search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspec"

    • ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 79 கோடி மதிப்பில் சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கியது.
    • சந்திப்பில் இருந்து செல்லும் வாகனங்கள் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை வரை சென்று திரும்பி தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தின் வழியாக சென்று வந்தது.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன், தென்காசி, கடையம், அம்பை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சந்திப்பு பஸ் நிலையம் சென்று பயணி களை ஏற்றி, இறக்கிவிட்டு பின்னர் ராஜா பில்டிங் வழியாக வந்து தேவர் சிலை அருகில் திரும்பி ஈரடுக்கு மேம்பாலம் வழியாக பயண இடங்களுக்கு சென்று வந்தன.

    ஸ்மார்ட்சிட்டி திட்டம்

    இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 79 கோடி மதிப்பில் சந்திப்பு பஸ் நிலையம் புதுப்பிக்கும் பணி தொட ங்கியது. இதனால் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக போக்கு வரத்து நிறுத்தப் பட்டது. இதற்கிடை யே கொரோனா கால கட்டத்தில் தேவர் சிலை அருகே தற்காலிக பஸ் நிறுத்த ங்கள் அமைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திப்பில் இருந்து செல்லும் வாகன ங்கள் தேவர் சிலை அருகில் திரும்பி டவுன் செல்லும் பாதை பேரி கார்டுகள் கொண்டு அடைக்கப்பட்டது.

    இதனால் சந்திப்பில் இருந்து செல்லும் வாகன ங்கள் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை கடந்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை வரை சென்று திரும்பி தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலத்தின் வழியாக சென்று வந்தது.

    இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதி பணி நிறைவடைந்ததால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பஸ்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பயணிகளை ஏற்றி, இறக்கி வருகிறது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அவ்வழியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து டவுன் செல்லும் பஸ்கள் கொக்கிரகுளம் வரை சென்று திரும்புவதால் காலநேரம் வீணாவதோடு பெட்ரோல், டீசல் உப யோகமும் அதிகரித்து ள்ளதாகவும், எனவே மீண்டும் தேவர்சிலை வழி யாக வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் டிரை வர்கள் மற்றும் வாகன ஓட்டி கள் தொடர்ந்து கோரி க்கை விடுத்து வந்தனர்.

    அதிகாரிகள் ஆய்வு

    இது தொடர்பாக ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத் துறை யினருக்கும், அதிகாரி களுக்கும் கலெக்டர் கார்த்தி கேயன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முத்துக் கிருஷ்ணன் தலை மை யில் உதவி கோட்டப் பொறியாளர் சசிகலா, உதவி பொறியாளர் லட்சுமி பிரியா, வட்டார போக்கு வரத்து அலுவலர் சந்திரசேகர், காவல்துறை போக்குவரத்து உதவி ஆணை யாளர் காமேஷ் வரன், இன்ஸ்பெக்டர் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் இன்று சந்திப்பு தேவர்சிலை, அண்ணாசிலை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது வழக்கம் போல தேவர் சிலை வழியாக பஸ்களை இயக்க லாமா? அல்லது அண்ணா சிலை வழியாக இயக்க லாமா? என ஆய்வு செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் தேவர்சிலை பகுதி சாலையின் அகலத்தி னை அளவீடு செய்தனர். இது தொடர்பாக அதிகாரி கள் கூறும்போது, இன்றைய ஆய்வு பணிகள் குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்.

    அதன் அடிப்ப டையில் மாற்று வழியில் வாகனங்களை இயக்குவது குறித்து கலெக்டர் முடிவெடுப்பார் என்றனர். 

    ×