என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Industrial"
- உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது.
எண்ணூர் கடலில் எண்ணெய் கழிவு கலந்த விவகாரம் முடியாத நிலையில் உரத்தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமோனியா வாயுவை சுவாசித்த எண்ணூரை சுற்றி உள்ள 10 மீனவ கிராமமக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த உடன் நிர்வாகத்தினர் அபாய ஒலி எழுப்பி சுற்றி உள்ளகிராமக்ககளை எச்சரிக்கை செய்யாதது ஏன்? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் வாயு கசிந்தஉடன் அருகில் உள்ள பொதுமக்களை வாகனங்கள் மூலம் வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று இருக்கலாம் எனவும், நிலைமையின் வீரியத்தை தெரிவித்து இருக்கலாம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அமோனியா வாயுவால் மயக்கம் அடைந்த பின்னரே இதுபற்றி வெளியே தெரியவந்தது. மக்களின் உயிரோடு தொழிற்சாலை நிறுவனங்கள் விளையாடக்கூடாது என்று பொதுமக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
- நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
- நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும்.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலை யில் கடந்த ஆண்டில் அடிக்கடி நூல் விலை உயர்ந்து வந்தது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் 20 ரூபாய் நூல் விலை குறைந்த நிலையில் பிப்ரவரி மாதத்தில் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஜனவரி மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்திற்கான நூல் விலையிலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. இதேபோல் ஏப்ரல், மே மாதத்திலும் நூல் விலையில் மாற்றம் இல்லாமல் நீடித்தது. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான(ஜூன்) நூல் விலை ஆனது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த மாதத்தை போலவே அதே நிலை தொடரும் என நூற்பாலைகள் தெரிவித்துள்ளனர். இதன்படி தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ 10-வது நம்பர் கோம்டு நூல் ரூ.185-க்கும், 16-ம் நம்பர் ரூ.195-க்கும், 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவதாக தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- அமுதபெருவிழா கொண்டாடப்பட்ட விவரங்களை மாவட்ட வாரியாக புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு தேசிய கொடி வழங்க வேண்டும் என தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் எஸ்.ஜெ.சரவணன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின அமுதப்பெருவிழா
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
சுதந்திர தின அமுதப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் நாளை (திங்கட்கிழமை) வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி என்ற இயக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.
அதில் அனைத்து தொழிற்சாலைகளிலும் நிர்வாகத்தினர் கொடியேற்றுவது மட்டுமின்றி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடுகளிலும் கொடியேற்ற ஏதுவதாக தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேசிய கொடி வழங்க வேண்டும்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை நிர்வாகிகளும் தங்களது தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசிய கொடிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் தொழிற்சாலை நிறுவனங்கள் சுதந்திர தின அமுதபெருவிழா கொண்டாடப்பட்ட விவரங்களை மாவட்ட வாரியாக புகைப்படத்துடன் கூடிய அறிக்கையை தூத்துக்குடி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்