என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jambu Nathi-Rama Nathi"

    • பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    தென்காசி:

    ஜம்புநதி-ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்த உண்மை நிலை விளக்க பொதுக்கூட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிதுரை தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது ஜம்பு நதி, ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் அவசரமாக தொடங்கப்பட்டு முறையான வனத்துறை அனுமதி உள்ளிட்டவை பெறாமல் பெயரளவிற்கு தொடங்கப்பட்டது. அதனை தற்பொழுது தி.மு.க.ஆட்சியில் முழுமையாக கொண்டு வருவதற்கும், இரட்டைக் குளம் கால்வாய் திட்டப் பணியையும் உரிய முறையில் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு குழு அமைப்பாளர் ராம உதயசூரியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், அழகு சுந்தரம், ரவிசங்கர், திவான் ஒலி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பி.எம்.எஸ்.ராஜன், சுந்தர்ராஜன், சின்னத்தாய், வேணி, சுதா மோகன்லால், தொழிலதிபர்ஆர்.கே.காளிதாசன், சிவ அருணன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×