என் மலர்
நீங்கள் தேடியது "Integrated Farming and Cultivation Training Camp"
- ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி பெருங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது.
- பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கி கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் ஒரு அங்கமான ஒருங்கிணைந்த பண்ணைய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி பெருங்குறிச்சி கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியை வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தொடங்கி வைத்து மானாவாரி பகுதி மேம்பாடு திட்டத்தின் பல்வேறு சிறப்பம்சங்களை விரிவாக விளக்கி கூறினார். ஓய்வு பெற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் அப்பாவு ஒருங்கிணைந்த வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் பல்வேறு அலகுகள் குறித்தும் பேசி விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். கபிலர்மலை வட்டார வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி வேளாண்மைத்துறையின் பல்வேறு மானியத்திட்டங்கள், கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கிக்கூறினார். முடிவில் வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா திட்ட உதவி மேலாளர் ஜோதிமணி ஆகியோர் செய்திருந்தனர்.