என் மலர்
நீங்கள் தேடியது "It will be held on the 20th"
- திருவண்ணாமலை கிரிவல பாதையில் கட்டப்பட்டுள்ளது
- ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்
வேங்கிகால்:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கட்டப்பட்டுள்ள அருணகிரிநாதர் மணி மண்டபம் திறப்பு விழா வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்குகிறார்.மணிமண்ட விழாக்குழு தலைவர் மா.சின்ராஜ் வரவேற்கிறார். செயலாளர் அமரேசன் விளக்க உரையாற்றுகிறார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகிக்கிறார்.
அருணகிரிநாதர் மணி மண்டபத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து பேசுகிறார்.
அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலை யத்துறை கமிஷ்னர் முரளிதரன், கலெக்டர் பா.முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல திறன் மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சி.என்.அண்ணாதுரை எம்.பி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, எஸ்.அம்பேத்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனிவாசன், வெற்றித் தமிழர் பேரவை தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, எஸ்கேபி கல்விக்குழும தலைவர் கு.கருணாநிதி, முன்னாள் எம்.எல்.ஏ மணிவர்மா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை கமிஷ்னர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், மீனாட்சி சுந்தரம் மற்றும் அருணகிரிநாதர் மணி மண்டப விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.