search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராஜ்கோட் டெஸ்ட் - பிரித்வி ஷா, புஜாரா, கோலியின் அபார ஆட்டத்தால் வலுவான நிலையில் இந்தியா 364/4
    X

    ராஜ்கோட் டெஸ்ட் - பிரித்வி ஷா, புஜாரா, கோலியின் அபார ஆட்டத்தால் வலுவான நிலையில் இந்தியா 364/4

    ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. #INDvsWI
    ராஜ்கோட் :

    ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    இந்திய டெஸ்ட் அணியின் 293 வது வீரராக அறிமுகமாகியுள்ள பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் கப்ரியல் வீசிய முதல் ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் டக் அவுட் ஆகி கே.எல்.ராகுல் அதிர்ச்சியளித்தார்.

    பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் பிரித்வி ஷா ஜோடி மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர்.

    அறிமுகப்போட்டி என்ற பதற்றமே இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் அறிமுகப்போட்டில் சதமடித்த 15-வது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.



    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 86 ரன்கள் அடித்திருந்த நிலையில் லீவிஸ் வீசிய பந்தில் விக்கெட்கீப்பர் டோவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு புஜாரா-ஷா ஜோடி 208 ரன்கள் குவித்தது. அணியின் எண்ணிக்கை 232 ஆக இருந்த போது 134 ரன்கள் அடித்திருந்த பிரித்வி ஷா பிஷோ வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    அடுத்து களமிறங்கிய கேப்டன் கோலியும், துணை கேப்டன் ரகானேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் குவித்த நிலையில் ரகானே 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து பொருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் தனது 19வது அரை சதத்தை நிறைவு செய்தார். இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் குவித்தது. மேற்கு இந்திய தீவுகள் தரப்பில் கப்ரியல், பிஷோ,  லீவிஸ் மற்றும் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

    விராட் கோலி 72  ரன்களுடனும், ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். #INDvsWI
    Next Story
    ×