என் மலர்
நீங்கள் தேடியது "INDvsWI"
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
- ஷிம்ரன் ஹெட்மயர் அரைசதம் கடந்து அசத்தினார்.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான நான்காவது டி20 போட்டி ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய கைல் மேயர்ஸ் மற்றும் பிரான்டன் கிங் முறையே 7 பந்துகளில் 17 ரன்களையும், 16 பந்துகளில் 18 ரன்களையும் அடித்தனர். அடுத்து வந்த ஷாய் ஹோப் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 29 பந்துகளில் இரண்டு சிக்சர், மூன்று பவுன்டரிகளுடன் 45 ரன்களை குவித்து சாஹல் பந்தில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோவ்மேன் பொவெல் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினர். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். இவர் 39 பந்துகளில் 61 ரன்களை குவித்து அவுட் ஆனார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்களை குவித்துள்ளது.
இந்திய சார்பில் அர்தீப் சிங் மூன்று விக்கெட்களையும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். யுஸ்வேந்திர சாஹல், அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
முதலில் விளையாடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. 3 வீரர்கள் சதம் அடித்தனர். புதுமுக வீரர் பிரித்விஷா 134 ரன்னும், கேப்டன் வீராட் கோலி 139 ரன்னும், ஜடேஜா 100 ரன்னும் எடுத்தனர். ரிஷப்பன்ட் (92 ரன்), புஜாரா (86) ஆகியோர் சதத்தை தவற விட்டனர்.
தேவேந்திர பிஷூ 4 விக்கெட்டும், லீவிஸ் 2 விக்கெட்டும், கேப்ரியல், பிராத்வெயிட், ரோஸ்டன் சேஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் விக்கெட்டுகளை இழந்து திணறியது. நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்து இருந்தது.
ரோஸ்டன் சேஸ் 27 ரன்னும், கீமோ பவுல் 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 48.2 ஓவர்களில் 181 ரன்னில் சுருண்டது. இதனால் அந்த அணி ‘பாலோஆன்’ ஆனது.
அஸ்வின் 37 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 2 விக்கெட்டும், உமேஷ்யாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
468 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட்இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. #INDvWI
இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் அறிமுக வீரர் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே ராகுல் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தலும், புஜாரா - ஷா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அறிமுக வீரர் பிரித்வி ஷா சதத்தில் உதவியால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா வலுவான நிலையில் இருந்தது. முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.
கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் , விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 2-வது நாள் ஆட்டம் துவங்கியதும், விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் மறுமுனையில் அதிரடியாக விளையாடினார்.
தொடர்ந்து விளையாடிய விராட் கோலி, டெஸ்ட் போடிகளில் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடிப்பார் என்று எதிரப்பார்க்கப்பட்ட பண்ட் 92 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. விராட் கோலி 120 ரன்களுடனும், ஜடேஜா 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #INDvsWI #ViratKohli
ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய டெஸ்ட் அணியின் 293 வது வீரராக அறிமுகமாகியுள்ள பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் கப்ரியல் வீசிய முதல் ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் டக் அவுட் ஆகி கே.எல்.ராகுல் அதிர்ச்சியளித்தார்.
பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் பிரித்வி ஷா ஜோடி மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.
அறிமுகப்போட்டி என்ற பதற்றமே இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் அறிமுகப்போட்டில் சதமடித்த 15-வது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 86 ரன்கள் அடித்திருந்த நிலையில் லீவிஸ் வீசிய பந்தில் விக்கெட்கீப்பர் டோவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு புஜாரா-ஷா ஜோடி 208 ரன்கள் குவித்தது. அணியின் எண்ணிக்கை 232 ஆக இருந்த போது 134 ரன்கள் அடித்திருந்த பிரித்வி ஷா பிஷோ வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும், துணை கேப்டன் ரகானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்த நிலையில் ரகானே 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து பொருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தனது 19வது அரை சதத்தை நிறைவு செய்தார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் குவித்தது. மேற்கு இந்திய தீவுகள் தரப்பில் கப்ரியல், பிஷோ, லீவிஸ் மற்றும் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
விராட் கோலி 72 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். #INDvsWI