search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "irukkankudi mariamman"

    • திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி சக்தி ஸ்தலங்களில் ஒன்றான இருக்கன்குடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தின் போது பால், பன்னீர், ஜவ்வாது, தேன், இளநீர், தயிர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவை காண மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவிலுக்கு வந்த பக்தர் கள் அம்மனை வேண்டி ஆயிரம் கண்பானை, தவழும் பிள்ளை, கரும்பு தொட்டில் குழந்தை, அக்கினிச்சட்டி, மாவிளக்கு பறக்கும்காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இன்று மாலை இரண்டு மணிக்கு மேல் ஆடிப்பெரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் அம்மன் ரிஷப வாகன பல்லக்கில் ஊர்வலமாக தெருக்களில் வீதியுலா வந்து ஆற்றில் இறங்கி கோவில் சென்றடையும் நிகழ்ச்சி நடைபெறும்.

    கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பறை, குளியல் தொட்டி, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை, மருத்துவ வசதிக்கான சுகாதார மையங்கள், மற்றும் பாதுகாப்பு வசதிக்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் இரண்டு கூடுதல் சூப்பிரண்டுகள் மற்றும் 4 டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,000-க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவிழா ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • ஆடி கடைசி வெள்ளியன்று பெருந்திருவிழா நடைபெறும்

    இந்தியாவிலேயே தொன்மை வாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான கிராமதேவதைகள் மற்றும் ஒவ்வொரு ஊருக்கும் உரிய சிறப்புப் பெற்ற அம்மன் கோயில்கள் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய சிறப்புகளுடன் திகழ்கின்றன. அதுபோன்று, இயற்கை சூழ்நிலையில் அமைந்த ஒரு மாரியம்மன் கோயில் இருக்கன்குடி என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி என்ற இடத்தில் உள்ள இக்கோயில், சிறியதாக இருந்தாலும் பெரும் புகழ் பெற்று விளங்கி வருகிறது.

    திருச்சி, மதுரை, விருதுநகர் வழியாக சாத்தூரிலிருந்து நேர் கிழக்கே விளாத்திகுளம் வழியே திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இருக்கன்குடி மாரியம்மன் கோயில்.

    தல வரலாறு :

    சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இந்தப்பகுதியில் சாணம் சேகரிப்பதற்காக வந்த ஒரு சிறுமி, தற்போது அம்மன் இருக்கும் இடத்தில் தான் கொண்டுவந்த சாணக் கூடையை வைத்தாள். மீண்டும் அந்தக்கூடையை அவளால் எடுக்க முடியாமல் திண்டாடினாள். கூட்டம் கூடியது. அப்போது அந்தச் சிறுமியின் மீது அம்பாள் அருள் வந்து, தனது திருமேனி சிலை இங்கே புதைந்து கிடக்கின்றது, அதை எடுத்து இந்த இடத்திலேயே நிலைநாட்டி வழிபடுங்கள் என்று வாக்கருளினாள்.

    அங்ஙனமே பூசாரிகள் பூமியைத் தோண்டிப் பார்த்தபோது அங்கு தற்போதுள்ள அம்மன் திருவுருவத்தைக் கண்டெடுத்தனர். அச்சிலையை ஊருக்குள் உள்ள கோயிலில் வைத்து வழிபட்டார்கள்.

    மூன்று தினங்களில் மீண்டும் அச்சிறுமியின் மீது அருள் வந்து, தான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது என்றும், தூய்மையைக் கடைபிடிக்கும் பொருட்டு தனது திருஉருவத்தை பூமியைத் தோண்டி முன்பு எடுத்த இடத்திலேயே மீண்டும் கொண்டு போய் வைத்து வழிபடுங்கள் என்று கூறினாள். இதைத்தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோயில் அமைந்து உள்ள இடத்தில் பிரதிட்டை செய்தனர். அதுமுதல் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

    மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு திருக்கோயில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதன் ஞாபகார்த்தமாக அம்மனின் உற்சவர் சிலை உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று அந்த சிலை ஊரில் உள்ள கோயிலில் இருந்து எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோயிலை அடைகிறது. இருக்கன்குடி கோயிலுக்கு தமிழகமெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

    தல அமைப்பு :

    கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டியதிருக்கிறது. அம்மன் பொன் ஆபரணங்கள் அணிந்து தங்க மேனி உடையவளாக மின்னுகிறாள். அம்மனின் கருணை விழிகளைக் கண்டாலே மெய் சிலிர்க்கிறது.

    பிரகாரத்தைச் சுற்றி காத்தவராயன், பைரவன், வீரபத்திரர், பேச்சியம்மன், முப்பிடாரி அம்மன் ஆகிய சிறிய சன்னதிகள் இருக்கின்றன. இங்கு வந்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் அனவீத்தும் நிறைவேறுகின்றன.

    தலச் சிறப்பு :

    குறை நிவர்த்தி வேண்டி திருக்கோயிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தீர்த்தங்கள் :

    வைப்பாறு, அர்ச்சுனா ஆறு

    திருவிழாக்கள் :

    இடுக்கண் களையும் இருக்கன்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோயிலில் இருந்து அன்னையின் திருமேனி இடப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோயிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் இருக்கன்குடியில் கூடி அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.

    தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வெள்ளம் வண்டிகளிலும் பிற வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

    அம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி இருக்கன்குடி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.

    • இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போது கீழ்க்கண்ட பிரார்த்தனையை சொல்லலாம்.
    • இந்த பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    இருக்கன்குடி மாரியம்மனை வழிபடும் போதோ, வழிபட்ட பிறகோ, கீழ்க்கண்ட பிரார்த்தனையை படித்தால் உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    தாமரை போன்ற அழகான முகத்தையும் மீன் போன்ற அழகான கண்களையும், பஞ்சு போன்றமென்மையான அழகிய பாதங்களையும், வெண்மையான அழகிய பல் வரிசைகளையும் கண்ணாரக் கண்டு மனப்பூர்வமாக உன்னைப் பணிய வேண்டுமானால் மேகம் போன்றகரிய அழகிய கூந்தலையுடைய மாரியம்மையே! நீ தான் அருள வேண்டும்.

    விண்ணுலகைக் காக்கும் தலைவனான இந்திரனும் மற்றதேவர்களும் உன் அருகில் வந்து உன்னுடைய தாமரை போன்ற அழகிய பாதங்களை விரும்பித் துதிப்பார்கள். அதனால் அவர்கள் கண்ணியமாகிற மேம்பாட்டினைப் பெறுவார்கள். தேவர்களுக்கு நீ இவ்வாறு அருள் செய்வதால் கருணைக்கு நீ ஒருத்தியே! உனக்கு நிகர் வேறு யாருமில்லை. மாரிமுத்தே! இத்தகைய உன்னை நான் கண்டு தொழுவதற்காகவே நீ இவ்இருக்கன்குடி மண்ணில் தோன்றி பக்தர்களுக்குக் காட்சி தருகிறாய்.

