என் மலர்
நீங்கள் தேடியது "IPL"
- செல்போன் மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது.
- கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஹிங்கோலி:
ஹிங்கோலி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவதாக ஜல்னா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் முஸ்தகீம் சேக் என்பவர் செல்போன் மூலமாக சூதாட்டம் நடத்தி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 53 ஆயிரம் ரொக்கம் உள்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைதான 4 பேரின் வங்கிக்கணக்கை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
- மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - டிகாக் களமிறங்கினர். இதில் நரைன் 0 ரன்னிலும் டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 117 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 13 ரன்களில் அவுட் ஆனார். வில் ஜாக்ஸ் 16 ரன்களில் வெறியேறினார். பின்னர், ஜோடி சேர்ந்த ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பாக ஆடியது.

களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் விளாசி மும்பை வெற்றியை எளிதாக்கினார்.
இதனால், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 12.5 ஓவர்களில் இலக்கை எட்டியது. ரிக்கெல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
- முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று சஞ்சு கூறியிருந்தார்.
- முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டி முடிந்த கையோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றுள்ளார். முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போது காயத்தை சந்தித்த அவர், அதற்காக அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டிருந்தார். இதனால் அவர் தனது காயத்தில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே விளையாடுவேன் என்று கூறியிருந்தார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் தற்போது என்சிஏவிற்கு சென்றுள்ளார். இந்த பரிசோதனையில் சஞ்சு சாம்சன் தேர்ச்சியடையும் பட்சத்தில், அவரும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் விளையாடுவார். இதன் காரணமாக பரிசோதனை முடிவு எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
- இந்த போட்டியில் அஸ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- மும்பை அணிக்காக அறிமுகமான முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் அஸ்வானி இடம் பிடித்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். குறிப்பாக அஸ்வானி குமாரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
இந்த போட்டியில் அஸ்வானி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுக போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அஸ்வானி குமார் படைத்துள்ளார்.
மேலும் பல சாதனைகளையும் இவர் படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற பட்டியலில் அவர் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஐபிஎல் அறிமுகப் போட்டியில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்:-
6/12 - அல்சாரி ஜோசப் (MI) vs SRH, 2019
5/17 - ஆண்ட்ரூ டை (GL) vs RPS, 2017
4/11 - ஷோயப் அக்தர் (KKR) vs DD, 2008
4/24 - அஷ்வானி குமார் (MI) vs KKR, 2025*
4/26 - கெவோன் கூப்பர் (RR) vs KXIP, 2012
4/33 - டேவிட் வைஸ் (RCB) vs MI, 2015
மும்பை அணிக்காக அறிமுகமான முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் அஸ்வானி குமார் இடம் பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:-
அலி முர்தாசா vs ஆர்ஆர், 2010 (நமன் ஓஜா)
அல்சாரி ஜோசப் vs எஸ்ஆர்ஹெச், 2019 (டேவிட் வார்னர்)
டெவால்ட் பிரெவிஸ் vs ஆர்சிபி, 2022 (விராட் கோலி)
அஷ்வனி குமார் vs கேகேஆர், 2025 (அஜிங்க்யா ரகானே)*
- மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்சி 26 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியில் அஸ்வானி குமார் அறிமுகமானார்.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - டிகாக் களமிறங்கினர். இதில் நரைன் 0 ரன்னிலும் டி காக் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
ரகானே 11, ரகுவன்சி 23, வெங்கடேஷ் ஐயர் 3, ரிங்கு சிங் 17, மனிஷ் பாண்டே 19, ரசல் 5 என விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- மும்பை வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக கொல்கத்தா 11 ஆட்டங்களில் ஆடியுள்ளது.
- கொல்கத்தா அணி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
மும்பை அணியில் அஸ்வத் புதூர் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். மற்றொரு வீரராக அஸ்வினி குமார் அறிமுகமாகிறார்.
கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக மொயின் அலிக்கு பதிலாக உடல் நலக்குறைவால் கடந்த ஆட்டத்தில் ஆடாத சுழற்பந்து ஆல்-ரவுண்டர் சுனில் நரைன் அணிக்கு திரும்புகிறார்.
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக 11 ஆட்டங்களில் ஆடியுள்ள கொல்கத்தா அணி அதில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இலவச சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
- புதிய ரீசாஜ் திட்டங்களை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை பயனர்களுக்காக ஜியோ வழங்கியிருந்தது. இந்தச் சலுகை இன்றுடன் (மார்ச் 31) முடியவுள்ளது.
இதனிடையே இந்தச் சலுகையை நீட்டிப்பது குறித்த எந்தவித அறிவிப்பையும் ஜியோ வெளியிடாததால், இன்றுடன் இச்சலுகை முடிகிறது.
ஜியோ சலுகை முடிந்த நிலையில், பயனர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் உள்ள வீடியோக்கள் மற்றும் ஐபிஎல் நேரலையைக் காண வேண்டுமென்றால், புதிய ரீசாஜ் திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதில், ரூ. 949, ரூ. 195, மற்றும் ரூ. 100 ஆகிய திட்டங்களை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படும்.
ரூ,949 திட்டத்தில் ஐபிஎல் பார்ப்பது மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2 ஜிபி டேட்டா உடன் இதில் ஹை ஸ்பீட் 4 G டேட்டா வழங்குகிறது. ஆகமொத்தம் இதில் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் மற்றும் இதில் ஜியோ டிவி, JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது.
