என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Installments"

    • விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது
    • முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது.

    மங்கலம்  :

    தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க கோரி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசைத்தறி யாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

    விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது. முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது. இந்நிலையில் நிலுவை யில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை கேட்டும், மின் கட்டணத்துக்கான அபராத தொகையை ரத்து செய்ய கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு ள்ளனர்.அங்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, மின்வா ரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.கூட்டமை ப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு விசைத்தறி குடோன்களுக்கும் 3 முதல்4 மின் கட்டண பில்கள் வந்து ள்ளன. அவற்றை தவணை முறையில் கட்ட அனுமதி கேட்டும், அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அமைச்சரை சந்தித்து மனு அளித்து ள்ளோம் என்றனர்.

    • பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு.
    • வேளாண் துறைக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை.

    ராமநாதபுரம்:

    நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் கூறப்பட்டபோதிலும், இன்னும் அவர்கள் நிமிர முடியாத நிலையிலேயே உள்ளனர். சிறு விவசாயிகள் அயராத உழைத்த போதிலும் அதற்கேற்ற பலன் முழுமையாக கிடைக்கவில்லை.

    இதற்கிடையே கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசால் கடந்த 2009-ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் தொடங்கப்பட்டது.

    பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து அதனை சரிசெய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

    அதன்படி பயனாளிகள் பட்டியல் சரிசெய்யப்பட்டதாக அரசால் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அடிப்படையில் விவசாயியின் பெயரில் இருந்தால் மட்டுமே ஆதாரத் தொகையை பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் அளவீடானது குறைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை ஒன்றரை லட்சம் ஹெக்டர் அளவிற்கு நெல் விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் வெறும் 72,426 விவசாயிகளுக்கு மட்டுமே 19-வது தவணையாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் ஆதாரத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அந்த தொகையும் போய் சேர வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த வாலாங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலிக்குளம் கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார செயலாளரும், விவசாயியுமான தட்சிணாமூர்த்தி என்பவருக்கு இந்த ஆண்டு 19-வது தவணை ஆதாரத் தொகை வரவு வைக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.

    இருந்தபோதிலும் வங்கியை அணுகி கணக்கை சரிபார்த்தபோது மத்திய அரசின் ஆதாரத்தொகை வந்து சேரவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் வங்கி வரவு-செலவு கணக்கு புத்தகத்தோடு வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது கடந்த முறை வந்த வங்கி கணக்கிற்கு தான் தவணைத்தொகை வரும் என்று சொல்ல முடியாது. ஆதார் எண்ணை எந்தெந்த வங்கிகளில் இணைத்து வைத்துள்ளீர்களோ அந்த கணக்குகளையும் ஆய்வு செய்யும்படி கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது பெயரில் உள்ள மற்றொரு வங்கி கணக்கை ஆய்வு செய்தும் கூட தவணை ஆதாரத் தொகை வந்து சேர வில்லை என்று உறுதி செய்த அவர், இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் முறையான பதில் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசால் விவசாயி களுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலனை பெறுவதாகவும், இந்த திட்டம் வேளாண் காப்பீட்டு இழப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு வரவேண்டிய பயணத்திற்கு பதில் குறுஞ்செய்தி மட்டுமே வந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ×