search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IPL trophy"

    • 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
    • இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.

    அந்த வகையில் 2019-ம் ஆண்டு சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா இடது புறமும் டோனி வலது புறமும் இருந்தார். இறுதியில் ரோகித் கோப்பையை தட்டி சென்றார்.

    அதேபோல 2020-ம் ஆண்டு மும்பை - டெல்லி மோதின. இதிலும் ரோகித் இடது புறம் நின்றார் கோப்பையை வென்றார். 2021-ல் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் இடது புறம் டோனி நின்றார் கோப்பையை வென்றார்.

    இப்படி 2024 வரை இடது புறம் நின்ற அணியே கோப்பை வென்ற அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் 2019 முதல் குவாலிபையர் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வென்றது.
    • வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வங்காளம் முழுவதும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த ஐபிஎல் சீசனில் சாதனை படைத்த வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் உரிமையாளரை தனிப்பட்ட முறையில் வாழ்த்த விரும்புகிறேன்.

    வரும் ஆண்டுகளில் இது போன்ற பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.
    • இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வென்ற கோப்பையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வாழ்த்து பெற்றனர்.

    இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    ×