search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IOA"

    • ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
    • 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.

    அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.

    2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடக்கும். இது 140 கோடி இந்தியர்களின் கனவு என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த அனுமதி கோரி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி விண்ணப்பித்துள்ளது.

    இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால், இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

    • பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய குதிரையேற்ற அணித் தேர்வில் முறைகேடு நடந்ததையொட்டி ஜிம்னாஸ்டிக் அணியை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. #AsianGames2018
    இந்தோனேசியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற இருக்கிறது. இதில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தலைசிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்வதில் ஒவ்வொரு பெடரேசனும் கவனம் செலுத்தி வருகிறது.

    ஆசிய கோப்பைக்கான குதிரையேற்றம் அணி அறிவிப்பில் முறைகேடு நடைபெற்றதாக தெரிகிறது. இதனால் இந்த அணியை இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் ஆசிய போட்டிக்கு அனுப்புவதில்லை என்ற முடிவு செய்துள்ளது. அதேவேளையில் ஆண்களுக்கான கால்பந்து மற்றும் ஹேண்ட்பால் அணிக்கு அனுமதி வழங்கியுள்ளது.



    இந்நிலையில் ஜிம்னாஸ்டிக் அணியை தேர்வு செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தியன் ஒலிம்பிக் பெடரேசனின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இந்திய ஜிம்னாஸ்டிக் பெடரேசன் இல்லை. இதனால் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ததை, ஐஓஏ ஏற்றுக் கொண்டது.
    ×