என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Girl"

    • அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
    • உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    போரூரில் பிரபல ஐ.டி.நிறுவனம் உள்ளது. இங்கு பணியாற்றும் இளம்பெண் ஒருவரது பெயரில் போலியாக தொடங்கப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் அவர் அனுப்புவது போன்று ஏராளமான ஆபாசமான குறுஞ்செய்திகள் வாலிபர்களுக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

    மேலும் தோழியின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களும் ஆபாசமாக மாற்றி பதிவிடப்பட்டு இருந்தன.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் இதுகுறித்து தெற்கு மண்டல சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். தென் சென்னை இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி உத்தரவுப்படி தெற்கு மண்டல சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் இளம்பெண் பணி புரியும் அதே நிறுவனத்தில் பணியாற்றி வரும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இளம்பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக பதிவிட்டு பேஸ்புக் மெசஞ்சரில் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்தது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழ்மாறனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல்செய்து ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட ஐ.டி.பெண் ஊழியர்களின் ஆபாச படங்கள் குவிந்து கிடந்தது. இதேபோல் தமிழ்மாறன் ஏராளமான பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி பேஸ்புக்கில் போலியாக கணக்கு தொடங்கி சாட்டிங் செய்து வந்து உள்ளார். இளம்பெண் சாட்டிங் செய்வது போல் வாலிபர்களை தொடர்பு கொண்டு இரவு முழுவதும் செக்ஸ் சாட்டிங் செய்து ரசித்து இருக்கிறார். இவரது இந்த விபரீத ஆசையால் தற்போது போலீசில் சிக்கி கொண்டார்.

    தமிழ்மாறன் தன்னுடன் பணியாற்றும் பெண் ஊழியர்களை அவர்களுக்கு தெரியாமல் பல கோணங்களில் செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து இருந்தார். அதனையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    ஆபாச சாட்டிங் செய்து அவரது வலையில் வீழ்ந்தவர்களிடம் பணம் பறித்து உள்ளாரா? உடன் பணியாற்றும் பெண் ஊழியர்கள் யாரையேனும் மிரட்டினாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெகஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஈரோடு மாவட்டம், களியனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகஸ்ரீ (வயது 25) பணி புரிந்து வந்தார். நேற்று மாலை 3 மணியளவில் பணிக்கு வந்த ஜெகஸ்ரீ வேலையில் இருக்கும்போதே முதல் தளத்தில் இருந்து இரவு சுமார் 8.30 மணியளவில் 7-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து உயிருக்கு போராடினார்.

    இது பற்றி தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகஸ்ரீயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்து போனார்.

    இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×