என் மலர்
நீங்கள் தேடியது "intercontinental cup"
- ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.
- இன்டர்கான்டினென்டல் கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி கோப்பை வென்றது.
கத்தார்:
பிபா இன்டர் கான்டினென்டல் கால்பந்து கோப்பை தொடர் கத்தாரில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், மெக்சிகோவின் பச்சுகா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ரியல் மாட்ரிட் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 84வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் (பெனால்டி) ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.
பச்சுகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
இறுதியில், ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- ஏழாவது நிமிடத்தில் சிரியா முதல் கோலை பதிவு செய்தது.
- கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது.
ஐதராபாத்தில் நடந்த 2024 இன்டர்காண்டினென்டல் கோப்பையின் இரண்டாவது மற்றும் கடைசி ஆட்டத்தில் சிரியாவிடம் இந்தியா 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், கோல் வித்தியாசத்தில் மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி, போட்டியில் இந்தியா கடைசி இடத்தைப் பிடித்தது.
ஏழாவது நிமிடத்தில் இந்தியா ஒரு கோலை விட்டுக் கொடுத்தது. இரண்டாவது பாதியில் பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், ஆட்டத்திற்கு எதிராக இரண்டாவது கோல் அடித்தது சிரியா. 96-வது நிமிடத்தில் மூன்றாவது கோல் அடிக்கப்பட்டது.
கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒரு கோல் கூட போடமுடியாமல் தோல்வியை தழுவியது. இதன்மூலம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை சிரியா முதல் முறையாக வென்றுள்ளது.
- இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
- ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.
இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
"இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.
போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.
"இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.