர்ச்சிக்கு தேவையான சிறந்த மூலமாக ஜவ்வரிசி திகழ்கிறது. இது உடலில் சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்களை குணப்படுத்த உதவி, மற்ற செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இது உதவுகிறது.
இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து மூட்டு வலி அபாயத்தை குறைக்கிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால் அவர்களின் எலும்பு பலப்படுகிறது. இதில் எளிய சக்கரை மற்றும் மாவுச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிடுவதற்கான சிறந்த உணவாக ஜவ்வரிசியை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் அதிக ஆற்றல் இருப்பதால் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றை தடுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கப் ஜவ்வரிசியில் 540 கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் 152 மில்லிகிராம் மெக்னீசியம், 87 கிராம் கார்போஹைட்ரேட், 135 கிராம் மாவுச்சத்து, 30 மில்லி கிராம் கால்சியம், 16 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதை தவிர புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் சிறிதளவு உள்ளது.
- இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் இருக்கும்.
- தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.
திரிகோணாசனம் என்பது ஆங்கிலத்தில் triangle pose என்று அழைப்பார்கள். இடுப்பை வளைத்து முக்கோண நிலையில் உடல் இருக்கும்படி செய்யும் இந்த ஆசனம் ஜீரணத்தை மேம்படுத்தவும், தொப்பையை குறைக்கவும், இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதற்கும் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு கொடுக்கிறது.
உடல் தசைகளை நன்கு நீட்டி மடக்கும் இலகுவான தன்மையையும் உடலுக்கு நல்ல நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும். குறிப்பாக தோள்பட்டை, கைகள், கால் ஆகியவற்றுக்கு வலிமையையும் நெகிழ்வுத் தன்மையையும் கொடுக்கும்.
ஜீரணக்கோளாறுகள் தான் உடலில் நிறைய பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அவற்றை சரிசெய்யவும் ஜீரண ஆற்றலை மேம்படுத்தவும் திரிகோணாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கை, கால், இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றை வளைத்து நீட்டி செய்கின்ற இந்த ஆசனம் அடிவயிற்று பகுதி மற்றும் ஜீரண மண்டலத்தை தூண்டும் வேலையை செய்கிறது.
முக்கோணம் போன்ற நிலையில் இருக்கும் இந்த திரிகோணாசத்தை செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் இருக்கும் அடைப்பு போன்றவை நீங்கும். ஆழமாக சுவாசிக்க உதவி செய்யும்.
நன்கு மூச்சை இழுத்து அதிகமான ஆக்சிஜன் அளவைப் பெற முடியும். இதனால் நுரையீரலுக்கும் அதிக அழுத்தம் ஏற்படாமல் அதன் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். ஆஸ்துமா, வீசிங் போன்ற சுவாச மண்டல பிரச்சினை இருப்பவர்கள் இந்த திரிகோணாசனத்தை செய்து வருவது நல்லது.
முதுகு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த திரிகோணாசனம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். இந்த ஆசனம் செய்யும்போது மார்பு பகுதி விரிவடைந்து மூச்சு விடுவது மிக எளிதாக இருக்கும். ஆழமாக மூச்சை இழுத்து விட முடியும். இதனால் மார்பு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் அழுத்தம் குறைந்து இடுப்பு மற்றும் முதுகுவலி குறைய ஆரம்பிக்கும்.
இந்த திரிகோணாசனம் செய்யும் போது உடல், மனம் இரண்டுமே ரிலாக்சாக இருக்கும். இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கச் செய்யும். இதனால் மன அழுத்தம், பதட்டம், டென்ஷன், மனச்சோர்வு ஆகியவை குறையும்.
சிலருக்கு இடுப்பை வளைத்து செய்யும் எந்தவித வேலைகளும் செய்யவே முடியாது. ஏனெனில் இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். இந்த இறுக்கத்தை குறைத்து இடுப்பு தசைகளை நெகிழ்வுத் தன்மையோடும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.
திரிகோணாசனம் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் வலிமை அடையும். அதோடு இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும். குறிப்பாக இடுப்பு தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கச் செய்து தொப்பையை குறைக்க உதவி செய்கிறது.
- உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது.
- உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.
நாம் உண்ணும் உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் `ஹைட்ரோகுளோரிக் அமிலம்' எனப்படும் வலுவான அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்கிறது.
ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது. இந்த அமிலம், சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிதைத்து செரிமானத்திற்கு ஏற்றவாறு எளிய மற்றும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இறுதியில் அவை குடல் சுவர்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது.
மேலும் உணவின் மூலம் செரிமான அமைப்பில் நுழையக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது. இதனால் உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது. வயிற்றில் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும்.
காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவை மிகுதியாக சாப்பிடும்போது அதிகப்படியான அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறுகிறது. இவை உணவு குழாய் வரை சென்று, இரைப்பை மற்றும் குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் வயிறு சுவர்களில் புண்கள் ஏற்படுவதோடு, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். வயிற்றில் அமில அளவு போதுமானதாக இல்லாவிட்டால், செரிமானம் பலவீனமடையலாம். இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு உடலுக்கு கிடைக்காது. அஜீரணம் மற்றும் பாக்டீரியா பெருக்கம் கூட அமில அளவு போதுமான அளவு இல்லாததினால் உருவாகிறது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், பி.எச் அளவு 1.5- 2.0 கொண்ட மிகவும் வலிமையான அமிலம். ஒரு சிறிய இரும்புத்தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.
- உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நம்முடைய செல்களுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் செயல்பாட்டிற்குப் பெயர் தான் மெட்டபாலிசம். இந்த வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தால் தான் உடலின் ஜீரண உறுப்புகள் சரியாகி இயங்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது முதல் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என பல்வேறு வேலைகளை உடலால் சரியாக செய்ய முடியும்.
மெட்டபாலிசம் அதிகரிக்கும் பானம்
தேவையான பொருள்கள்
இஞ்சி - ஒரு துண்டு
சீரகப் பொடி - கால் ஸ்பூன் (வறுத்து அரைத்தது),
எலுமிச்சை பழம் - பாதி அளவு
கல் உப்பு - சிறிதளவு
செய்முறை
இஞ்சியை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு, அதன் மேல் தோலை சீவி எடுத்து விடுங்கள். பின்பு அதை துருவிக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் துருவிய இஞ்சி, சீரகப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.
இந்த கலந்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுபடபான நீரில் கலந்தால் பானம் தயார்.
பயன்படுத்தும் முறை
இந்த பானத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன கலவையை ஒரு வாரத்திற்கு ஏற்றபடி தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது வெந்நீரில் கலந்து குடித்துக் கொள்ளலாம்.
பயன்கள்
* இந்த பானத்தை தினமும் குடிப்பதால் ஜீரண ஆற்றல் மேம்படும்.
* அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.
* உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.
* உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.
* உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
- அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு.
- வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம்.
பெருங்காய பொடியை கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் அதன் வாசனை வலுவாக இருப்பதை பார்க்கலாம். பெருங்காயத்தூள் என்று வாங்கும் சில தயாரிப்புகள் கலப்படமாக இருக்கலாம். நறுமணம் குறைந்து இருக்கலாம். வீட்டில் பெருங்காயத்தூள் தயாரித்து பயன்படுத்தும் போது அதன் நறுமணம் நன்றாக இருக்கும்.
கலப்படமில்லாத ஆரோக்கியமான தயாரிப்பை வீட்டிலேயே செய்ய முடியும் என்னும் போது செய்முறையை கற்றுகொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெருங்காய பொடியை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கட்டி பெருங்காயம் - 100 கிராம் ( நாட்டு மருந்துகடை அல்லது மளிகை கடைகளில் கிடைக்கும்)
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
பாக்கெட்டில் வாங்க கூடிய இந்த கட்டி பெருங்காயம் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருக்கும். இதை பிரிப்பது கடினமாக இருக்கும். மென்மையாக இருந்தால் சிறு சிறு பகுதியாக பிரித்து வையுங்கள். கடினமாக இருந்தால் உரலில் இட்டு துண்டுகளாக இடித்துக் கொள்ளுங்கள்.
