search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ipl2025"

    • 42 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது அடிப்படை விலையாக ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார்.
    • இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

    இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரரும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகருமான ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ளார். 42 வயதான அவரது அடிப்படை விலை ரூ.1.25 கோடியாக நிர்ணயம் செய்துள்ளார். ஆண்டர்சன் டி20 போட்டியில் கடைசியாக 2014-ல் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்தது தொடர்பாக சம்ஸ் ஆண்டர்சன் மனம் திறந்து பேசியுள்ளார்.

    ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், "தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. அதனால்தான் ஐபிஎல் ஏலத்தில் நான் பதிவு செய்துள்ளேன். நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்று நம்புகிறேன். இதுவரை எந்த அணியும் என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. ஆனாலும் நம்பிக்கையுடன் ஐபிஎல் ஏலத்திற்கு காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • குஜராத் டைட்டன்ஸ் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ளது.
    • பஞ்சாப் அணியிடம் அதிகபட்சமாக ரூ.110.5 கோடி உள்ளது.

    ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் தான் வெளியிட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளன.

    பஞ்சாப் அணி இரண்டு வீரர்களையும், ஆர்.சி.பி. அணி மூன்று வீரர்களையும், டெல்லி அணி நான்கு வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆறு வீரர்களையும் தக்க வைத்துள்ளது. வீரர்களை தக்க வைத்தது போக ஒவ்வொரு அணியிடமும் புதிய வீரர்களை வாங்குவதற்கு கணிசமான தொகை கையிருப்பு உள்ளது.

    இதில் அதிகபட்சமாக பஞ்சாப் அணியிடம் ரூ.110.5 கோடியும் குறைந்த பட்சமாக ராஜஸ்தான் அணியிடம் ரூ.41 கோடியும் உள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

    இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து பிசிசிஐ சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார்.
    • 2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணி யில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

    தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.

    இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுப்மன்கில் விலகுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

    அகமதாபாத் நகரை மையமாக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஹர்திக்பாண்ட்யா தலைமையில் அறிமுக போட்டியில் அந்த அணி கோப்பையை வென்றது. 2023-ல் 2-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.லில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு தாவினார்.

    இதனால் சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் குஜராத் அணி 'லீக்' சுற்றோடு வெளியேறியது.

    2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார். குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்கிறது. இதே போல ரஷீத்கானும் அந்த அணியில் தக்க வைக்கப்படுகிறார்.

    இதற்கிடையே சுப்மன்கில் ஏலத்தில் வருவதற்கு மிக முக்கியமான அணிகள் விரும்புவதாக குஜராத் அணி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் குஜராத் அணியில் இருந்து வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே லக்னோ அணி நிர்வாகம் நிக்கோலஸ் பூரண், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின்கான், பதோனி ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 5 வீரர்களுக்கும் மொத்தம் ரூ.51 கோடி செலவழிக்கும் என்று தெரிகிறது.

    2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுலை தக்க வைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரு வேளை அவர் தேவைப்பட்டால் ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • 23 கோடி ரூபாய் கொடுத்து ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு
    • அக்டோபர் 31ம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் வெளியிட வேண்டும்

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம்.

    இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணி நிர்வாகமும் வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ கேடு விதித்துள்ளது.

    வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 23 கோடி ரூபாய் கொடுத்து தென்னாபிரிக்காவின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிக் கிளாசனை தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கிளாசனுக்கு அடுத்தபடியாக கேப்டன் பேட் கம்மின்சுக்கும் 18 கோடி ரூபாய் கொடுத்தும் அபிஷேக் சர்மாவுக்கு 14 கோடி ரூபாய் கொடுத்தும் தக்க வைக்கவும் ஐதராபாத் அணி முடிவு செய்துள்ளது.

