என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasprit Bumrah"

    • ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும்.
    • இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் 'விஸ்டன்' புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    இதன்படி 2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

    31 வயதான பும்ரா கடந்த ஆண்டில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் சராசரியாக 14.92 ரன்னுக்கு ஒரு விக்கெட் சாய்த்து இருந்தார். ஒரு சீசனில் இவ்வளவு குறைவான ரன் சராசரியுடன் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார் என விஸ்டன் பாராட்டி இருக்கிறது. அத்துடன் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை கைப்பற்றியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    28 வயதான மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டியிலும் சேர்த்து 1,659 ரன்கள் குவித்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    • பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார்.
    • கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது.

    ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், டெல்லி-மும்பை போட்டி முடிந்த பின்பு ஜஸ்பிரித் பும்ராவும் கருண் நாயரும் சமாதானமாகி கட்டிப்பிடிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது.
    • பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை -டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணியில் கருண் நாயர் இடம்பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று களமிறங்கி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

    கருண் நாயர் துவக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்சருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட கருண் நாயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது என டெல்லி அணி வீரர் கருண் நாயர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் போது இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியதாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது அசத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    தற்போதைக்கு பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன். அதேவேளையில் என்னுடைய திறனை பயன்படுத்தி சரியான பந்தை சரியான திசையில் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அடிக்க முடிந்தது.

    மேலும் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது. நான் நன்றாக ஆடினேன். ஆனால், என்னுடைய அணி தோற்றுவிட்ட பிறகு, எனது இன்னிங்ஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை.

    என கருண் நாயர் கூறினார்.

    • இந்த போட்டியில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.
    • தீபக் சாஹர், போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் கருண் நாயர் அதிரடியாக விளையாடினார்.

    டெல்லி:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர். ரோகித் சர்மா இதையெல்லாம் ஓரமாக நின்று ரசித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜஸ்பிரித் பும்ரா (2015), முகமது சிராஜ் (2023) கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
    • மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 234 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 13-வது ஓவரில் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர். இதில் தாக்குரின் பங்களிப்பு மட்டும் 8. ஒரு இன்னிங்சில் அதிக வைடு போட்ட மோசமான பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.

    மேலும் அவர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார். தேஷ்பாண்டே எல்எஸ்ஜிக்கு எதிராகவும் சிராஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது.

    • முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 221 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி அணி, விராட் கோலி (67), படித்தார் (64) , ஜித்தேஷ் சர்மா (40) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.

    முன்னதாக இந்த போட்டியில் தனது 2-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது படித்தார் மற்றும் விராட் கோலி களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் படித்தார் தடுத்து ஆடுவார். அப்போது பும்ரா அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருந்த விராட் கோலி பக்கம் அடிக்க முயற்சிப்பார். சுதாரித்து கொண்ட விராட் கோலி கீரிஸ் உள்ளே சென்று விடுவார்.

    சிரித்தப்படி நடந்து வந்த பும்ராவிடம் விராட் கோலி என்னை அவுட் செய்ய பார்க்கிறாயா என்பது போல சிரித்தபடி பேசி செல்வார். இது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை.
    • ஐபிஎல் 2-வது பாதியில் பும்ரா விளையாடுவார் என்று கூறப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.

    இதனால், ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை

    இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்தாலும் நாளைய போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.

    • பும்ராவின் காயம் சற்று கடுமையானது.
    • பும்ராவுக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அவரது முதுகில் மீண்டும் ஒரு எழும்பு முறிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர் அணிக்கு திரும்புவது தாமதமாகிறது.

    அவர் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், பும்ராவின் காயம் சற்று கடுமையானது. அவருக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை. பும்ரா கூட இதில் கவனமாக இருக்கிறார்.

    காயம் குணமடைந்து பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் முழு வீச்சில் இன்னும் பந்து வீசவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.

    அவர் அணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவர் ஏப்ரல் 2-வது வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார். குறிப்பாக இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என கூறப்படுகிறது.

    இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிகிறது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும்.
    • முகமது சமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது.

    அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். அத்துடன் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.

    இந்நிலையில் இந்தியாவை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தியா நாங்கள் தோற்கடிக்க வேண்டிய அணி. எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல தொடராக இருக்கும்.

