என் மலர்
நீங்கள் தேடியது "Inspection by a team of officers"
- நகர்புற நிதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் உத்தரவு
- பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலைகள், சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிதியுடன் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம், புதிய சாலைகள், சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டம், புதிய பேருந்து நிலையம், பல் அடுக்கு வாகன நிறுத்துமிடம், குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பு கூடங்கள் விரிவாக்கம், அறிவுசார் மையம், வேலூர் கோட்டை அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே, இந்த பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்படி, புதிய பேருந்து நிலையம், விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பாதாசாக்கடை திட்டத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம், அரியூரில் உள்ள அறிவுசார் மையம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.
முன்னதாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு நகர்ப்புற நிதி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் விஜயகுமார் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் விரைவாக முடிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
அப்போது, மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.