என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infantry Day Celebration"

    • தேச பாதுகாப்புக்காக உயிா்த் தியாகம் செய்த காலாட்படை வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
    • போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ மையத்தில் 76-வது காலாட்படை தினம் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் தேவ்ராஜ், அன்பு, உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனர்.

    வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்டல் போா் நினைவகத்தில், தேச பாதுகாப்புக்காக உயிா்த் தியாகம் செய்த காலாட்படை வீரா்களுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு ராணுவ அதிகாரிகள் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். இதனை தொடா்ந்து குன்னூா் வெலிங்டன் ராணுவ மையம் சாா்பில் ராணுவ வீரா்கள் பயன்படுத்தும் துப்பாக்கி, சிறிய அளவு ஏவுகணை, இயந்திர துப்பாக்கிகளின் கண்காட்சி மற்றும் இவற்றை ராணுவ வீரா்கள் எவ்வாறு கையாள்கிறாா்கள் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    ×