என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "inspection meeting"
- ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
- அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா அறிவுரைகள் வழங்கினார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் ராதாபுரம் தொகுதிக்கான அ.தி.மு.க. பூத்கமிட்டி ஆய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் இசக்கிசுப்பையா, ராதாபுரம் தொகுதியில் பூத் கமிட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைத்து அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் ராதாபுரம் தொகுதியில் உள்ள பூத் கமிட்டி நோட்டுகள் சரி பார்க்கப்பட்டு அ.தி.மு.க.வினருக்கு மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அறிவுரைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் சரவணன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால்துரை, முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளருமான மைக்கேல்ராயப்பன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா செல்வகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சுந்த ரேசன், மகளிரணி செய லாளர் ஜான்சி ராணி, வள்ளியூர் பொருளாளர் இந்திரன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலரிச்சர்ட்டு, ஞானபுனிதா, அருண் குமார், எட்வர்ட்சிங், நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள் பூத் கமிட்டி யின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடி வில் பா.ஜ.க., தி.மு.க. வை சேர்ந்த 10 பேர் அ.தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை இணைத்துகொண்டனர்.
- நூலக வரி நிலுவைத் தொகை ரூ.70 லட்சத்தை நூலகக் குழுத்தலைவர், பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லியிடம் வழங்கினார்.
- நூலகங்களை ஆய்வு செய்து போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் குழுவினர் உரையாடினர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் தலைமையில், கலெக்டர் ரவிச்சந்திரன், சட்டசபை செயலாளர் சீனிவாசன், நூலகக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள் கணபதி, தியாகராஜன், ஸ்டாலின் குமார், சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் நூலகக் குழு ஆய்வு கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் நூலக வரி நிலுவைத் தொகை ரூ.70 லட்சத்தை நூலகக் குழுத்தலைவர், பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லியிடம் வழங்கினார். முன்னதாக தென்காசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அறிவுசார் மையம், தென்காசி மாவட்ட மைய நூலகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள வ.உ.சி. வட்டார நூலகம், திப்பணம்பட்டி கிளை நூலகம், செங்கோட்டை முழு நேர கிளை நூலகம் ஆகிய நூலகங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் உரையாடினர். மாணவர்கள் போட்டித் தேர்வு பயில்வதற்கு தமிழ்நாடு பாடநூல் நிறுவன நூல்கள் மற்றும் என்.சி.ஆர்.டி. நூல்கள் தேவை என தெரிவித்தார்கள். அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் நூலகங்களுக்கு 12 செட் நூல்கள் இக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் பொது நூலக இணை இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, திட்ட இயக்குனர் மைக்கேல் ஆண்டனி பெர்னான்டோ, முதன்மை கல்வி அலுவலர் முத்தையா,
மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செல்வி, உதயகுமார், நூலகர் பிரமநாயகம், சுந்தர் ராமசாமி, முருகன், உள்ளாட்சி நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நூலகக்குழு தலைவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
- கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
- பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மயிலாடுதுறை :
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் வனவியல் விரிவாக்க மையத்தில் சேலம் வன மண்டல செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். ராஜேஷ்குமார் எம்.பி முன்னிலை வகித்தார். சேலம் மண்டல பாது காவலர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர்கள் ராஜாங்கம் (நாமக்கல்), கஷ்யப் ஷஷாங் ரவி (சேலம்), சுதாகர்(ஆத்தூர்) ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
தமிழ்நாட்டின் வனப்பகு–திகளை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு, மரம் நடும் திட்டத்தை தீவிரப்படுத்தி வனப்பரப்பை உயர்த்து–வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தமிழக வனப்பகுதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் மாவட்டத்தின் மொத்த புவி பரப்பில் 15 சதவீதம் வனப்பரப்பு பகுதியாகும்.
இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். முதல் அமைச்சரின் எண்ணத்தை நிறைவேற்றிட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி ஆகியோர் மரக்கன்று களை நட்டனர்.
பின்னர் கருத்தியல் விளக்க மையத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மரம் நடும் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய தி.மு.க செயலாளருமான ஆர்.எம்.துரைசாமி மற்றும் வன சரகர்கள், வனத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுகாதார ஊக்குநர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
- கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்
அரியலூர்:
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து பேசிய போது :-
அனைத்து கிராமங்களிலும் கழிப்பறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஊக்குநர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் அகிலா, ஒன்றிய ஒருங்கிணப்பாளர் மணிவேல், ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர். இதே போல ஜெயங்கொண்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் சுகாதார ஊக்குநர் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்