என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "inquiry commission"
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. அந்த ஆணையம் தூத்துக்குடி மற்றும் சென்னையில் தனிஅலுவலகம் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
ஒருநபர் ஆணையம் தற்போது தூத்துக்குடியில் 4-ஆம் கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. விசாரணை நிலவரம் குறித்து ஒருநபர் கமிஷனை சேர்ந்த வக்கீல் அருள்வடிவேல்சேகர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் கமிஷன் இதுவரை 155 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. 700 பேர் வரை விசாரணைக்கு ஆஜராவார்கள் என எதிர்பார்க்கிறோம். துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிந்த பிறகே, போலீஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், பணியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், செயலாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உறவினர்கள், ஊழியர்கள் என பலர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரி பெருமாள்சாமி இன்று ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் அளித்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன.
அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் வக்கீல் மஹீடினா பாட்ஷா ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
விசாரணை ஆணையத்தில் 11 மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
ஆணையத்தில் ஆஜராகும் மருத்துவர்களின் வாக்குமூலங்கள் தவறாக பதிவு செய்யப்படுகிறது. இது ஆணையத்திற்கு எதிரானதாக உள்ளது.
மாநில அரசு கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வைத்தது.
ஆணைய வக்கீல்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிராக உள்ளது. நாங்கள் மருத்துவக்குழுவை காலதாமதமாக கேட்கவில்லை. கடந்த ஜூன் மாதமே மருத்துவ குழுவை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளோம்.
மருத்துவகுழு அமைக்கப்பட்டால் மட்டுமே அப்பல்லோ மருத்துவர்கள் அளிக்கும் தகவல்களை முறையாக பதிவு செய்ய முடியும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட முழு சிகிச்சை விவரங்களை வழங்கி உள்ளோம்.
மருத்துவம் குறித்த விவரங்கள் தெரியாமல் ஜெயலலிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர். அனைத்து மருத்துவர்களும் அவருக்கு முடிந்த அளவு சிறப்பு சிகிச்சையை வழங்கி உள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது அப்பல்லோவின் முடிவல்ல. அரசின் முடிவு.
ஆணையம் சார்பில் மருத்துவகுழு அமைக்கப்படும் வரை அப்பல்லோ மருத்துவர்கள் ஆணையத்தில் ஆஜராக மாட்டார்கள். எனவே வேறு ஒரு நாளில் மருத்துவர்களுக்கு சம்மன் அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம். 21 மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். #JayaDeathprobe
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த ஆணையத்திற்கு செய்யப்பட்ட செலவு எவ்வளவு, இதுவரை எவ்வளவு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், சிங்காரவேலு ஆணையத்திற்கு இதுவரை 2 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், ராஜேஷ்வரன் ஆணையத்திற்கு 1 கோடியே 47 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 32 லட்சம் ரூபாய், அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 27 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
ரகுபதி ஆணையத்தை பொறுத்தவரை இதுவரை 4 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் தடை விதித்திருந்த மூன்றாண்டு காலத்தில் 2 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது வீண் செலவு இல்லையா? என கேள்வி எழுப்பினார். மேலும் ஆணையத்தின் செயல்பாடுகளை அரசு கண்காணித்து இருக்க வேண்டும் என்றும், இது போன்ற செயல்களை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது எனவும் தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார். #RagupathiCommission #ChennaiHighCourt #InquiryCommission
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவர் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை மேற்கொண்டது. இரவு 7 மணியளவில் தொடங்கிய ஆய்வில் ஆறுமுகசாமி ஆணைய வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன், அரவிந்தன் மற்றும் ஜெ.தீபா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வின் போது ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறை, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட விதம் குறித்து ஆணையம் ஆய்வு செய்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள், அதிகாரிகள் இருந்த அறை உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக விசாரணை ஆணையம் கடந்த 15ஆம் தேதி ஆய்வு செய்ய இருந்த நிலையில் அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் ஆய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #Jayalalithaa #ApolloHospital
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் சஜன் ஹெக்டே, செவிலியர் ஜோஸ்னோமோல் ஜோசப் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.