    இருக்கன்குடி மாரிமுத்தே! நீ கூர்மை நிறைந்த வேல் போன்ற கண் அழகுடைய பெண்களிடத்தில் வைக்கும் ஆசையை மாற்றுவாய்! பெரிய்யும்களவும் இவற்றால் உண்டாகும் கோபங்களும் ஆகிய குற்றங்களைப் போக்குவாய். மை பெரிருந்திய கண்களுடைய இருக்கன்குடித் தெய்வமே! தினமும் உன்னைக் கையாரக் கும்பிடுவோர்களது இடரை நீக்கிக் கருணை செய்வாய்.

    ஒளி பெரிருந்திய பசுங்கொடி போன்ற இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! கடல் அலைபோல ஓயாமல் வளர்ந்து பெருகும் எனது கொடூரமான பாபங்களைத் தீர்ப்பாயாக! அதற்காக காலை, மதியம், மாலை இம்முப்போதுகளிலும் என் முன் வந்து அருள் செய்ய வேணுமாய் வேண்டுகிறேன்.

    மங்கையர் தலைவியே! இருக்கன்குடி மாரிமுத்தே! என் அருமைத் தாயே! குங்குமம் பூசப்பெற்ற தனங்களையுடைய கொடி போன்ற மெல்லிய உடல் அழகு வாய்ந்த பெண்களிடம் வைக்கும் ஆசை வழியாகப் புகுவான் எமதேவன். அதனால் இடையூறுகளை அடையும் பிறவியாகிற உடல் ஏற்படும். அதில் பிணி பிசி, மூப்பு என்ற துயர்கள் உண்டாகும். அத்துயரை சூரியனுக்கு எதிரில் பனி போவதுபோல அம்மே! நீ போக்கி அருள வேண்டுகிறேன்.

    'பிறப்பு எடுத்தது பிறப்பை முடிப்பதற்காகவே என்று எண்ணாமல், மேலும்மேலும் பற்பல பிறப்புகளை எடுப்பதற்கு காரணமான வினைகளைச் செய்வதால் மாயாத மாயப் பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. இப்பிறவி நோயைத் தீர்த்துக் கொள்ள நிதி படைத்தவர்தான் தர்மங்கள் செய்து நல்ல வழி தேடிக் கொள்ளலாம். ஆனால் 'உலோபம் என்ற கருமித்தனத்தால் அவ்வாறு செய்வதில்லை. மனதால் கூட ஒரு சிறு பெரிருளையும் பிறருக்குக் கொடுக்க மாட்டாத உலோபியராய் வாழ்வர்.

    அத்தகைய உலோபியரது செல்வம் அவருக்கு பயன்படாமல் அவரை விட்டுவிட்டு மாயமாய் மறைந்து போவது நீதிநூல் வழக்கு. அதுபோல என்னுடைய வினைகளும் என்னை விட்டு அகல்வதற்குத் தாயே! நீ அருள் செய்ய வேண்டும். மனம் சலியாமலும் உன்னுடைய அழகிய முகம் கோணாமலும் உனது வாயார ஒரு நன்மொழி கூறுவாயாக! அதாவது 'உன்பாவங்கள் கழியக் கடவுவதாக' என்று ஒரு அருள்மொழி கூறுவாயாக.

    இருக்கன்குடியில் அமர்ந்தருளும் மாரிமுத்தே! வர்ணங்கள் நிறைந்த அழகிய பட்டாடை அணிந்திருப்பவளே! உன்னைத் தினமும் நூறு தடவை பணிந்து வழிபடுவேன். இவ்வாறு வேறு ஒரு தெய்வத்தையும் நான் பணிய மாட்டேன். இத்தகைய என்னைத் தந்தையும் தாயும் குழந்தைக்கு அருள் செய்வதுபோல் நீ எனக்கு இரக்கம் காட்டித் தினமும் என்முகம் பார்த்து அருள் தருவாயாக.

    மத்த மலரையும், பிறையையும், சடையில் உடையவளே இருக்கன்குடியில் அமர்ந்திருக்கும் மாரிமுத்து! எத்தனையோ பல தலங்களில், 'மாரியம்மன்' என்னும் உன் திருநாமத்தின் புகழ் பரவியிருக்கிறது. அத்தலங்களில் போய் வழிபட்டாலும் அவ்வழி பட்டவர்களுக்கு இடர்கள் நீங்குவது இத்தலம் வந்து வழிபட்ட பிறகுதான். அருள் நிறைந்த இத்தலத்தில் வந்து பணிந்தவர்களுக்கே இடர் நீங்கும் என்றதால் இதன் பெருமைக்கு ஈடுவேறில்லை.

    அழகிய உருவமுடையவளே! சிவபெருமானின் ஆசைக்கு உரியவளே! தினமும் உனது அழகிய பாதத் தாமரைகளை நினைந்து உருகிப் பக்தியுடன் வழிபடுவோர்களது துன்பங்களை நீக்கி இன்பத்தைக் கொடுப்பாய். அவ்வாறே எனக்கும் மனம் வைத்து அருள் செய்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.

    உண்டவருக்கு வயிறு நிறைந்து பசி தீர்வதுபோல உன்னைக் காண வேணும் என்னும் பசியோடு வந்தவருக்கு உன்னைக் கண்டதும் மனநிறைவு உண்டாகும் என்னும் எண்ணத்தில் உன்னுடைய பக்தர்கள் மனம் கசிந்து உன்னைக் கொண்டாடிக் கும்பிடுவர். நீயும் அவர்கள் எண்ணுவது போல் அவர்களது துன்பங்களை அகற்றி அவர்களுக்கு இன்பமளிப்பாய். நீ மிகவும் மென்மையான தோற்றமுடையவள். வண்டுகள் விளையாடும் அழகிய சோலை சூழ்ந்த இருக்கன்குடியில் எழுந்தருளி இருக்கும் தேவியே! அருள் செய்வாய்.

    வஞ்சனை செய்தும், உன்னை வணங்காதவருமான பாவியர்கள் அழிந்திட அவர்களது காடு போன்ற நெஞ்சைப் பிழிந்து குடலை மாலையாகச் சூடும் நிமலியாக விளங்குகிறாய். உன்னுடைய நல்ல பாதங்களைச் சிறிதும் மறவாத உன்னுடைய துன்பங்களை அகற்றுவாயாக. வஞ்சிக்கொடி போன்ற இடையை உடையவளே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே!

    அம்பிகையே! மங்கள உருவமே! என் தாயே! இருக்கன்குடி மாரிமுத்தே! வானவர்கள் உனக்குச் சேவை செய்யநீ, சூரியனைப் போன்ற சூலத்தையும், வேம்பு இலையையும், தண்டத்தையும் அழகிய கைகளில் ஏந்தி சிங்க வாகனத்தில் அமர்ந்து என் முன்னே வருகை தந்து என்னைக் காத்தருள வேண்டுகிறேன்.

    இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! நெஞ்சால் நினைக்க வேண்டிய உன்னை நினையாமலும், இருகண்களாலும் பார்க்க வேண்டிய உன்னுடைய தாமரைப்பாதங்களைப் பாராமலும் இரு கைகளினால் உன்னைத் தஞ்சமென்று தலைமேல் கூப்பிக் கும்பிடாமலும் வறிதே திரியும் தீயவர்களுக்கு நீ வஞ்சகம் செய்பவளாய் இருக்கிறாய்.

    இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே உன்னைத் தலையால் வணங்கியும், நாவால் துதித்தும் தலைமேல் கைகூப்பித் தொழுதும், நெஞ்சால் நினைந்தும் இவ்வாறு கசிந்துருகும் அடியவரது துயரை, அரத்தால் லயப் பெரிடியைச் சிந்துகிறது போலப் போக்கி நல்லவரமளித்து நீ அவரைக் காப்பாற்றுவளாயிருக்கிறாய்.

    வாசம் கமழ்கின்றமாலையை அணிந்தவளே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! பிறரை வஞ்சிக்கும் எண்ணத்துடன் பலப்பல வேடங்களைப் பூணும் அறிவிலிகளோடு நட்புக் கொண்டு அவர்களோடு திரியாமல் காப்பாற்றுவாய். உன்னைக் காண நினைந்தும், மனப்பூர்வமாக உன்னிடம் பக்தி கொண்டும் உன் திருவடிகளைத் துதிக்கும் அடியவர்கள் வேண்டும் வரங்களை அவர்களுக்கு நீ அருளுவாய்.

    என் தாயே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே தாய் அபிராமியே! உன்னுடைய தாமரைப் பாதங்களையும் உன் சிரசில் விளங்கும் அழகிய பருத்த சடையையும், இனிமை பெரிருந்திய அமுதம் பெரிழியும் திருக்கண்களையும், விளங்குகின்ற திருக்கரங்களையும், காதில் பெரிருந்திய குண்டலத் தோடுகளையும் நான் காண்பதற்கு நீ கருணை செய்வாயாக.

    பரமேஸ்வரியே! உன்னை வழிபட வல்லவர்க்கு உயிராய் இருப்பவளே! இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! நான் என் வாழ்நாளில் நல்லாரைக் கண்டு உறவு செய்யாத பாபத்தையும், நீண்ட காலமாகப் பெரில்லாத பாவியர்களோடு உறவு செய்த பாபத்தையும் மற்றும் செய்த பாவங்களையும் பெரிறுத்து எனது துயரை நீக்கியருளுவாயாக.

    வீண் பேச்சுப்பேசி உன்னைப் பணியாத முரடர்களைத் தீப்பந்தாக்கிக் கழு முனையில் ஏற்றுவாய். முப்புரமும் எரித்த தேவனின் தேவியே! நீ எனக்குத் தாயகம் என்று உன்னை நான் அடைந்தேன். நீ என்னுடைய வலிய பாபங்களை அகற்றுவாயாக! நீ மகா விஷ்ணுவான மாயவனுடைய தங்கையாகப் போற்றப்படுகிறாய். நீ எனக்குத் தாயாகவும் விளங்குகிறாய் இருக்கன்குடி மாரிமுத்தே!

    ''சுந்தரி, அபிராமி, அம்பிகை, சூலி'', என்று அரியும், நான் முகனும், மற்றும் பல தேவர்களும் உன்னருகில் வந்து உன்னை வாழ்த்துவார்கள். சுந்தரி! சூலி! வராகி! முக்கண்ணி! கவுரி! பல மந்திரரூபி! இருக்கன்குடி மாரிமுத்தே! நீ எனக்குத் தந்தையும் தாயுமாய் விளங்குகிறாய்.

    இருக்கன்குடியில் அமர்ந்துள்ள மாரிமுத்தே! நீ பூப்போன்ற அழகிய பாதங்களை உடையவள். மனக்குறை வில்லாதவள். காதைத் தொடும் மீன் போன்ற கண்ணழகையுடையவள். கடகத்தை அணிந்த கைகளை உடையவள். இத்தகைய நீ தெய்வமேயன்றி வேறில்லை. கருமையும் நீலமும் கலந்த நிறத்தையுடைய தாயே! என்னைக் காப்பாற்றுவாயாக. *

    • இருக்கன்குடி மாரியம்மனை பற்றிய 50 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.
    • இத்தலம் பற்றிய கூடுதல் தகவல்களை www.irukkangudi-mariamman.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.

    1.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    2. சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு உள்ள சாலைவசதி சிறப்பாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் இத்தலத்தை மிக எளிதாக சென்று அடையலாம்.

    3. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு வைப்பாறு, அர்ச்சனா நதியில் புனித நீராடிய பிறகே அம்மனை தரிசித்தனர். தற்போது அணை கட்டப்பட்டு விட்டதால் ஆண்டில் 90 சதவீதம் நாட்கள் இரு நதிகளிலும் தண்ணீர் ஓடுவது இல்லை. எனவே பக்தர்கள் குறை தீர்க்க நதிகளில் சிறுசிறு குடிசைகள் அமைத்து பம்ப்-செட் வைத்துள்ளனர். கட்டணம் செலுத்தி குளித்துவிட்டு அம்மனை தரிசிக்கலாம்.

    4. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே பூஜைப் பெரிருட்கள் வெளியில் இருந்து வாங்கி வர வேண்டியதில்லை.

    5. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறை இப்போதும் அப்படியே உள்ளது.

    6. கருவறையில் உள்ள பராசக்தி மாரியம்மன் சிலையை சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் வடிவமைத்ததாக சொல்கிறார்கள்.

    7. இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது. அருள் பார்வை நிறைந்தது. அவள் முகத்தை எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தாலும் பக்தர்கள் மனதில் சலிப்பே வராது.

    8. பூசாரி தீபாராதனை காட்டும் போது மாரியம்மன் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் அவள் கருணை பெரிங்க நம்மை பார்ப்பது போல இருக்கும்.

    9. கோவிலை சுற்றி காது குத்த, மொட்டை போட, விடலை தேங்காய் எறிய, ஆடு, கோழி சுத்தி விடுவதற்கு என்று தனித்தனியே வசதியான இடங்கள் உள்ளன.

    10. பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 26 இடங்களில், சிறு, சிறு மண்டபங்கள் உள்ளன. என்றாலும் வசதியாக தங்கி ஓய்வு எடுக்க விரும்பும் பக்தர்கள் சாத்தூர் அல்லது விருதுநகரில் லாட்ஜூகளில் தங்குவதே நல்லது.

    11. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அம்மனிடம் வேண்டிக்கொண்டு மொட்டை போடுகிறார்கள். தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை மொட்டை போடுகிறார்கள். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.

    12. நிறைய பக்தர்கள் மேள, தாளம், முழங்க தீ சட்டி எடுத்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் கோவிலில் எப்போதும் மேள சத்தம் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.

    13. இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை. அர்ச்சுனா நதியும் வைப்பாறும் தீர்த்தங்களாக உள்ளன.

    14. கோவில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்டதாக அமைந்துள்ளது.

    15. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாடு செய்வார்கள். அப்போது பச்சைபட்டு உடுத்தி அம்மன் வீதி உலா வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.

    16. எந்த அம்மன் தலத்திலும் ஆடு, கோழி பலியிட மாட்டார்கள். ஆனால் இருக்கன்குடியில் ஆடி மாத விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும்.

    17. உலக நன்மைக்காக கடந்த ஆண்டு இத்தலத்தில் 10008 சங்கா பிஷேகம் நடத்தப்பட்டது.