    மேலும், டிராவிஸ் ஹெட், நிதிஷ்குமார் ரெட்டியையும் தக்க வைக்க ஐதராபாத் அணி திட்டமிட்டு வருவதாகவும் RTM கார்டை பயன்படுத்தி இருவரையும் தக்க வைக்கலாம் என அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

    • ஒவ்வொரு அணியும் UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம்.
    • வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

    முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது.

    இந்நிலையில், வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம், எத்தனை ஆர்டிஎம் கார்டுகளை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடந்தது.

    அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம். சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள UNCAPPED வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம். இதனை குறிப்பிட்ட தொகைக்கு தக்க வைக்கும் RETENTION எனும் முறையிலும், வீரர்களை விடுவித்துவிட்டு அவர்கள் ஏலம் போகும் தொகையை கொடுத்து திரும்பி பெற்றுக்கொள்ளும் RTM எனும் முறையிலும் தக்க வைக்கலாம்.

    வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான மொத்த தொகையாக ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். இது அவரது ஒப்பந்தத் தொகைக்கு கூடுதலாக இருக்கும். அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

    வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்யவில்லையெனில் அடுத்தாண்டு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க முடியாது.

    ஏலத்தில் தேர்வான வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையெனில் அடுத்த 2 ஐபிஎல் தொடர் மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும்

    ஐபிஎல் தொடர் துடங்குவதற்கு முந்தைய 5 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர் uncapped வீரராக அறிவிக்கப்படுவார்.

    இம்பாக்ட் பிளேயர் விதிமுறை 2025 முதல் 2027 வரையிலான காலகட்டம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஐபிஎல் அணிகளுக்கு ரூ.12.60 கோடி போட்டி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த வருட ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் எனவும் 1 முறை ஆர்.டி எம் கார்டு வைத்து வீரரை மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ஐபிஎல் கட்டணம் தொடர்பாக பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "வரும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு தலா ரூ.7.5 லட்சம் வழங்கப்படும். அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ரூ.12.60 கோடி போட்டி கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

    • இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • ஐந்து வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்தான முடிவை பிசிசிஐ விரைவில் அறிவிக்க இருக்கிறது.

    முன்பு நடைபெற்ற மெகா ஏலங்களில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும், இரண்டு ஆர்டிஎம் கார்டுகளை பயன்படுத்தி, மேலும் இரண்டு வீரர்களை வாங்கிக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. இந்த சூழலில் வரும் மெகா ஏலத்திற்கு முன்பு எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.

    ஆர்டிஎம் கார்டுகளை எத்தனை வழங்கலாம் என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியது. இதில் பங்கு பெற்ற அணி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறினர். எனினும் பெரும்பாலான அணிகள் ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொள்ளவும் மூன்று வீரர்களை ஆர்.டி எம் கார்டு வைத்து மீண்டும் வாங்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்கள்.ஆனால் இதற்கு சில அணிகள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இது குறித்து இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ காலம் தாழ்த்தி வந்தது.

    இந்த சூழலில் இம்முறை மெகா ஏலத்தில் ஆர்டிஎம் கார்டு முறை பயன்படுத்தப்படாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டும் அல்லாமல் முன்னணி வீரர்கள் வெறும் ஐந்து வீரர்களை தான் தேர்வு செய்ய முடியும் என்ற எண்ணிக்கையையும் பிசிசிஐ இறுதிச் செய்ய உள்ளதாக கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

    இந்த ஐந்து வீரர்களில் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் அல்லது ஐந்து வீரர்களுமே உள்ளூர் வீரராக இருக்கலாமா என்பது குறித்து பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். மெகா ஏலத்திற்கு முன்பு வெறும் ஐந்து வீரர்களை மட்டும்தான் தேர்வு செய்ய முடியும். ஆர்டிஎம் வசதி கிடையாது என்ற அறிவிப்பு வெளியானால் அது சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்கு அது பெரிய இடியாக வந்து விழும்.

    பிசிசிஐ யின் இந்த முடிவுக்கு ஐபிஎல் அணிகள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×