இரும்பு வாணலில் மிதமான தீயில் இதை வைத்து லேசாக வறுத்து பெருங்காயம் பொரிந்து நிறம் மாறும். லேசான மஞ்சள் நிறமாக, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் (நன்றாக பொரிய வேண்டும்) வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பெருங்காயத்தை கட்டியாக அப்படியே வாணலியில் சேர்த்தும் சூடு செய்யலாம். பிறகு இறக்கி அதை துண்டுகளாக பிரிக்கலாம். நன்றாக பொரிந்த காயத்துண்டுகளை இப்போது இறக்கி ஆறவையுங்கள். வாணலியில் உப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
பிறகு இந்த பெருங்காயத் துண்டுகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன்பிறகு மிக்சியில் நைசாக அரைத்து பொடியாக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
பெருங்காயத்தின் பயன்கள்:
மசாலாக்கள் நிறைந்த உணவுகள் அனைத்திலும் பெருங்காயம் சிட்டிகை சேர்ப்பது மணத்தை அதிகரிக்க செய்யும். பெருங்காயம் கடவுளின் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இவை உணவை அமிர்தமாக்கும் வல்லமை கொண்டவை. ஆரோக்கியம் அளிப்பவை.
அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாயுவை உண்டாக்கும் உணவுகளில் கண்டிப்பாக பெருங்காயம் சேர்க்க வேண்டும். வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழத்தை தோல் உரித்து பழத்தின் மேல் பெருங்காய பொடியை வைத்து பல்லில் படாமல் விழுங்கினால் வாயு கழியும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள். மோரில் பெருங்காயம் சேர்த்தும் குடிக்கலாம். அன்றாட உணவு முறையில் ஏதாவது ஒரு வகையில் பெருங்காயம் சேர்ப்பது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும்.
- குழந்தை பிறந்து 3 வாரங்களில் கோலிக் வலி தொடங்கும்.
- குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்
கோலிக் என்பது வயிற்றில் உண்டாகி இருக்கும் வலியினாலோ அல்லது வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அசவுகரியத்தினாலோ ஏற்படும் வலியினால் அழும் கைக்குழந்தைகளை தேற்ற முடியாமல் இருக்கும் நிலையே இந்த கோலிக் ஆகும். குழந்தை ஒவ்வொரு 3 மணிநேரத்திற்கும் மேலாகவும் ஒரு வாரத்தில் 3 நாட்களுக்கு மேலாகவும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தால் அது கோலிக் என்று கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தை கோலிக் அதாவது பெருங்குடல் வலி கொண்டிருந்தால் அவர்களை எளிதில் சமாதானம் செய்ய முடியாது. இந்த கோலிக் நோய் குழந்தைகளை பாதிக்கும் போது அறிகுறிகள் எப்படி இருக்கும். இந்நிலையில் அவர்களுக்கு உடனடியாக என்ன செய்ய வேண்டும். அதற்கான வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குழந்தை பிறந்து 3 வாரங்களில் தொடங்கும் இந்த வலியானது குழந்தைக்கு 4 முதல் 6 மாதங்கள் ஆகும் போது மறைந்துவிடும். பெரும்பாலும் வாயு அல்லது அஜீரணம் போன்றவை பொதுவான தூண்டுதலாக இருந்தாலும் இதற்கு சரியான காரணம் தெரியவில்லை.
அறிகுறிகள்:
* குழந்தை நாள் ஒன்றுக்கு 3 மணிநேரம் அழுதல்
* வாரத்தில் குறைந்தது 3 நாட்களுக்கு அழுதல்
* தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு இருந்தால் இது கோலிக் நோய் தான்.
இந்தநிலையில் குழந்தைகள் முதுகை வளைத்து, முஷ்டிகளை இறுக்கி, வயிற்று தசைகளை இறுக்கி, அழும் போது தங்கள் கைகளையும் முழங்கால்களையும் வயிற்றை நோக்கி வளைப்பார்கள். இந்த அறிகுறிகளை கண்டால் அதற்கு காரணம் இந்த பெருங்குடல் வலியாக இருக்கலாம்.
கோலிக் வலியால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழக்கமான எண்ணெய் மசாஜ்கள் பல நன்மைகளை செய்யும். மசாஜ் செய்வதன் மூலம் குழந்தையை சூடாக வைத்திருக்க முடியும். இதன் மூலம் செரிமானத்தை உறுதி செய்யவும் செய்கிறது. வாயுவை தடுக்கவும் செய்கிறது. மசாஜ் செய்வதன் மூலம் குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு நன்றாக தூங்குவார்கள். குழந்தையின் கோலிக் வலி குறைய மசாஜ் சிகிச்சையின் போது தேங்காய் எண்ணெய் போதுமானது.