    18. கோவிலை சுத்தமாக வைத்திருக்கும் பெரிறுப்பை திருப்பதி பத்மாவதி நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். எனவே கோவில் எப்போதும் சுத்தமாக உள்ளது.

    19. இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி கிராமத்து மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

    20. இந்தக்கோவிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப்பகுதி மக்களிடம் இருக்கிறது.

    21. இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்தப் பூசாரிப் பெண்ணின் குடும்பத்தினர் வழியில் வந்தவர்கள் இந்தக்கோவிலின் பரம்பரைப்பூசாரிகளாகவும், கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து நிர்வகித்து வந்தனர்.

    22.தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை இக்கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட பின்பு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்த குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதுடன் அறங்காவலர் பெரிறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    23.கோவிலின் தெற்குப்பக்கம் வைப்பாறு, வடக்குப்பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கைகுடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது.

    24. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

    25. அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கன் பானை எடுத்து வலம் வருதல் போன்றவைகள் மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.

    26. இங்கு குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.

    27.உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர்.

    28. இதுதவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது. (பெரிதுவாக எந்த மாரியம்மன் கோவில்களிலும் ஆடு, கோழி போன்றவைகளை உயிர்ப்பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தக்கோவில்களில் இருக்கும் கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களுக்குதான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது).

    29. தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    30. இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.

    32.அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    33.சென்னை மாகாண கமிஷனர் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இனாம் மானியமாக 49 ஏக்கர் 19 செண்டும், ரொக்க மானியமாக ரூ.5-ம் கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன.

    34. இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.

    35.1605-ம் ஆண்டு மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்து வந்தனர்.

    36. இருக்கன்குடி மாரியம்மன் தனக்கு ஆடி மாதம் பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு முதல் அங்கு ஆடி பிரமோற்சவம் நடந்து வருகிறது.

    37. சித்தார்த்தி ஆண்டில் (1093) சி.காளியப்ப நாடார் என்பவரால் ஓடு போட்ட மடம் ஒன்று அம்மனுக்கு உபயமாக கட்டி கொடுக்கப்பட்டது.

    38. பாலை யம்பட்டி பெரியி லாந்தாஸ் என்ப வர் அம்மன் மீது கீர்த்தனம் பாடி உள்ளார்.

    39. முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை மாலை பதிகம் செய்துள்ளார்.

    40. 1925-ம் ஆண்டு துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா ராஜா என்பவர் 'செந்தமிழ் பதிகம்' பாடி உள்ளார்.

    41. சாத்தூர் தொழில் அதிபர் ஒருவர் ரூ.4 லட்சம் செலவில் இத்தலத்து அம்மனுக்கு தங்க கவசம் செய்து கொடுத்துள்ளார்.

    42. பழனி கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    43. மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட மக்கள் மத்தியில் இத்தலம் மிகச் சிறந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது.

    44. இருக்கன்குடி மாரியம்மன் தென்மாவட்ட பக்தர்களின் கனவில் தோன்றி உத்தரவிட்டதற்கு பல நூறு ஆதாரங்கள் உள்ளன.

    45. நாளுக்கு நாள் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியபடி உள்ளது.

    46. ஆதி காலத்துக்கு பெருமை வாய்ந்த இத்திருக்கோவிலில் ராஜகோபுரமும், தேரும் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அம்பாள் அருளால் இந்த குறைகள் வெகு விரைவில் தீர உள்ளன.

    47. அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பும் தேதியை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட நாளில் கட்டளைத்தாரர் சார்பாக அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி அன்றைய கட்டளைத் தாரர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதம் அனுப்பப்படுகிறது.

    48. தை, பங்குனி, ஆடி மாதங்களில் இத்தலத்தில் சிறப்பான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

    49. இத்தலம் பற்றிய கூடுதல் தகவல்களை www.irukkangudi-mariamman.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.

    50. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் முகவரி வருமாறு:- அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இருக்கன்குடி, சாத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டம்.

    போன்:04562-259614, 04562-259864, 04562-259699.

    • இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது.
    • இருக்கன்குடி மாரியம்மனை வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும்.

    இருக்கன்குடி மாரியம்மா! கண் திறந்து பாருங்கம்மா!

    ஏற்றமிகு வாழ்க்கையை எல்லோருக்கும் தாருமம்மா!

    இருக்கன்குடி மாரியம்மா...

    என்ன தவம் செய்தோமோ... அன்னை முகம் காண்பதற்கு !

    அவளை கண்டாலே வாழ்வு வரும் அன்பருக்கு!

    இருக்கன்குடி மாரியம்மா...

    எத்தனையோ வழிபாடு

    அன்னைக்கு முன்னாலே ! எல்லாமே மாறும் அவளைக் கண்டாலே!

    இருக்கன்குடி மாரியம்மா...

    குலம் காக்க குழந்தை வரம் தருவாள்! நலம் சேர்க்க நம்முடனே இருப்பாள்!

    இருக்கன்குடி மாரியம்மா...

    • ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப்பட்டது.
    • ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப்பட்டது.

    நலமைமிகுந் திடுமிருக்கங் குடியினிலெந் நாளும் வளர் ஞான தீப

    நிலமிசையுன் னடிமலரை யனுதினமும் நினைக்குபவர் நெஞ்சினிற்சஞ்

    சலமதற நலமதிடு தயாபரியே யிதுசமயம் தனைய நானுன்

    தலமகிமை கூறவருள் தந்துதவு தாய்மாரி யான நீயே!

    சதுரகிரி மலையில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு சிவயோக ஞானசித்தர் என்று ஒரு சித்தர் வாழ்ந்து வந்தார். அம்பிகையை நேரில் பார்த்து தரிசித்து நிஷ்டைபெற அவர் ஆசைப்பட்டார். இதற்காக அவர் கடும் தவம் இயற்றினார். அப்போது அம்பிகை, என்னை காண வேண்டுமானால் அர்ஜுனா நதி, வைப்பாறு சந்திக்கும் இடத்துக்கு வா' என்று அசரீரியாக உத்தரவிட்டாள்.

    இதை ஏற்று சித்தர் அங்கு சென்றார். அங்கு அவருக்கு அம்பிகை காட்சி கொடுத்தாள். அந்த காட்சியை வைத்து சித்தர் அம்பிகையின் திருமேனியை உருவாக்கினார். பிறகு அவர் அங்கேயே நிஷ்டையாகி விட்டார். கால சுழற்சியில் இரு ஆறுகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சித்தர் படைத்த அம்மன் சிலை பூமிக்குள் புதையுண்டு போனது.

    சில நூற்றாண்டுகள் அந்த அம்மன் சிலை பூமிக்குள்ளேயே இருந்தது. நாளடைவில் அந்த பகுதி காடுகள் கொண்ட வனமாகிப்போனது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கன்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் தங்களது ஆடு, மாடுகளை அந்த காட்டுக்குள் ஓட்டிச் சென்று மேய விடுவது வழக்கம். ஏராளமான மாடுகள் மேய செல்வதால், அவை போடும் சானத்தை எடுக்க இருக்கன்குடி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் அந்த காட்டுக்குள் சென்று வருவார்கள்.