மருத்துவர் சஜன் ஹெக்டே அளித்த வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஒரு முறை முதுகுவலி இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவரது உடல்நிலையை பரிசோதித்து விட்டு முதுகுவலி குறைவதற்காக மருந்து, மாத்திரை வழங்கினேன். அதேபோன்று மற்றொரு முறை கை வலிப்பதாக கூறியதை தொடர்ந்து உரிய சிகிச்சை அளித்தேன். அந்த சமயங்களில் ஜெயலலிதா என்னிடம் சைகை மூலம் எங்கே வலிக்கிறது என்பதை தெரிவித்தார். மற்றபடி நான் அவருக்கு வேறு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை’ என்று கூறி உள்ளார்.
விசாரணை ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ள பலர் அப்பல்லோ மருத்துவமனையின் இயற்கை அமைப்புகளை ஒட்டியே சாட்சியம் அளித்துள்ளதால் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்தின் வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆறுமுகசாமி, 29-ந் தேதி (நாளை) இரவு 7 மணி முதல் 7.45 மணி வரை ஆணையத்தின் வக்கீல்கள் அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு செய்யவும், அப்போது சசிகலா வக்கீல்கள் உடன் செல்ல அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது தன்னையும், தனது வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு அறை எண்.2008, அங்குள்ள நடைபாதை, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருந்த இடம் ஆகியவற்றை 29-ந் தேதி (நாளை) இரவு 8.15 மணி முதல் 8.40 மணி வரை ஜெ.தீபா மற்றும் அவரது வக்கீல் தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. அந்த சமயத்தில் அவர்கள், அப்பல்லோ தரப்பு வக்கீல்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் எந்தவித விவாதமும் மேற்கொள்ளக்கூடாது. மருத்துவமனை நிர்வாகத்துக்கும், நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறு இல்லாமல் பார்வையிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
சாட்சிகளிடம் விசாரணை நடத்தும்போது சசிகலா தரப்பு வக்கீல்களை அனுமதிப்பது போன்று தனது தரப்பு வக்கீலையும் அனுமதிக்க வேண்டும் என்று ஜெ.தீபா தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
அப்பல்லோவில் மருத்துவர்களாக பணியாற்றிய அர்ச்சனா, பிரசன்னா மற்றும் செவிலியர்களாக பணியாற்றி வரும் ரேணுகா, ஷீலா ஆகியோரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர்களை 31-ந் தேதி ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர் பி.எல்.அருண்செல்வன், ரேடியோலாஜிஸ்ட் ரவிக்குமார் ஆகியோரும், 2-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் கே.ஆர்.பழனிசாமி, செவிலியர் அனுஷா ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் ராஜன் ஹெக்டே மற்றும் நர்சு ஜோஸ்னமோல் ஜோசப் ஆகியோர் இன்று ஆஜரானார்கள். இவர்கள் இருவரும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி செய்தவர்கள்.
ஜெ.தீபாவின் உறுதி மொழியை ஏற்று அப்பல்லோ மருத்துவமனை ஆய்வில் ஜெ.தீபா மற்றும் வக்கீல் தொண்டன் சுப்பிரமணி பங்கேற்க அனுமதியை நீதிபதி ஆறுமுகசாமி வழங்கினார்.
29-ந்தேதி நடக்கும் ஆய்வில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த வார்டு, தீவிர சிகிச்சை பிரிவு, சசிகலா இருந்த அறை, அரசு டாக்டர்கள் குழு தங்கி இருந்த இடம், உணவு தயாரிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்கின்றனர். #Jayalalithaa #Deepa #inquiryCommission #ApolloHospital
கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமை செயலக கட்டிடம் கட்டப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமை செயலக கட்டிடம் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி புதிய தலைமை செயலக கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது முழு வீச்சில் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆர். ரகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ரகுபதி கமிஷன் விசாரணைக்கு தடை விதித்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜரானார்.
அவரிடம் தமிழக அரசின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். 2015-ம் ஆண்டு இந்த விசாரணை கமிஷன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும், இத்தனை ஆண்டுகளாக அந்த கமிஷனுக்கு அலுவலகம், ஊழியர்கள் என்று பெரும் தொகையை அரசு ஏன் செலவு செய்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார்.
‘தலைமை செயலகத்துக்கு கட்டிடம் கட்டியதில் முறைகேடு நடந்திருந்தால், அது குறித்து ஊழல் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது தானே? அதற்கு பதில், ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் எதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்?
இதனால், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறையாதா?’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார். இந்த வழக்கை 26-ந்தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தார்.
அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் மீண்டும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் அமைக்கப்படும் விசாரணை ஆணையத்தின் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். கண்துடைப்புக்காகவே இது போன்ற விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
இதுபோன்ற ஆணையத்திற்காக பொது மக்களின் பணத்தை வீணடிக்க கூடாது. இதுவரை அரசால் எத்தனை விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன?
அவற்றிற்கு எத்தனை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன? இதற்கு அரசு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? இந்த ஆணையங்கள் தரும் அறிக்கைக்கு எந்த பயனும் இல்லை.
இந்த ஆணையத்தினால் அரசு சாதித்தது என்ன? இந்த ஆணையங்கள் விசாரணையை முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்து கொள்கின்றன?
ஆணையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் தானா? அவர்களுக்கு அரசு தானே சம்பளம் தருகிறது. இது குறித்து பிற்பகலில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். #HighCourt #InquiryCommission
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆணையத்தில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்கள். அவர்களது விளக்கம் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.
விசாரணை ஆணையத்தில் 75-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரையில் ஆஜராகி உள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் மட்டுமே 20-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜெ.தீபா சார்பில் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை நீதிபதி விசாரித்தார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனையை ஆய்வு செய்ய வேண்டும், உணவு தயாரிக்கப்பட்டது குறித்தும் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் 29-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப் போவதாக நீதிபதி கூறினார்.
ஆய்வு நடத்த செல்லும் போது ஜெ.தீபா தரப்பினரை அனுமதிக்க வேண்டும் என்று அவரது வக்கீல் கூறியுள்ளார். அதற்கு மனுதாரர் தரப்பில் உள்ளவர்களை ஆய்வு செய்யும்போது அனுமதிக்க வேண்டியதில்லை என்று சசிகலா தரப்பிலும், நீதிபதி தரப்பிலும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. #Jayalalithaa #inquirycommission
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்துக்கு இன்று மதியம் அமைச்சர் சி.வி.சண்முகம் வந்தார்.
பின்பு அவர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கும், விழுப்புரத்தில் இருந்து திருச்சி மற்றும் சேலத்துக்கும் இடைநில்லா பஸ்களை இயக்கி வைத்தார்.
அதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்துக்கு வந்திருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, அடுத்த தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளாராரே?
பதில்:- அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
கே:- சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு அதிகம் எதிர்ப்பு உள்ளதே?
ப:- சம்மன் அனுப்பப்பட்டால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஆஜராவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #Edappadipalanisamy #opanneerselvam
சென்னை:
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார்.
இதனால் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் நேற்று ஆஜரானார்.
2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைப்பெற்றது. ஜெயலலிதா சிகிச்சை மற்றும் மரணம் குறித்த கேள்விகள் அவரிடம் எழுப்பப்பட்டன. வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருந்ததால் இன்று மீண்டும் அவரை ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டது.
அதே போல ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி, மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோரும் இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
திவாகரனின் மகள், மருமகன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் சிகிச்சை குறித்த கேள்விகளை நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். #jayalalithadeath #excommissionerGeorge
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.
பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.
பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.
இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.
தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.
தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.
அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #JayalalithaaDeath ##ArumugasamyCommission
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகம் பற்றி நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
அரசு மற்றும் அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.
இவர்களில் சிலர் தங்கள் சாட்சியங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.
பின்னர் மே 26-ந்தேதி சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் அவரை குறுக்கு விசாரணை செய்தார். அப்போதும் ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தார்கள் என்பதை வீரபெருமாள் உறுதிபடுத்தினார்.
ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் வீரபெருமாள் தனது நிலைப்பாட்டில் இருந்து திடீர் மாற்றிக்கொண்டார். ஜெயலலிதாவை அமைச்சர்கள் தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்கள் என்று தான் சொன்னேன். ஆஸ்பத்திரியில் சந்தித்ததாக சொல்லவில்லை என்றார். அவரது முரண்பட்ட சாட்சியமும் கமிஷனில் பதிவு செய்யப்பட்டது.
டாக்டர் பாலாஜி கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அளித்த சாட்சியத்தில் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பதிவு செய்ததாக தெரிவித்து இருந்தார்.
அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளரிடம் போனில் தெரிவித்ததாக முதலில் கூறினார். பின்னர் அவர் சுகாதாரத்துறை அமைச்சரை தனியாக சந்தித்து தகவல் தெரிவித்ததாக மாற்றிக் கூறினார். #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்