search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jai hind"

    • அரியானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • அதில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் இனி ஜெய்ஹிந்த் என சொல்ல வேண்டும் என்றது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பள்ளிகளில் காலையில் குட் மார்னிங்கிற்கு பதில் ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது, மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வைத் தூண்டும்.

    தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மாணவர்களின் எதிர்காலப் பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.

    அனைத்து அரசு ஊழியர்களும் சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக, ஜெய்ஹிந்த் என்று சொல்ல துவங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' கோஷத்தை முதலில் எழுப்பினார்
    • நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு

    குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 4-வது கண்டன பொதுக்கூட்டம் மலப்புரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "நாட்டின் வரலாறு மற்றும் சுதந்திர இயக்கத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் முக்கிய பங்கை ஆற்றியுள்ளனர்.

    இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சில சங்பரிவார் தலைவர்கள், எதிரில் அமர்ந்திருந்தவர்களிடம், 'பாரத மாதா கி ஜே' கோஷம் எழுப்பும்படி கூறினர். ஆனால், அந்த முழக்கத்தை உருவாக்கியவர் யார்? அவர் பெயர் அஜிமுல்லா கான் என்பது சங் பரிவார்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    இந்த முழக்கத்தை உருவாக்கியவர் ஒரு முஸ்லிம் என்பதால் அவர்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. அதேபோல் அபித் ஹசன் என்ற முஸ்லிம்தான் 'ஜெய் ஹிந்த்' முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

    முகலாயப் பேரரசர் ஷாஜகானின் மகன் தாரா ஷிகோ என்பவர்தான் 50-க்கும் மேற்பட்ட உபநிஷதங்களை சமஸ்கிருதத்தில் இருந்து பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார். இந்திய படைப்புகள் உலகின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவியாக அவர் இருந்தவர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று கூறும் சங்பரிவார் தலைவர்கள், இத்தகைய வரலாறுகளை அறிய வேண்டும். நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியதில் முஸ்லிம்களுக்கும் பெரும் பங்குண்டு" என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

    பள்ளிகளில் வருகை பதிவேடு கணக்கு எடுக்கும் போது பெயர் வாசித்ததும் மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” அல்லது “ஜெய் பாரத்” என்று சொல்ல வேண்டும் என்ற உத்தரவு இன்று முதல் குஜராத்தில் அமலுக்கு வந்து உள்ளது. #GujaratSchools
    ஆமதாபாத்:

    பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புக்கு வருவதை உறுதி செய்வதற்காக வருகை பதிவேடு நடைமுறையில் உள்ளது.

    ஆசிரியர்கள் இந்த பதிவேட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரின் பெயரை வாசிக்கும் போது மாணவர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பி தங்களது வருகையை உறுதி செய்வார்கள்.

    பொதுவாக ஆசிரியர் பெயரை வாசித்ததும் ஆங்கில வழி பள்ளிகளில் “எஸ் சார்” என்று சொல்வார்கள் அல்லது “பிரசண்ட் சார்” என்று சொல்வார்கள்.

    தமிழ் வழி பாடம் நடத்தும் பள்ளிகளில் வருகை பதிவேடு எடுக்கப்படும் போது பெயர் வாசித்ததுடன் மாணவர்கள் எழுந்து “உள்ளேன் அய்யா” என்று சொல்வது வழக்கம். இந்த வழக்கத்தில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.


    வருகை பதிவேடு எடுக்கப்படும் போது பெயர் வாசித்ததும் மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” அல்லது “ஜெய் பாரத்” என்று சொல்ல வேண்டும் என்று குஜராத் மாநில ஆரம்ப பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் குஜராத்தில் அமலுக்கு வந்து உள்ளது.

    குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    மாணவ - மாணவிகளிடம் நாட்டுபற்றை அதிகரிக்க செய்வதற்காக இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வி மந்திரி பூபேந்திரசிங் தெரிவித்து உள்ளார். #GujaratSchools
    ×