    ஒருநாள் இருக்கன்குடி கிராமத்தை சேர்ந்த ராமசாமி பிள்ளையின் மனைவி பரிபூரணத்தம்மாள் என்பவரும் அந்த காட்டுக்குள் சானம் எடுக்க சென்றார். கூடை நிறைய சானத்தை நிரப்பிய அவர் கூடையை தூக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. கூடையில் நிறைய சானம் இருப்பதால்தான் எடை அதிகமாகி விட்டதோ என்று சந்தேகப்பட்ட அவர், கூடையில் இருந்து பாதி சானத்தை கழித்தார்.

    அதன் பிறகும் அவரால் அந்த கூடையை தூக்க இயலவில்லை. பயங்கரமாக கனத்தது. பரிபூரணத்தம்மாளுக்கு இது புரியாத புதிராக இருந்தது. அவருடன் வந்த பெண்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையே இதுபற்றிய தகவல் இருக்கன்குடி முழுவதும் பரவியது. ஊர் பெரியவர்களும், பெரிது மக்களும் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சான கூடையை எடுக்க முயன்றனர். அவர்களாலும் கூடையை தூக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பரிபூரணத் தம்மாள் திடீரென அருள் வந்து சாமி ஆடினார். அவர், நான் மாரியம்மன் வந்து இருக்கிறேன். என் திருமேனி இந்த கூடைக்கு கீழ் புதைந்து இருக்கிறது. இங்கிருந்து அதை தோண்டி எடுத்து வழிபடுங்கள். உங்கள் குறைகளை எல்லாம் நான் தீர்த்து வைப்பேன்' என்றார். உடனே ஊர்மக்கள் அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தனர். அம்மன் சொன்னது போலவே அங்கு மாரியம்மனின் திருமேனி இருந்தது. இதை கண்டதும் ஊர் மக்களுக்கு ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

    பரிபூரணத்தம்மாளிடம் ஊர்க்காரர்கள் மெல்ல தயங்கியபடி, 'அன்னையே, தாங்கள் யாரோ? நாங்கள் ஏதும் செய்ய வேண்டுமா... அதை திருஉளம் பற்றி சொல்ல வேண்டும் என்றனர். உடனே பரிபூரணத்தம்மாள், 'அன்பர்களே... நான் ஜெனித்தது காஞ்சீபுரம். என் பெயர் கண்ணனூர் மாரி. சமயபுரம் மாரி என்றும் சொல்வார்கள்... இன்னும் சில வேறு பெயர்களும் எனக்கு உள்ளது. இதே இடத்தில் இருந்து ஒரு பர்லாங்குக்கு தென் மேற்கில் என்னைக் கிராம தேவதையாக வைத்து வெகுகாலம் பூஜித்து வந்தனர். ஆற்று வெள்ளத்தில் கோவில் சேதம் அடைந்தது. சில ஜனங்கள் ஊரை விட்டு வெளியேறி சென்று விட்டனர்.

    மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நான் இந்த இடத்தில் மணலால் மூடப்பட்டு இருந்தேன். இனி என் பெயர் துலங்கவும் என்னை நம்பும் பக்தர்களுக்கு சேமம் கொடுக்கவும், உலக மக்களை காக்கும் பெரிருட்டு தோன்றியுள்ளேன்' என்றார். அடுத்து பரிபூரணத் தம்மாளிடம், சரி நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டனர். அதற்கு பரிபூரணத்தம்மாள், 'எனக்கு சன்னதி அமையுங்கள். என் சிலையை வைத்து பூஜிப்பவர்களின் வம்சத்தை எவ்வித இடையூறும் இன்றி புத்திர சம்பத்துடனும் பரம்பரை செல்வங்களோடும் என்றென்றைக்கும் பாதுகாப்பேன். இது முக்காலும் சத்தியம், சத்தியம்' என்றார்.

    பிறகு பரிபூரணத்தம்மாள், 'என்னை பூஜிக்க முன் வருவது யார்? சொல்லுங்கள் வலக்கை தருகிறேன்' என்றார். ஊர்மக்கள் அனைவரும் அமைதியாக நின்றனர்.

    அப்போது பரிபூரணத்தம்மாள், தன் கணவர் ராமசாமி பிள்ளையிடம் கேட்க, அவர் கொஞ்சமும் தயங்காமல் 'எல்லாம் ஈசுவரி செயல்' என்று கை கொடுத்தார். பின்னர் அவர் தன் வலது தொடையை கீறி அங்கிருந்த அம்மன் சிலைக்கு ரத்த அபிஷேகம் செய்தார். இதையடுத்து அம்மன் சிலை பூமியில் இருந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டது.

    அடுத்து இந்த சிலையை எந்த இடத்தில் வைப்பது என்ற கேள்வி எழுந்தது. பரிபூரணத்தம்மாள் மீண்டும் சாமியாடி அருள்வாக்கு கூறினார். பக்த கோடிகளே, ஒரு பக்தன் வெகுகாலமாக என்னை நோக்கி தவம் இயற்றினான். அந்த ஞானசித்தன் இருக்கும் இடத்தில் எனக்கு கோவில் அமையுங்கள்' என்றார். ஆனால் இது ஊர் மக்களுக்கு புரியவில்லை. எனவே அந்த சிலையை ஊருக்குள் எடுத்து சென்று வைத்து வழிபட்டு வந்தனர். அடுத்த மூன்றாவது நாள் பரிபூரணத்தம்மாளுக்கு மீண்டும் அருள் வந்தது.

    'பக்தர்களே... உலக்கை சத்தமும், முறம் சத்தமும் என் செவி புகாதிருக்க வேண்டும். எனவே என்னை கண்டெடுத்த பகுதியில் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்' என்றார். அவர் மேலும் கூறுகையில், எனக்கு அமைக்கப்படும் ஆலயத்தில் கொடி மரம், ரிஷபம், பலிபீடம், சுற்றிலும் 21 பந்தி தெய்வங்களும் வலதுபுறம் கருப்பசாமி கோவில் அமைக்க வேண்டும் என்றார். அம்மன் உத்தரவிட்டப்படி அந்த புண்ணிய பூமியில் கோவில் கட்டும் பணி தொடங்கியது.

    ஒரு கருவறை, சிறிய முன் மண்டபம் என்று மிக, மிக சிறிய அளவில் அந்த கோவில் கட்டப்பட்டது. 1545-ம் ஆண்டு 119 சுபகிருது வருஷம், சித்திரை மாதம் பூர்வ பட்சம், சுக்கிரவாரம், உத்திர நட்சத்திரத்தில் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் சிவபோக ஞானசித்தர் நிஷ்டையாகி இருந்த இடத்தில் மாரியம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது கிராம அதிகாரிகளும், ஊர் பெரியவர்களும் ராமசாமி பிள்ளையிடம், மாரியம்மன் திருவாக்கு அருள்படி நீயே அடிமை பூண்டவன். எனவே இன்று முதல் உனக்கு 'மாரியம்மன் கோவில் பூசாரி' என்ற பட்டத்தை தருகிறோம் என்றனர்.

