search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDWvNZW"

    • நியூசிலாந்துக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் மந்தனா சதம் விளாசினார்.
    • மிதாலி ராஜ் 211 போட்டிகள் விளையாடி 7 சதங்கள் அடித்துள்ளார்.

    அகமதாபாத்:

    நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகள் முடிவில் 1-1 என கணக்கில் தொடர் சமனில் இருந்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாசினார். இது அவருக்கு 8-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவுக்காக அதிக சதங்கள் விளாசிய மிதாலி ராஜ் சாதனை மந்தனா முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் மந்தனா 8 சதங்களுடன் முதல் இடத்திலும் மிதாலி ராஜ் 7 சதங்களுடன் 2-வது இடத்திலும் கவுர் 6 சதங்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    மிதாலி ராஜ் 211 போட்டிகளில் 7 சதங்கள் அடித்துள்ளார். மந்தனா வெறும் 88 போட்டிகளில் 8 சதங்கள் விளாசி அசத்தி உள்ளார்.

    • இந்திய தரப்பில் மந்தனா சதம் விளாசினார்.
    • இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

    அகமதாபாத்:

    நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 232 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக புரூக் ஹாலிடே 86 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா- சஃபாலி வர்மா களமிறங்கினர். சஃபாலி வர்மா 12 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷிகா பாட்டியா 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனையடுத்து மந்தனா- கவூர் ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை குவித்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் விளாசி அசத்தினார். அத்துடன் ஆட்டமும் இழந்தார். மறுபுறம் கவுர் தனது அரை சதத்தை பதிவு செய்தார். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    • டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து மகளிர் அணி இந்தியா வரவுள்ளது.
    • 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றனர்.

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள் ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. நேற்று நடந்த 2 ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்த டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    20-ந் தேதியுடன் உலகக் கோப்பை தொடர் முடிவடைகிறது. இதனையடுத்து அக்டோபர் 24, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும். இந்த தொடர் 2022-25 ஐசிசி மகளிர் ஒருநாள் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும்.

    சாம்பியன்ஷிப் புள்ளிகள் வரிசையில் இருப்பதால், இரு அணிகளும் முழு பலத்துடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

    • பெண்கள் ஜூனியர் உலக கோப்பையின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
    • இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது.

    கேப் டவுன்:

    19 வயதுக்கு உட்பட்ட முதலாவது மகளிர் டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷபாலி வர்மா தலையிலான இந்திய அணி கலந்து கொண்டு ஆடி வருகிறது.

    குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ருவாண்டா அணிகளும், குரூப் சி பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, யுஏஇ, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இதிலிருந்து இந்தியா, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, யுஏஇ, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    சூப்பர் 6 சுற்றின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், இரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.

    ×