search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jacob Duffy"

    • சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் பென் சியர்ஸ் இடம் பெற்றிருந்தார்.
    • பென் சியர்ஸ்-க்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டது.

    8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.

    பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்து முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகி வருகின்றனர்.

    அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் பென் சியர்ஸ் தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக ஜேக்கப் டஃபியை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.

    • இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்த பென் சியர்ஸ் காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஜேக்கப் டஃபி அணியில் இணைந்துள்ளார்.

    • இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் செய்துள்ளது.
    • ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 385 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 295 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டப்பி 10 ஓவர்கள் பந்து வீசி 100 ரன்களை வாரி வழங்கினார். ஒரு இன்னிங்சில் 100 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்தியா தரப்பில் இந்த ஆட்டத்தில் மொத்தம் 19 சிக்சர்கள் நொறுக்கப்பட்டன. இதன் மூலம் இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் தங்களது அதிகபட்ச சிக்சர் எண்ணிக்கையை சமன் (2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் 19 சிக்சர்) செய்துள்ளது. இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இங்கு பெற்ற 6-வது வெற்றி இதுவாகும்.

    ×