    ராமசாமி பிள்ளையும் பூசாரி பட்டத்தை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை அறங்காவலர்களாக கைங்கர்யம் செய்து வருகிறார்கள். அம்மன் திருமேனி 3 நாட்கள் ஊருக்குள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உற்சவர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆடி மாதம் நடக்கும் பிரமோற்சவ விழாவின் போது மட்டும் உற்சவர் கடைசி வெள்ளிக்கிழமை ரிஷப வாகனத்தில் வந்து, இந்த கோவிலில் ஒருநாள் தங்கி விட்டு செல்வார். *

    • இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது.
    • இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை.

    1.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது.

    2. சாத்தூரில் இருந்து இருக்கன்குடிக்கு உள்ள சாலைவசதி சிறப்பாக இருப்பதால் வாகனங்களில் செல்பவர்கள் இத்தலத்தை மிக எளிதாக சென்று அடையலாம்.

    3. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு வைப்பாறு, அர்ச்சனா நதியில் புனித நீராடிய பிறகே அம்மனை தரிசித்தனர். தற்போது அணை கட்டப்பட்டு விட்டதால் ஆண்டில் 90 சதவீதம் நாட்கள் இரு நதிகளிலும் தண்ணீர் ஓடுவது இல்லை. எனவே பக்தர்கள் குறை தீர்க்க நதிகளில் சிறுசிறு குடிசைகள் அமைத்து பம்ப்-செட் வைத்துள்ளனர். கட்டணம் செலுத்தி குளித்துவிட்டு அம்மனை தரிசிக்கலாம்.

    4. இருக்கன்குடி மாரியம்மன் கோவிலை சுற்றி சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. எனவே பூஜைப் பெரிருட்கள் வெளியில் இருந்து வாங்கி வர வேண்டியதில்லை.

    5. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட கருவறை இப்போதும் அப்படியே உள்ளது.

    6. கருவறையில் உள்ள பராசக்தி மாரியம்மன் சிலையை சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் வடிவமைத்ததாக சொல்கிறார்கள்.

    7. இருக்கன்குடி மாரியம்மன் சிலை கம்பீரமானது. அருள் பார்வை நிறைந்தது. அவள் முகத்தை எத்தனை மணி நேரம் பார்த்துக்கொண்டே இருந்தாலும் பக்தர்கள் மனதில் சலிப்பே வராது.

    8. பூசாரி தீபாராதனை காட்டும் போது மாரியம்மன் முகத்தை உன்னிப்பாக கவனித்தால் அவள் கருணை பெரிங்க நம்மை பார்ப்பது போல இருக்கும்.

    9. கோவிலை சுற்றி காது குத்த, மொட்டை போட, விடலை தேங்காய் எறிய, ஆடு, கோழி சுத்தி விடுவதற்கு என்று தனித்தனியே வசதியான இடங்கள் உள்ளன.

    10. பக்தர்கள் வசதிக்காக கோவிலை சுற்றி 26 இடங்களில், சிறு, சிறு மண்டபங்கள் உள்ளன. என்றாலும் வசதியாக தங்கி ஓய்வு எடுக்க விரும்பும் பக்தர்கள் சாத்தூர் அல்லது விருதுநகரில் லாட்ஜூகளில் தங்குவதே நல்லது.

    11. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் அம்மனிடம் வேண்டிக்கொண்டு மொட்டை போடுகிறார்கள். தினமும் சுமார் 2 ஆயிரம் பேர் வரை மொட்டை போடுகிறார்கள். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.

    12. நிறைய பக்தர்கள் மேள, தாளம், முழங்க தீ சட்டி எடுத்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இதனால் கோவிலில் எப்போதும் மேள சத்தம் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது.

    13. இந்த ஆலயத்தில் புனித நீர் தீர்த்தங்கள் என்று எதுவும் இல்லை. அர்ச்சுனா நதியும் வைப்பாறும் தீர்த்தங்களாக உள்ளன.

    14. கோவில் கிழக்கு மேற்காக 178 அடியும், வடக்கு தெற்காக 149 அடியும் கொண்டதாக அமைந்துள்ளது.

    15. ஆடி வெள்ளிக்கிழமைகளில் இத்தலத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபாடு செய்வார்கள். அப்போது பச்சைபட்டு உடுத்தி அம்மன் வீதி உலா வரும் காட்சி அற்புதமாக இருக்கும்.

    16. எந்த அம்மன் தலத்திலும் ஆடு, கோழி பலியிட மாட்டார்கள். ஆனால் இருக்கன்குடியில் ஆடி மாத விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படும்.

    17. உலக நன்மைக்காக கடந்த ஆண்டு இத்தலத்தில் 10008 சங்கா பிஷேகம் நடத்தப்பட்டது.

    18. கோவிலை சுத்தமாக வைத்திருக்கும் பெரிறுப்பை திருப்பதி பத்மாவதி நிறுவனத்தினர் மேற்கொண்டுள்ளனர். எனவே கோவில் எப்போதும் சுத்தமாக உள்ளது.

    19. இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி கிராமத்து மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

    20. இந்தக்கோவிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப்பகுதி மக்களிடம் இருக்கிறது.

    21. இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவரான இந்தப் பூசாரிப் பெண்ணின் குடும்பத்தினர் வழியில் வந்தவர்கள் இந்தக்கோவிலின் பரம்பரைப்பூசாரிகளாகவும், கோவிலின் பரம்பரை அறங்காவலர்களாகவும் இருந்து நிர்வகித்து வந்தனர்.

    22.தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை இக்கோவில் நிர்வாகத்தை எடுத்துக்கொண்ட பின்பு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மட்டும் அந்த குடும்பத்தினருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதுடன் அறங்காவலர் பெரிறுப்புகளும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

    23.கோவிலின் தெற்குப்பக்கம் வைப்பாறு, வடக்குப்பக்கம் அர்ச்சுணன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால் இருக்கங்கைகுடி என்று இருந்து பின்னால் அது இருக்கன்குடி என்றாகி விட்டது.

    24.இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வருபவர்கள் விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், பூஜை செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.

    25.அக்கினிச் சட்டி எடுத்தல், ஆயிரங்கன் பானை எடுத்து வலம் வருதல் போன்றவைகள் மூலம் அம்மனை வழிபடுகின்றனர்.

    26. இங்கு குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டி தொட்டில் கட்டி வேண்டுகின்றனர்.

    27. உடல் குறைபாடுள்ளவர்கள் உருவம் செய்து வைத்து வழிபடுகின்றனர்.

    28.இதுதவிர கயிறு குத்துதல், ஆடு, கோழி பலியிட்டு அசைவ உணவு சமைத்து அன்னதானம் செய்தல் போன்றவையும் செய்யப்படுகிறது. (பெரிதுவாக எந்த மாரியம்மன் கோவில்களிலும் ஆடு, கோழி போன்றவைகளை உயிர்ப்பலியிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இந்தக்கோவில்களில் இருக்கும் கருப்பசாமி போன்ற காவல் தெய்வங்களுக்குதான் உயிர்ப்பலியிடும் வழக்கம் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் இது மாரியம்மனுக்குச் செய்யும் வேண்டுதலாகிக் கொண்டிருக்கிறது).

