என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Isha Foundation"

    • 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.
    • பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    தென்னை விவசாயிகளின் வருவாயை பெருக்கும் வகையில் "தென்னிந்திய தென்னை திருவிழா" எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஈஷா மண் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் ஜன 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஶ்ரீ விக்னேஷ் மஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    "தென்னை விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லை. தென்னைக்குள் ஊடுபயிர் செய்யும் விவசாயிகளை காட்டிலும் தென்னையை மட்டுமே பயிர் செய்யும் விவசாயிகளுக்கு வருவாய் குறைவாகவே உள்ளது. தென்னைக்குள் ஜாதிக்காய், பாக்கு, மிளகு, டிம்பர் மர வகைகள், இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக வளர்ப்பதன் மூலம் முன்னோடி விவசாயிகள் பலரின் வருவாய் பலமடங்கு அதிகரித்துள்ளது. இந்த லாபகரமான சூழல் அனைத்து விவசாயிகளுக்கும் சாத்தியம். அவர்களும் தென்னைக்குள் ஊடுபயிர் செய்வதன் மூலம் வருவாயை பெருக்க முடியும் என்பதை உணர்த்த இந்த "தென்னிந்திய தென்னை திருவிழா" நிகழ்சியை ஒருங்கிணைத்துள்ளோம். இதில் 2000 விவசாயிகள் வரை கலந்து கொண்டு பயனடைய இருக்கிறார்கள்.

    இந்த நிகழ்ச்சி தென்னிந்திய அளவில் நடப்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வல்லுனர்கள் மற்றும் முன்னாடி விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக, கர்நாடகாவை சேர்ந்த முன்னோடி விவசாயி சிவநஞ்சய்யா பாலேகாயி மற்றும் அருண்குமார், கேரளா பாலக்காடு பகுதியை சேர்ந்த ஸ்வப்னா ஜேம்ஸ் மற்றும் தமிழகத்தின் முன்னோடி விவசாயிகளான வள்ளுவன், ரசூல் மொய்தீன், வீரமணி இன்னும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தென்னை விவசாயிகள் அவர்களின் வருவாயை பல மடங்கு உயர்த்துவது குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் தென்னை விவசாயத்திற்கு தேவையான எளிமையான கருவிகளை காட்சிப்படுத்த இருக்கிறோம் மற்றும் அவை விற்பனைக்கும் வைக்கப்பட உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடக்க இருக்கும் "இயற்கை சந்தையில்" 60 இயற்கை அங்காடிகள் இடம்பெற உள்ளன. இதில் முன்னோடி விவசாயிகள் இயற்கை முறையில் பயிர் செய்த பாரம்பரிய காய்கறிகள், பயிர் வகைகள் மற்றும் அரிசி வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பு விவசாயிகள் 83000 93777, 94425 90077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்" இவ்வாறு முத்துகுமார் கூறினார் அவரோடு முன்னோடி விவசாயி வள்ளுவன் அவர்கள் உடன் இருந்தார்.

    • தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட கங்கனா ரனாவத் ஈஷா யோகா மையத்துக்கு வந்தார்.
    • சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் கங்கனா ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்து இரவு முழுவதும் உறங்காமல் சிவனை வழிபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை:

    தமிழில் தாம்தூம், சந்திரமுகி-2, தலைவி உள்ளிட்ட படங்களிலும், இந்தியிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத்.

    இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியானார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், கங்கனாவை கன்னத்தில் கடுமையாக அறைந்தார். இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட நடிகையும், எம்.பியுமான கங்கனா ரனாவத் நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு வந்தார்.


    அங்குள்ள ஆதியோகி சிலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிடம் ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    ஏற்கனவே சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் கங்கனா ரனாவத் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்து இரவு முழுவதும் உறங்காமல் சிவனை வழிபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா இங்கு வருகை தந்து தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி முன்னிட்டு 30 கிராமங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தீபாவளி அன்றும் மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு மலைவாழ் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகளுக்கு, ஈஷா சார்பில் புத்தாடை மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் 30 கிராமங்களில் உள்ள மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஈஷாவை சுற்றியுள்ள தாணிக்கண்டி, மடக்காடு, பட்டியார் கோவில்பதி, சாவுக்காடு, முள்ளங்காடு, குளத்தேறி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஈஷா சார்பில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டன. மேலும் தீபாவளி நாளன்றும் இந்த மலைவாழ் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட உள்ளன.