ரூ. 195 திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்களுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தில் 15 ஜிபி யின் மொத்தம் டேட்டா வழங்குகிறது. இதனுடன் இந்த திட்டத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது. இதேபோல ரூ. 100 திட்டத்தில் 5ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த இரு திட்டங்களிலும் 90 நாள்களுக்கு இலவசமாக ஜியோ ஹாட்ஸ்டாரை காணலாம்.
அதாவது, ஜியோ சிம்கார்டு வைத்திருப்பவர்கள் ரீசார்ஜ் செய்தாலே அதனுடன் இலவசமாக ஐபிஎல் பார்க்கும் வசதியை ஜியோ வழங்கியுள்ளது.
- நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம்.
- இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
விசாகப்பட்டினம்:
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஐதராபாத் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றது. 2 தோல்வியை சந்தித்தது. பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கும் போக்கை கடைபிடித்து வரும் அந்த அணி முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன்கள் குவித்தது. ஆனால் கடந்த 2 போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது.
இந்த நிலையில் ஐதராபாத் அணி பயிற்சியாளர் வெட்டோரி கூறியதாவது:-
அதிரடியாக விளையாடும் போக்கை மாற்றுவது பற்றி எந்த உரையாடலும் நடக்கவில்லை. அந்த போக்கை நாங்கள் மாற்ற மாட்டோம். நாங்கள் நிச்சயமாக ஒரு ஆக்ரோஷமான விளையாட்டை விரும்புகிறோம். எங்கள் முதல் 3 பேட்ஸ்மேன்கள் விளையாடுவதை பார்த்தால் அது உங்களுக்கு தெரியும்.
இதுபோன்று விளையாடும் போது தோல்வி ஏற்படலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று நான் நம்புகிறேன். 18 ஐ.பி.எல். சீசன்களின் போக்கைப் பார்த்தால், தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடையாத அணிகள் மிகக் குறைவு.
சீசனின் தொடக்கத்தில் ஐதராபாத் இருக்கும் நிலை ஒரு பின்னடைவு அல்ல. நாங்கள் விளையாடும் ஒவ்வொரு முறையும் மிகச் சிறந்த அணி, நன்கு திட்டமிடப்பட்ட அணிகள் மற்றும் மிகவும் திறமையான வீரர்களை எதிர்கொள்கிறோம். நாங்கள் திரும்பி வந்து வெற்றி பெற முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. நாங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாங்கள் விரும்பும் பாணியில் தொடர்ந்து விளையாடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை.
- அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சென்னை அணியின் பினிஷராக செயல்படும் தோனி 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-ம் வரிசையில் இறங்கினார். அப்போது அனைவரும் அது குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அவர் ஏழாம் வரிசையில் பேட்டிங் செய்தார். இருந்தாலும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை.
தோனியின் பேட்டிங் வரிசை குறித்தும், அவர் பேட்டிங் அணுகுமுறை குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-
அவரது பேட்டிங் வரிசை போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரம் சார்ந்தது. இது குறித்த முடிவை தோனி தான் எடுக்கிறார். அவரது உடல் மற்றும் முழங்கால் இதற்கு முன்பு இருந்தது போல் இல்லை. அவர் நன்றாக நடந்தாலும் அதில் சில இடர்பாடுகள் உள்ளன. அவரால் 10 ஓவர்கள் தொடர்ந்து நின்று பேட்டிங் செய்வது முடியாது. அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்.
இன்றைக்குப் போல போட்டி சமநிலையில் இருந்தால் அவர் சற்று முன்பே பேட்டிங் செய்வார். மற்ற வீரர்கள் தங்களின் வாய்ப்புகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, அவர் அதற்கான சமநிலையை சிந்தித்து செயல்படுகிறார்.
நான் கடந்த ஆண்டே கூறினேன், தோனி எங்களுக்கு மிகவும் மதிப்பு மிக்கவர். தலைமை பண்பு மற்றும் விக்கெட் கீப்பிங்கில் அவர் சிறந்து விளங்குகிறார்.
என்று பிளெமிங் கூறினார்.
- சி.எஸ்.கே. அணியை வீழ்த்திய பிறகு இன்ஸ்டாவில் அதிக Follower-களை ஆர்.சி.பி. பெற்றது
- எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி சி.எஸ்.கே. தான்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 17 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அண்மையில் படைத்தது.
அந்த சமயத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 16.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 15.4 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி அடுத்ததாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக ஆர்.சி.பி. அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
அவ்வகையில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியை முந்திய ஆர்.சி.பி அணி புதிய சாதனை படைத்துள்ளது.
தற்போது, 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் ஐபிஎல் அணிகளிலேயே இன்ஸ்டாகிராமில் அதிக பின்தொடர்பவர்களை கொண்ட அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. படைத்துள்ளது.
அதே சமயம் எக்ஸ் பக்கத்தில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை கடந்த ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் குவித்தார்.
- நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 97 ரன்னும், சஷாங்க் சிங் 44 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது.
பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட முதல்போட்டியிலேயே ஷ்ரேயாஸ் அந்த அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார்.
நாளை லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் விளையாடவுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஒரு நபருடன் பைக்கின் பின்னால் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பைக்கை ஓட்டுபவர் இதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
- 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி 81 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
கடந்த போட்டியில் 197 ரன்கள் இலக்கை எட்டமுடியாமல் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி இந்த போட்டியில் 183 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாத 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்து 2 போட்டிகளில் ஏற்பட்ட தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் உள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பின்பு 175 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 9 ஆட்டங்களில் ஒன்றில் கூட சென்னை அணி வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.