    29.தற்போது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் அதிகமான மக்கள் இந்தக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

    30.இத்தலத்தில் உள்ள வயன மண்டபத்தில் 20 நாட்கள் தங்கி 6 பூஜைகளுக்கும் போய் தீர்த்தம் எடுத்து தடவினால் கண்பார்வை கிடைக்கும்.

    32.அம்மன் தோன்றிய இடத்தில் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    33.சென்னை மாகாண கமிஷனர் 1882-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு இனாம் மானியமாக 49 ஏக்கர் 19 செண்டும், ரொக்க மானியமாக ரூ.5-ம் கொடுத்ததாக குறிப்புகள் உள்ளன.

    34. இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.

    35.1605-ம் ஆண்டு மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்து வந்தனர்.

    36. இருக்கன்குடி மாரியம்மன் தனக்கு ஆடி மாதம் பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு முதல் அங்கு ஆடி பிரமோற்சவம் நடந்து வருகிறது.

    37. சித்தார்த்தி ஆண்டில் (1093) சி.காளியப்ப நாடார் என்பவரால் ஓடு போட்ட மடம் ஒன்று அம்மனுக்கு உபயமாக கட்டி கொடுக்கப்பட்டது.

    38. பாலை யம்பட்டி பெரியி லாந்தாஸ் என்பவர் அம்மன் மீது கீர்த்தனம் பாடி உள்ளார்.

    39. முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை மாலை பதிகம் செய்துள்ளார்.

    40. 1925-ம் ஆண்டு துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா ராஜா என்பவர் 'செந்தமிழ் பதிகம்' பாடி உள்ளார்.

    41. சாத்தூர் தொழில் அதிபர் ஒருவர் ரூ.4 லட்சம் செலவில் இத்தலத்து அம்மனுக்கு தங்க கவசம் செய்து கொடுத்துள்ளார்.

    42. பழனி கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

    43. மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட மக்கள் மத்தியில் இத்தலம் மிகச் சிறந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது.

    44. இருக்கன்குடி மாரியம்மன் தென்மாவட்ட பக்தர்களின் கனவில் தோன்றி உத்தரவிட்டதற்கு பல நூறு ஆதாரங்கள் உள்ளன.

    45. நாளுக்கு நாள் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகியபடி உள்ளது.

    46. ஆதி காலத் துக்கு பெருமை வாய்ந்த இத்திருக் கோவிலில் ராஜகோபுரமும், தேரும் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. அம்பாள் அருளால் இந்த குறைகள் வெகு விரைவில் தீர உள்ளன.

    47. அம்மனுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பும் தேதியை பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட நாளில் கட்டளைத்தாரர் சார்பாக அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தி அன்றைய கட்டளைத் தாரர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதம் அனுப்பப்படுகிறது.

    48. தை, பங்குனி, ஆடி மாதங்களில் இத்தலத்தில் சிறப்பான விழாக்கள் நடத்தப்படுகின்றன.

    49. இத்தலம் பற்றிய கூடுதல் தகவல்களை www.irukkangudi-mariamman.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.

    50. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் முகவரி வருமாறு:- அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் இருக்கன்குடி, சாத்தூர் தாலுகா, விருதுநகர் மாவட்டம்.

    போன்:04562-259614, 04562-259864, 04562-259699.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலும் ஒரு சித்தர் நிஷ்டையாகி உள்ளார்.
    • சித்தர் ஐக்கியமான இடத்தில் தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான பக்தர்களை தன் பக்கம் ஈர்த்து இழுக்கும் ஒவ்வொரு தலத்திலும் ஈடு, இணையற்ற ஏதாவது ஒரு சித்தர் அடங்கி இருப்பார். அந்த சித்தர்களின் அருளாற்றல் மங்கா விளக்காக என்றென்றும் கலங்கரை விளக்கமாக ஒளிவீசி, மக்களை வழி நடத்துகின்றன என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலும் ஒரு சித்தர் நிஷ்டையாகி உள்ளார்.

    அந்த சித்தரின் பெயர், சிவயோக ஞானசித்தர்.

    இந்த சித்தர் இருக்கன்குடிக்கு வந்து ஐக்கியம் ஆனதன் பின்னணியில் ஒரு நிகழ்வு உள்ளது. அது வருமாறு:-

    சிவயோக ஞான சித்தர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தென் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ள சதுரகிரிமலையில் வசித்து வந்தார். அவருக்கு அன்னை பராசக்தியை நேரில் கண் குளிர கண்டு தரிசனம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. உடனே அவர் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பெரிருட்டு சதுரகிரிமலையில் தவம் இருந்தார். பல ஆண்டுகளுக்கு அவரது தவம் தொடர்ந்தது.

    அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் எனும் 5 கோசங்களை வென்று, ஜெகதாம்பிகை குறித்து அனுதினமும் தியானித்து, மானச பூஜையை அவர் ஒரே இடத்தில் இருந்து நடத்தி வந்தார். சிவயோக ஞான சித்தரின் மன உறுதி குலையாத தவ வலிமையை கண்ட அன்னை பராசக்தி அவர் முன் தோன்றினாள்.

    ஏ... ... அன்பனே, என்னைக் குறித்து தவம் இயற்றும் காரணம் என்ன? என்று கேட்டார். மறுவினாடி சித்தர் கண் விழித்தார். பராசக்தியை கண் குளிர, மனம் மகிழும் வகையில் தரிசித்தார். பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து அ¢ன்னை பராசக்தியை வணங்கினார்.

    சாஷ்டாங்க நிலையிலேயே அவர், ''சர்வ ஜீவாதார ஜெகத்ரட்சகி, சகல பாவ நிவாரணி, பராசக்தி, பரம கிருபாகரி, பக்த பராதீனகி, பக்தரட்சகி, இந்த பரம ஏழையை காப்பாற்றுவாய் என்றார். அவரை வாழ்த்திய பராசக்தி, ''நீ எதற்காக தவம் இருந்தாய்? உனக்கு என்ன வரம் வேண்டும். கேள் தருகிறேன் என்றாள்.

    அதற்கு சிவயோக ஞானசித்தர், ''ஜெகதாம்பிகை, நான் பல நாட்களாக உன் பெயரை மட்டுமே மந்திரமாக தியானித்து வந்துள்ளேன். நான் உன் அடிமை. இந்த அடிமை எந்த இடத்தில் நிஷ்டை ஆகிறேனோ, அந்த இடத்தில் உன் சன்னதி சிவசொரூபியாக பீடமிட்டு அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும். அன்னையே இதுதான் என் விருப்பம் என்றார்.

    இதை கேட்டு அன்னை பராசக்தி மனம் பூரித்தாள். பிறகு அவள், ''பக்தனே, வெகு நாட்களாக என்னைக் குறித்து தவம் செய்தமையால், நீ சித்தர்களில் ஒருவனாகச் சேர கடவாய் என்று ஆசி வழங்கினாள். அதன்பிறகு சிவயோக ஞானசித்தர் எந்த இடத்தில் நிஷ்டை ஆக வேண்டும் என்பதையும் அன்னை பராசக்தியே வரையறுத்து கூறினாள்.