    இதனுடன் முட்டத்துவயல், செம்மேடு, காந்தி காலனி, நொய்யல் நகர், இருட்டுப்பள்ளம், சாடிவயல் சோதனை சாவடி, ராஜீவ் காலனி உள்ளிட்ட 30 கிராமங்களில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கப்பட்டன.

    ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பழங்குடியின குடியிருப்புகள் மற்றும் கிராம மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு பணிகளை ஈஷாவின் கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் மூலம் கடந்து 20 வருடங்களாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஜாதி, மதம் மற்றும் பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம் என தமிழ் மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    சென்னை:

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அமெரிக்காவில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் வணக்கம், நம் தமிழ் மாநிலத்தில் இருக்கும் எல்லா தமிழ் அன்பர்களுக்கும் நான் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் என்றால் ஜனங்கள் தான் நாயகர்கள். இந்த தேர்தல் நேரத்தில் நாம் நம் பொறுப்பை நல்லப்படியாக கடைப்பிடிக்க வேண்டும். நம் நாட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு நம் கையில் இருக்கிறது. இதை நாம் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

    நான் தற்போது அமெரிக்காவில் இருக்கிறேன். இருந்தாலும், தேர்தல் நாளான 18-ந் தேதி ஒரே ஒரு நாள் மட்டும் நான் வாக்களிப்பதற்காக இந்தியா வருகிறேன். வாக்களித்து விட்டு மீண்டும் உடனே இங்கு திரும்ப வேண்டி உள்ளது. நான் இந்த அளவுக்கு பொறுப்பு எடுப்பதற்கு காரணம், இது மிக மிக முக்கியமான பொறுப்பு.

    நம் நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் நம்கையில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டு என்பது ஒரு சாமானியமான வி‌ஷயம் அல்ல. ஜனநாயகம் வருவதற்கு முன் நாட்டின் தலைவரை நிர்ணயிக்கும் சக்தி கிடையாது. இப்போது தான் இந்த சக்தி நம் கையில் இருக்கிறது. இதை நீங்கள் பொறுப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ் மக்கள் எல்லாரும், ஒருவர் விடாமல், உங்களுக்கு யார் வேண்டுமோ, யார் வந்தால் நாட்டுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களோ அவருக்கு ஓட்டு போடுங்கள். பிறர் சொல்வதை வைத்தும், ஜாதி, மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போட வேண்டாம். நாட்டுக்கு எது நல்லதோ அதை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சத்குரு வீடியோவில் பேசியுள்ளார். #Loksabhaelections2019 #Sadhguru
    பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. #IshaFoundation #PulwamaAttack
    சென்னை

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அவர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து, உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது.

    இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும், குறிப்பாக, பல்வேறு படை பிரிவுகளில் உள்ள வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சத்குருவால் வடிவகைப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    தேசத்தை பாதுகாக்கும் பணியில் தைரியம் மற்றும் தியாக உணர்வுடன் ஈடுபட்டு வரும் இளம் வீரர், வீராங்கணைகள் குறித்து சத்குரு கூறும்போது, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். #IshaFoundation #PulwamaAttack

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பும், ஈஷா அறக்கட்டளையும் இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக நாளை (5-ந்தேதி) 250-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளன.
    கோவை:

    இதன் முக்கிய நிகழ்வாக, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ஐ.நா சுற்றுச்சூழல் அமைப்பின் செயல் இயக்குநர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் இந்தியாவுக்கான நல்லெண்ண தூதர் டியாமிர்சா ஆகியோருடன் டெல்லியில் 5-ந் தேதி கலந்துரையாட உள்ளார்.

    நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், மரபின் மைந்தன் முத்தையா, விவசாய சங்க தலைவர் நல்லசாமி, கோவை மாவட்ட லயன்ஸ் கிளப் கவர்னர் காளிசாமி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

    இந்தாண்டு ‘பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுப்போம்’ என்பது கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (5-ந்தேதி) ஈஷா தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள பொது இடங்களில் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர்.

    இது தொடர்பாக சத்குரு கூறும்போது,

    “வரமாக இருக்க வேண்டிய ஒன்றைக்கூட விழிப்புணர்வின்றி இருக்கும் போது மனிதர்கள் எப்படி சாபமாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பதற்கு பிளாஸ்டிக் ஒரு சிறந்த உதாரணம். பொறுப்புணர்வோடு பிளாஸ்டிக்கை கையாண்டு, ‘சிங்கிள்யூஸ்’ பிளாஸ்டிக்கை தடை செய்யும் கொள்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் நேரம் வந்துவிட்டது” என்றார்.
    ×