search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL match"

    • கொல்கத்தா அணி குஜராத்தை தோற்கடித்து 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழையவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    17- வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22- ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர் , வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இதுவரை 62 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 8 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 18 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணிக்கு இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. இதில் மும்பைக்கு ஒரு ஆட்டமும் பஞ்சாப்புக்கு 2 போட்டியும் உள்ளன.

    எஞ்சிய 3 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் (தலா 14 புள்ளி கள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (தலா 12 புள்ளி), குஜராத் டைட்டன்ஸ் (10 புள்ளி) ஆகிய 7 அணிகள் உள்ளன.

    அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63-வது 'லீக்' ஆட்டத்தில் குஜராத் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    குஜராத் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். அந்த அணிக்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் 6-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணி குஜராத்தை தோற்கடித்து 10-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.


    டெல்லியில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-லக்னோ அணிகள் மோதுகின்றன.

    12 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணிக்கு இது கடைசி ஆட்டமாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இயலும். மேலும் அந்த அணியின் ரன் ரேட் மிகவும் மோசமாக இருக்கிறது. இதனால் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.

    லக்னோ அணியும் 12 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணிக்கு 2 போட்டி கள் இருக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க லக்னோவும் வெற்றி கட்டாயத்தில் உள்ளது.

    ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் பிளே ஆப் சுற்றில் நுழையவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. 4-வது அணி எது என்பதில் சென்னை, பெங்களூரு, லக்னோ அல்லது டெல்லி ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இதில் சென்னை, பெங்களூரு ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளன. டெல்லியும், லக்னோவும் ரன் ரேட்டில் பின் தங்கி இருக்கின்றன.

    • கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.
    • வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் ஐ.பி.எல். விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. டி.ஆர்.எஸ். உள்பட பல்வேறு விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கிறது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் பந்துவீச்சாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்ஸ் வீச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை முறையில் செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்கள் கூடுதல் நன்மையை அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று நான் உணர்கிறேன்.

    ஒரு பந்து வீச்சாளரான நான் இந்த விதியை மிகவும் முக்கியமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.
    • டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே.அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப் புக்கு 223 ரன் குவித்தது. இதனால் டெல்லி அணிக்கு 224 ரன் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கான்வே 52 பந்தில் 87 ரன்னும் (11 பவுண்டரி , 3 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஷிவம் துபே 9 பந்தில் 22 ரன்னும் (3 சிக்சர்), ஜடேஜா 7 பந்தில் 20 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கலீல் அகமது, நோர்க்கியா, சேட்டன் ஷகாரியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுத்தது. இதனால் சென்னை அணி 77 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 58 பந்தில் 86 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர் 3 விக்கெட் டும், பதிரனா, தீக் ஷனா தலா 2 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சி.எஸ்.கே. பெற்ற 8-வது வெற்றியாகும். 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

    டெல்லி அணியை இந்த சீசனில் 2-வது தடவையாக வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 27 ரன்னில் தோற்கடித்து இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    சி.எஸ்.கே. அணி 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து சாதனை படைத்தற்காக செய்முறை எதுவும் இல்லை. சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான உகந்த மற்றும் சவுகரியமான சூழலையும், இடத்தையும் உருவாக்கிட வேண்டும். அதற்காக சில வீரர்கள் தங்களின் இடத்தை கூட தியாகம் செய்ய வேண்டும்.

    மேலும் அணி நிர்வாகமும் ஒரு நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும், உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள்.

    வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இல்லையேல் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (டெத் ஓவர்) பந்து வீசுவதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து அழுத்தமான சூழல்களில் இருந்து தன்னை மேம்படுத்தி கொண்டார். அவரிடம் தற்போது தன்னம்பிக்கை இருக்கிறது.

    பதிரனா டெத் ஓவர்களை வீசுவதற்கென்றே இயல்பான திறமையை பெற்றுள்ளார். தொடர்ந்து அதே வீரர்களுடன் விளையாடும்போது உதவியாக இருக்கிறது.

    தனிப்பட்ட சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களை தேர்வு செய்வதே முக்கியம். வீரர்கள் 10 சதவீத திறனுடன் வந்தாலும் ஓவர்களை அணியில் 50 சதீதம் வரை சிறந்த வீரராக மாற்றலாம்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன.
    • மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

    தர்மசாலா:

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கான ரேசில் 7 அணிகள் இருக்கின்றன.

    இந்நிலையில் தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 19,000 பார்வையாளர்கள் கொண்ட தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகம் சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீசனின் 64வது மற்றும் 66வது ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானம் தயாராக உள்ளது. தரையைச் சுற்றி ஹார்டிங் மற்றும் எல்இடிகள் நிறுவப்பட்டுள்ளன. மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன. மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

    ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் உள்ளது.

    அத்துடன் அந்த அணி ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
    • முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஐ.பிஎல் போட்டியில் சி.எஸ்.கே.அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

    சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்து.

    கான்வே 52 பந்தில் 92 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 37 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பிரப்சிம்ரன் சிங் 24 பந்தில் 42 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 24 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர்), சாம் கரண் 20 பந்தில் 29 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    துஷ்கர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும் , ஜடேஜா 2 விக்கெட்டும் , பதிரனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது தோல்வி ஏற்பட்டது. உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே. கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆட்டத்தின் நடுப்பகுதியில் நாங்கள் ஆட்டத்தை தவறவிட்டோம். 200 ரன் என்பது போதுமான ஸ்கோராகும். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    ஆனால் பந்து வீச்சுதான் சரியாக அமையவில்லை. இரண்டு மோசமான ஓவர்களை வீசியது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. பதிரனா நன்றாக வீசினார். ஆனால் அதை தவிர திட்டங்கள் தவறாக இருந்ததா அல்லது செயல்படுத்துதல் மோசமாக இருந்ததா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

    முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும். பந்து வீச்சில் தவறு செய்துவிட்டோம். என்ன தவறு நடந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் பேட்டிங்கில் தான் அதனை ஈடு செய்ய வேண்டும். எனவேபேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 10 ரன்கள் வரை சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை மறுநாள் (3-ந் தேதி) லக்னோவில் சந்திக்கிறது.

    பஞ்சாப் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் மும்பையை அதே தினத்தில் எதிர்கொள்கிறது. 

    ×