    ''அர்ச்சுனா நதியும் வைப்பாறும் கூடிச் சங்கமமாகும் இடத்தில் உன் மனம் போல அமர்வோம் என்று அன்னை பராசக்தி வாக்குறுதி அளித்தாள். அதன் பேரில் சிவயோக ஞானசித்தர் அர்ச்சுனா, வைப்பாறு நதிகள் சங்கமிக்கும் புண்ணிய பூமிக்கு வந்தார். அந்த இடத்திலேயே நீண்ட நாட்கள் இருந்த அவர், அன்னை மாரியம்மனின் திருமேனியை வடிவமைத்தார்.

    பிறகு அந்த புண்ணிய பூமியில், பல, பல இடங்களில் தங்கி, நேம நிஷ்டை அனுஷ்டானம் செய்து வந்தார். இனி பிறவாமை வேண்டாம் என்று கூறி அம்பிகையின் திவ்ய நாமங்களையே மந்திரமாக சொல்லி வந்தார். ஒருநாள் அவர் தான் எப்படி நிஷ்டையில் ஐக்கியமாக போகிறேன் என்பதை ஊர் மக்களுக்கு தெளிவாக கூறினார்.

    சுத்தசாத்வீக சூக்ம நாதத்தில் மனதைச் செலுத்தி சூரிய கலை, சந்திரகலையில் பிராண வாயு செல்லுங்கால் பிருதிவி, அப்பு, தேயு, வாயு எனும் நான்கு தத்துவத்தில் வந்து விலகும். அப்போது பிராண வாயு ஆகாயத் தத்துவத்தில் அடையும். அச்சமயம் சுவாசம் குறைந்து வரும். அக்காலம் எது என அறிந்து வாசிஸ்தம்பனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு கூறிவிட்டு சிவயோக ஞானசித்தர் அஷ்டாங்க யோகத்தில் அமர்ந்து தவம் இயற்றினார். ஆடாமல், அசையாமல் அவர் ஒரே இடத்தில் அமர்ந்து ஆழ் தியானத்துக்கு சென்றார். நாளடைவில் சித்தரின் மேனி முழுவதும் புற்றுக்களாலும், புதர்களாலும் மூடப்பட்டன. இந்த நிலையிலேயே அவர் அந்த புண்ணிய பூமியில் நிஷ்டையாகி ஐக்கியம் ஆனார்.

    அவர் ஐக்கியமான இடத்தில் தான் இருக்கன்குடி மாரியம்மனின் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இப்போதும் சிவயோக ஞான சித்தர் அருவுருவமாக வந்து தினம், தினம் அன்னை பராசக்தியை வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    • முடி காணிக்கை செலுத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    மாவிளக்கு எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களின் வருகை அதிகமாக இருந்ததால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஏராளமானோர் கோவில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி மகா உற்சவர் விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி மதியம் 2 மணிக்குமேல் உற்சவர் அம்மன் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப்பின், ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    என்.மேட்டுப்பட்டி, இருக்கன்குடி, கே.மேட்டுப்பட்டி கிராம மக்கள் மேள தாளத்துடன் வரவேற்று அம்மனை தரிசித்தனர். அப்பனேரி கிராமமக்கள் நகரா ஒலி எழுப்பி வழிபாடு செய்தனர். இந்த ஆண்டு நத்தத்துப்பட்டி மக்கள் அம்மனை ரிஷப வாகனத்தில் பவனி வர செய்தனர். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் கோவில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பக்தர்களின் வசதிக்காக விருதுநகர், நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், தென்காசி, மதுரை, சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதிகளில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தன. இருக்கன்குடி, என்.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றங்கள் சார்பாக ஆங்காங்கே குடிநீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

    விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில், சாத்தூர் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 1,300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.
    • ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருவிழா கோலாகலத்தை காணலாம். அம்மனை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற உந்தலில் தினம், தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கன்குடிக்கு படையெடுத்தபடி உள்ளனர்.

    தீ சட்டி எடுக்கவும், மாவிளக்கு போடவும், மொட்டை அடித்துக்கொள்ளவும் தினந்தோறும் பக்தர்கள் வந்தபடி இருக்கிறார்கள். இதனால் எப்போதும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. என்றாலும் தை, பங்குனி, ஆடி ஆகிய 3 மாதங்களில் மட்டும் இருக்கன்குடி ஊரே மக்கள் வெள்ளத்தில் மூழ்கும் வகையில் பக்தர்கள் அலை, அலையாக வருவதை காணலாம். இந்த 3 மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை நாட்களில் மாரியம்மன் அருள் பெற திரளும் கூட்டம் கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும்.

    இந்த 3 மாதம் தான் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவ திருவிழா முதன்மையானது. பெரிதுவாக ஆடி மாதத்தை அம்மனுக்கு உரிய மாதம் என்பார்கள்.

    தேவலோகத்தில் தை முதல் ஆனி வரையிலான மாதங்கள் பகல் பெரிழுதுவாகவும், ஆடி முதல் மார்கழி வரையிலான மாதங்கள் இரவு பெரிழுதுவாகவும் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால் ஆடி மாதம் பகல் முடிந்து இரவு நேரம் தொடங்கும் காலமாக கருதப்படுகிறது.

    இதை தட்சிணாயன புண்ணிய காலம் என்பார்கள். இத்தகைய புண்ணிய காலத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழாவில் மட்டுமே ஊர் மத்தியில் உள்ள உற்சவ அம்மன் வெளியில் வீதி உலா வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நித்தம், நித்தம் தன்னைத் தேடி வரும் பக்தர்களை தானே தேடிச் சென்று தரிசனம் தருவது தான் இந்த விழாவின் முக்கிய அம்சமாகும்.

    ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3-வது வெள்ளிக்கிழமையன்று கொடியேற்ற வைபவம் நடைபெறும். அன்று காலை 5 மணியளவில் இருக்கன்குடி கிராம பெரிது மக்கள் கோவில் தலைவாசல் முன்பு வேப்பிலைக்கொடி கட்டுவார்கள். இதில் நத்தத்துப்பட்டி, கே.மேட்டுப்பட்டி, என்.மேட்டுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பெரிதுமக்கள் கலந்து கொள்வார்கள்.கடைசி வெள்ளிக்கிழமையன்று பகலில் ரிஷப வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் கோவிலில் இருந்து எழுந்தருள்வாள். பிறகு வீதி வலம் வருவாள்.

    நதியில் அம்மன் உலா வரும் போது மக்கள் திரளாக நின்று வணங்குவார்கள். பிறகு மூலவர் கோவிலை சென்றடையும் அம்மன் இரவு முழுவதும் அங்கு சர்வ அலங்காரத்துடன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

    மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மேல் மூலவர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர் மத்தியில் இருக்கும் உற்சவர் கோவிலை மீண்டும் அம்மன் சென்று அடைவாள். அப்போது பக்தர்கள் மேள, தாளம், நகரா ஒலி எழுப்ப உற்சவத்தை சிறப்பு செய்வார்கள்.

    ஆடி பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

    • அம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

    சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு வழிபாட்டில் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வழக்கத்தை காட்டிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கருணாகரன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் அறங்காவலர் குழுவினர் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். அதேபோல சாத்தூர் மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் அருகில் பத்திரகாளியம்மன் கோவில், படந்தால் துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    ×