என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "involve"

    • வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தவமுருகன், சேதுராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேல கிடாரத்தைச் சோந்தரவர் மலைராஜன் (50),லாரி டிரைவர். இவர் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியை ஓட்டி வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து லாரியை மடக்கியது.

    பின்னர் லாரி டிரைவர் மலைராஜன் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ரூ. 2 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் கீழசெல்வனூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து கடலாடியை சேர்ந்த சண்முகநாதன் (27), சண்முகய்யா பாண்டி யன்(27), கே.காளீஸ்வரன் (25), பி.காளீஸ்வரன்(23) ஆகியோரை கைது செய்தார்.

    பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்க ப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய தவமுருகன், சேதுராமன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×