என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Interpol"
- இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
- தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை அமலாக்கத்துறை வலை வீசி தேடி வந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் அவரது நண்பரான ரவிஉப்பல் ஆகிய இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்று அங்கு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை உருவாக்கினர். இதில் போக்கர், டென்னிஸ், பாட்மிட்டன், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளின் பேரில் சூதாட்டம் நடத்தப்பட்டது.
இந்தியாவின் வட மாநிலங்களில் இதில் பெட் கட்டிய லட்சக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர். சுமார் ரூ.5000 கோடி வரை இந்த செயலி மூலம் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகார்களின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை, கோல்கட்டா, போபால் உள்ளிட்ட 39 இடங்களில் சோதனை கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் தப்பியோடிய சவுரப் சந்திரசேகரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் சந்திரசேகர் துபாயில் பதுங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்து இன்று [அக்டோபர் 11] இன்டர்போல் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் சந்திரசேகர் இந்தியா அழைத்து வரப்படலாம் என்று அமலாக்கத்துறை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
- கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்யானந்தா அறிமுகப்படுத்தினார்.
- நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.
புதுடெல்லி:
கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை பிடிப்பதற்காக குஜராத் போலீசார், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இன்டர்போல் மூலமாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார். அவர் எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.
இதற்கிடையே நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். அவர் எந்த நாட்டில் இருக்கிறார் என்பது தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கும்படி சர்வதேச போலீசை (இண்டர்போல்) சிபிஐ கேட்டுக்கொண்டது. சிபிஐயின் கோரிக்கையை ஏற்ற இண்டர்போல், மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் இன்று தெரிவித்துள்ளார்.
தன் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் சதியின் விளைவு என்று மெகுல் சோக்சி கூறியதாகவும், இந்தியாவில் சிறைச்சாலையில் உள்ள வசதிகள், தனது பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெட் கார்னர் நோட்டீஸ் என்பது தப்பி ஓடியவர்களை கைது செய்வதற்காக இண்டர்போல் தனது உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் சர்வதேச கைது வாரண்ட் ஆகும். குற்றம் சாட்டப்பட்டவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சொந்த நாட்டுக்கு அவரை கடத்த வேண்டும். #RedCornerNotice #MehulChoksi
சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்கமாக கொண்டு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறை என்னும் அமைப்பு கடந்த 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் உலகில் உள்ள 184 நாடுகள் அங்கம் வகித்து வருகின்றன.
இந்நிலையில், இன்டர்போல் காவல்துறை தலைவரான மேங் ஹோங்வேய் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது தாய்நாடான சீனாவுக்கு சென்றபோது திடீரென்று காணாமல் போனார். இரண்டு மாதங்களாகியும் அவர் என்ன ஆனார்? என்பது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்காததால், அவருக்கு பதிலாக புதிய தலைவரை தேர்வு செய்ய இன்டர்போல் தலைமையகம் தீர்மானித்தது.
இதற்கிடையில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு எதிரொலியாக மேங் ஹோங்வேய் ராஜினாமா செய்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்த பதவிக்கு அமெரிக்காவின் ஆதரவுடன் தென்கொரியாவை சேர்ந்த கிம் ஜாங்-யாங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ரஷியாவின் உள்துறை அமைச்சக உயரதிகாரியும், இன்டர்போல் துணை தலைவராக பதவி வகித்தவருமான அலெக்சாண்டர் பிரோகோப்சுக் நிறுத்தப்பட்டார். இவரை இந்த பதவியில் நியமிக்க பல்வேறு மேற்கத்திய, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க துபாயில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் கிம் ஜாங்-யாங் தேர்வு செய்யப்பட்டதாக
இன்டர்போல் தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. #Interpol #Interpolpresident
பிரான்சை தலைமையிடமாக கொண்டு இண்டர்போல் எனப்படும் சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே இருந்து வருகிறார்.
இதற்கிடையே, இண்டர்போல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியானது.
கம்யூனிச சிந்தாந்தப்படி இயங்கி வரும் சீனாவில் இதைப்போன்று அரசியல் தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகள் அவ்வப்போது ரகசியமான முறையில் கைது செய்யப்படுவதும், தனிமையான இடத்தில் வைத்து விசாரிக்கப்படுவதும் இயல்பான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #Interpol
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடந்த ஜனவரி மாதமே வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு நிரவ் மோடி ஒத்துழைப்பு கொடுக்காததால், அவரை கைது செய்ய சர்வதேச போலீசின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டது.
இதை ஏற்று நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் அதிகாரிகள் தற்போது ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். நிரவ் மோடியை தங்கள் நாட்டில் பார்த்தால் அவரை பிடிக்கவோ, கைது செய்யவோ வேண்டும் என தனது 192 உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ள இன்டர்போல் அதிகாரிகள், பின்னர் அவரை நாடு கடத்துவதற்கான நடைமுறைகளை தொடங்கலாம் எனக்கூறியுள்ளனர்.
நிரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அளித்துள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளையும் தங்கள் நோட்டீசில் இன்டர்போல் அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர். இதன் மூலம் நிரவ் மோடிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. #PNBFraud #NiravModi #Tamilnews
பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கியிடம் இருந்தும் ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை என தொழிலதிபர் நிரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணை நடவடிக்கையைத் தவிர்க்க அவர் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகிறது. விசாரணை முகமைகள் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை தொடர்ந்து வருகின்றன. நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் அவர்களுடைய நிறுவனங்களின் சொத்துக்களையும் விசாரணை முகமைகள் பறிமுதல் செய்து வருகின்றன. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய விசாரணை முகமைகள் தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
சி.பி.ஐ. அளித்த தகவல்களை உறுதி செய்து, அதன் அடிப்படையில் நிரவ் மோடியை பிடிக்க இண்டர்போல் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக நிரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி மற்றும் அவர்களின் நிறுவன தலைமை நிர்வாகி சுபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை இண்டர்போல் பிறப்பித்துள்ளது. அந்த நோட்டீசில், குற்றம்சாட்டப்பட்ட 3 பேரின் இருப்பிடம் தெரிந்தால் அவர்களை கைது செய்யும்படி 192 உறுப்பு நாடுகளிடமும் இண்டர்போல் கூறி உள்ளது.
எனவே, இண்டர்போல் உறுப்பு நாடுகளில் எதாவது ஒரு நாட்டில் நிரவ் மோடி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #NiravModi #PNBFraud #PNBScamCase #InterpolRedCornerNotice
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்