எப்படி செய்வது
ஆலிவ் எண்ணெய் சில துளிகள் சேர்த்து அதில் சில துளி லாவெண்டர் எண்ணெய் கலந்து குழந்தையின் வயிற்றை கடிகார திசையில் வட்ட இயக்கத்தில் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குழந்தையின் விலா எலும்பு, இடுப்பு, கைகள் மற்றும் கால்களை சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு பல முறை இதை செய்ய வேண்டும்.
குழந்தையை மல்லாக்க படுக்க வைக்க வேண்டும். குழந்தையின் கால்களை எடுத்து அவர்களது அடிவயிற்றில் மென்மையாக வையுங்கள். கால்களை சைக்கிள் சுழற்சி போன்று கால்களை சுழற்றலாம். ஒரே நேரத்தில் இரண்டு கால்களையும் அல்லது ஒவ்வொரு காலையும் மாறி மாறி செய்யலாம். மென்மையாக இதை செய்ய வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் வாயு தேங்கியிருந்தால் இதன் மூலம் வெளியேற உதவும்.
கைக்குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு குழந்தையை தூக்கி மார்பில் படுக்க வைத்து முதுகுப்பகுதியை மெதுவாக தட்டி கொடுங்கள். இதன் மூலம் குழந்தை ஏப்பம் வெளியேற செய்யும். குழந்தை பாலை வெளியேற்றாது.
தாய்ப்பால் கொடுக்க கூடிய கைக்குழந்தைகளுக்கு இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் அவர்கள் பெருங்குடல் வலி அதாவது கோலிக் நோயில் இருந்து வேகமாக விடுபட முடியும்.
- 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது.
- தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது.
நாம் உண்ணும் உணவை இரைப்பையில் செரித்து ஆற்றலாக மாற்றுவதற்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் உதவுகிறது. நாம் சாப்பிட ஆரம்பித்தவுடன் `ஹைட்ரோகுளோரிக் அமிலம்' எனப்படும் வலுவான அமிலத்தை இரைப்பை உற்பத்தி செய்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 2 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கப்படுகிறது.
இந்த அமிலம், சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிதைத்து செரிமானத்திற்கு ஏற்றவாறு எளிய மற்றும் சிறிய மூலக்கூறுகளாக மாற்றுகிறது. இறுதியில் அவை குடல் சுவர்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. மேலும் உணவின் மூலம் செரிமான அமைப்பில் நுழையக்கூடிய தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை செயலிழக்க செய்ய உதவுகிறது. இதனால் உடலுக்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படுகிறது.
வயிற்றில் அமிலத்தின் அளவு சரியாக இருக்க வேண்டும். காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவை மிகுதியாக சாப்பிடும்போது அதிகப்படியான அமிலம் வயிற்றில் இருந்து வெளியேறுகிறது. இவை உணவு குழாய் வரை சென்று, இரைப்பை மற்றும் குடல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
மேலும் வயிறு சுவர்களில் புண்கள் ஏற்படுவதோடு, நெஞ்செரிச்சலையும் உண்டாக்கும். வயிற்றில் அமில அளவு போதுமானதாக இல்லாவிட்டால், செரிமானம் பலவீனமடையலாம். இதனால் உணவின் ஊட்டச்சத்துக்கள் தேவையான அளவு உடலுக்கு கிடைக்காது. அஜீரணம் மற்றும் பாக்டீரியா பெருக்கம் கூட அமில அளவு போதுமான அளவு இல்லாததினால் உருவாகிறது.
ஹைட்ரோகுளோரிக் அமிலம், பி.எச் அளவு 1.5- 2.0 கொண்ட மிகவும் வலிமையான அமிலம். ஒரு சிறிய இரும்புத்தகடை கூட 24 மணி நேரத்திற்குள் கரைக்கும் சக்தியை கொண்டுள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்
- அஜூரணக்கோளாறு சரியாகும்.
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்
சீரகம்- ஒரு ஸ்பூன்
கடலைபருப்பு- 3 ஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து
வரமிளகாய் – ஆறு
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – இரண்டு இன்ச்
எண்ணெய் – இரண்டு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க: நல்லெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சை சுண்டைக்காய்களை இரண்டாக வெட்டி நன்றாக தண்ணீரில் கழுவி எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு வாணலியை வைத்து இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பச்சை சுண்டைக்காயை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன்பிறகு மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கருவேப்பிலை, புளி, ரெண்டு இன்ச் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். அப்போது தான் இஞ்சியின் காரம் அதிகமாக இருக்காது. இஞ்சி சுருள வதங்கியதும் வரமிளகாய்களை காம்பு நீக்கி இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வறுக்க வேண்டும். இவற்றை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அதே எண்ணெயில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பச்சை சுண்டைகாய்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். வதக்கும் பொழுது நிறம் மாற ஆரம்பிக்கும். பச்சை நிறமாக இருந்து, வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். அதுவரை நன்கு வதக்குங்கள். அப்போது தான் சுண்டைக்காயின் கசப்பு தெரியாது.
பின்னர் ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய சுண்டைக்காய், தேவையான அளவிற்கு உப்பு ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தப்பருப்பு சேர்த்து சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.
இதனை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி இந்த சுண்டைக்காய் துவையலை சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும், அஜூரணக்கோளாறு சரியாகும். வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.
- சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
- அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.
சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்ட செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.
உணவுக்குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்த கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.
நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலமானது, இந்த எல்லைக்கோட்டை கடந்து, உணவுக்குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும்.
இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.
மாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும். அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை. சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து படுக்கச் செல்ல வேண்டும். உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக்கூடாது, கனமான பொருளைத் தூக்கக் கூடாது, உடற்பயிற்சி செய்யக் கூடாது, படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதைத் தடுக்கத்தான்.
வலது பக்கமாகப் படுக்கும்போது உணவு நிரம்பிய இரைப்பை கல்லீரலை அழுத்தும். இடது பக்கமாகப் படுக்கும்போது கல்லீரலுக்கு அந்த அழுத்தம் இல்லை என்பதால், உணவுச் செரிமான நீர் சரியாக சுரந்து செரிமானத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கும். இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டுவதால், உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ரத்தம் சீக்கிரம் சுத்தமாகிறது.
வழக்கமான ரத்த சுற்றோட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது. ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இது இதயத்துக்கும் நல்லது. சிலருக்கு வலது பக்கமாகப் படுக்கும்போது நாக்கும், தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, அந்த தசைகளை சமநிலையில் வைத்துக்கொள்ளும். இதனால் குறட்டை ஏற்படுவதில்லை.
- செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
- வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

தக்காளி
ஆரஞ்சு பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பலரும் அதனை விரும்பி ருசிக்கிறார்கள். அதில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தவை. ஆனால் சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு பழத்துடன் ஒருபோதும் சேர்த்து உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து பார்ப்போம்.
தக்காளி, ஆரஞ்சு ஆகியவற்றில் வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும் கூட இவை இரண்டுமே அசிடிக் உணவுப்பொருட்களாக கருதப்படுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும். செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

தயிர்
பாலை போலவே, ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தை ஆரஞ்சுப்பழத்துடன் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

காரமான உணவுகள்
ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் காரமான உணவுகள் சேர்வது செரிமான கோளாறுக்கு வழிவகுத்துவிடும். வயிற்றுப் புண் போன்ற வலி பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும்.
கொழுப்பு உணவுகள்
அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும்போது அதன் அமிலத்தன்மை கொழுப்புடன் வினைபுரிந்து அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.
பாலாடைக்கட்டி
பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சு பழத்தை ருசிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். அஜீரணத்தை தூண்டும்.

காபி
ஆரஞ்சு பழத்துடன் காபி அல்லது பிளாக் டீ உட்கொள்வது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

பானங்கள்
ஆரஞ்சுப் பழத்துடன் கார்பனேற்றப்பட்ட பானங்களை நுகர்வது வயிறு உப்புசம், அசவுகரியம் உள்பட பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க வைத்துவிடும்.

மது
ஆரஞ்சு பழத்துடன் மது பானங்கள் கலப்பது வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற் படுத்தலாம். ஒவ்வாமைக்கும் வழிவகுக்கலாம்.

பால்
சிட்ரஸ் பழங்கள், அவற்றின் பழச்சாறுகளுடன் பால் சார்ந்த பொருட்களைச் சேர்ப்பது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை பாலில் உள்ள புரதங்களுடன் வினை புரிந்து வயிற்று கோளாறு அல்லது வயிறு உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும். செரிமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.