    நான் பும்ராவை 5 டெஸ்ட் தொடர்களில் எதிர்கொண்டுள்ளேன். அவர் எனக்கு எதிராக என்ன செய்யப் போகிறார் என்பது தெரியும். அதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அவரிடம் என்ன திறமைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். என்னை ஆச்சரியப்படுத்தும் எதுவும் இருக்கப்போவதில்லை. அவரை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும்.

    முகமது சமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் அவர்களுடைய தொடக்க கட்ட பந்துவீச்சை என்னால் கடந்து செல்ல முடிந்தால் நிறைய ரன்கள் அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு டக்கெட் கூறினார்.

    • ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான்.
    • அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் மும்பை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி சென்னை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா, சூர்யகுமார், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியையே வழி நடத்தும் 3 பார்மட் கேப்டன்கள் (ஒருநாள், டி20, டெஸ்ட்) மும்பை அணியில் இருப்பதால் தமக்கு கவலையில்லை என்று ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சூர்யகுமார் இந்திய டி20 அணியையும் வழி நடத்துகிறார். எனவே நான் இல்லாத போது டி20 கிரிக்கெட்டில் மும்பை அணியை வழி நடத்துவதற்கு அவரே சரியானவர். அது சுவாரசியமானதாக இருக்கும். கடந்த வருடம் ஒரு போட்டியில் தடைப் பெற்றது எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. அதுவும் விளையாட்டின் ஒரு அங்கம்.

    2 - 2.5 நிமிடங்கள் தாமதமாக நாங்கள் பௌலிங் செய்தோம். அப்போது இந்த விதிமுறைகள் பற்றி எங்களுக்குப் பெரிதாக தெரியாது. அது துரதிஷ்டவசமானது என்றாலும் விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இம்முறை ரோகித், சூர்யகுமார், பும்ரா ஆகிய 3 கேப்டன்களுடன் இணைந்து விளையாடப் போகும் அதிர்ஷ்டக்காரன் நான். அவர்கள் எனது தோளில் கை போட்டு தேவைப்படும் போது உதவி செய்யத் தயாராக இருப்பார்கள்.

    எனக் கூறினார். 

    • 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.
    • முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரின் முக்கிய அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த வகையில் அந்த அணியின் நட்சத்திர பந்து வீச்சாளாரன பும்ரா தொடரின் முதல் பாதியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

    இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோக செய்தியாகவும் சென்னை அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருகிற 23-ந் தேதி சந்திக்கிறது.

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் 3 ஓவர் பந்து வீசி 9 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்றுத் தோல்விக்கு பழி தீர்த்தது.

    அக்டோபர் 27-ம் தேதியன்று 2வது போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்கள் குவித்தது. அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார், அஸ்வின், அக்சர் படேல் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். பந்து வீச்சில் அற்புதமாக செயல்பட்ட புவனேஸ்வர் குமார் வெறும் 3.00 என்ற துல்லியமான எக்னாமியில் பந்து வீசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

    குறிப்பாக தன்னுடைய முதல் 2 ஓவர்களில் 1 ரன் கூட கொடுக்காமல் அடுத்தடுத்த மெய்டன் ஓவர்களாக வீசிய அவர் மொத்தமாக வீசிய 3 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்.

    நேற்றைய போட்டியில் அவர் வீசிய 2 மெய்டன் ஓவர்களையும் சேர்த்து இந்த வருடம் 5 மெய்டன் ஓவர்களை வீசியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய பவுலர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்:

    1. புவனேஸ்வர் குமார் : 5* (2022)

    2. ஜஸ்பிரித் பும்ரா : 4 (2014)

    3. ரிச்சர்ட் ங்கரவா : 4 (2021)

    அத்துடன் அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றையும் அவர் படைத்தார்.

    அந்த பட்டியல்:

    1. புவனேஸ்வர் குமார் : 20*

    2. ஜஸ்பிரித் பும்ரா : 19

    3. பிரவீன் குமார் : 19

    4. ஹர்பஜன் சிங் : 13

    5. இர்பான் பதான் : 13

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளே ஓவர்களில் 1000 பந்துகளை வீசிய முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே அதுவும் 500+ பந்துகளை மட்டுமே வீசியுள்ளார்.

    ×