search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IOC"

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
    • இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, பிரான்சில் தொடங்கிய ஒலிம்பிக்கில் தென்கொரிய அணி தவறுதலாக வட கொரியா என அழைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தென் கொரிய அணி அறிமுகத்திற்காக படகில் வந்து கொண்டிருந்த போது, அறிவிப்பாளர் பிரெஞ்சு மொழி மற்றும் ஆங்கிலத்தில் வட கொரியாவின் அதிகாரப்பூர்வ பெயரில் அறிமுகப்படுத்தினார்.

    இரு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் இன்னும் நடந்து வருவதால் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தென் கொரியாவின் விளையாட்டு அமைச்சகத்திடம் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட குழப்பத்தை ஒப்புக்கொண்டதுடன் வருத்தமும் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில், கொரிய மொழியில் மன்னிப்பு கோரியுள்ளது.

    அதில், அறிமுக விழாவில் தென் கொரிய அணியின் பிரதிநிதிகளை அழைப்பதில் ஏற்பட்ட தவறுக்கு ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    • இஸ்ரேலை தடைசெய்யக் கோரி பாலஸ்தீன குழு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியது.
    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    பாரிஸ்:

    பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுதினம் முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேக்வாண்டோ தடகள வீரர் அவிஷாக் செம்பெர்க், ஜிம்னாஸ்டிக் வீரர் ஆர்டெம் டோல்கோபியாட் மற்றும் லானிர் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரேலிய வீரர் போட்டியில் உள்ளனர்.

    இதேபோல, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 8 பாலஸ்தீன விளையாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.

    இதற்கிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவருக்கு இஸ்ரேலை தடை செய்யக் கோரி பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி கடிதம் அனுப்பியது. பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது என ஐ.நா.சபையின் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்தையும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பாலஸ்தீனிய ஒலிம்பிக் குழுவின் கோரிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தாமஸ் பாக் கூறுகையில், ஐ.ஓ.சி.யின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. எங்களிடம் இரண்டு தேசிய ஒலிம்பிக் கமிட்டிகள் உள்ளன. அதுவே அரசியல் உலகத்துடனான வித்தியாசம். இந்த வகையில் இருவரும் அமைதியான சக வாழ்வில் வாழ்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

    மேலும், பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பு நாடு அல்ல. ஆனால் பாலஸ்தீன ஒலிம்பிக் கமிட்டி என்பது அங்கீகரிக்கப்பட்ட தேசிய ஒலிம்பிக் கமிட்டியாகும். மற்ற அனைத்து ஒலிம்பிக் கமிட்டிகளைப் போலவே சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

    • பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்குகிறது.
    • ஒலிம்பிக்கில் ரஷியாவை சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    பாரீஸ்:

    33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அடுத்த மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பிரான்சில் 100 ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் விளையாட்டு நடக்க இருப்பதால் அந்நாட்டு அரசு பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

    இதற்கிடையே, ரஷியாவை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    இந்நிலையில், ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பங்கேற்க வைக்கும் திட்டத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கையில் எடுத்துள்ளது.

    ரஷிய வீரர்கள் மெத்வதேவ், ரூப்லெவ், கச்சனாவ், ரோமன் சபியுல், வீராங்கனைகள் டேரியா கசட்கினா, சாம்சனோவா, அலெக்சாண்ட்ரோவா, மிரா ஆன்ரிவா ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இதேபோல் பெலாரஸ் அரினா சபலென்கா மற்றும் விக்டோரியா அசரென்கா ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியினர் கூறுகையில் ரஷியா மற்றும் பெலாரஸ் வீரர்கள் பொதுவான கொடியின் கீழ் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளோம் என்றனர்.

    • ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஐ.ஓ.சி. செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    • தடையால் ரஷிய வீரர்கள் பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும்.

    மும்பை:

    சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் மும்பையில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஐ.ஓ.சி.யின் 2 நாள் செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் ரஷிய ஒலிம்பிக் கமிட்டியை சஸ்பெண்ட் செய்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒலிம்பிக் சாசன விதிமுறையை மீறிய இந்தச் செயலில் ஈடுபட்டதால் ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடைக்கு ஆளாகி இருக்கிறது.

    கிழக்கு உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களில் உள்ள விளையாட்டு அமைப்புகளை ரஷியா தங்களுடன் இணைத்தது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என ஐ.ஓ.சி. செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.

    தடை காரணமாக ரஷிய வீரர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் ரஷிய நாட்டு பெயரில் பங்கேற்க முடியாது. அவர்கள் தனிப்பட்ட போட்டியாளராக தான் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×