search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jeweller"

    • சுஷாந்த் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
    • மூணாறு பகுதியில் 2 பேரை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனை சேர்ந்தவர் சுஷாந்த் (வயது 40). தொழிலதிபரான இவர் டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    ரூ.1½ கோடி கொள்ளை

    இவர் நகைகள் வாங்குவதற்காக கடந்த 30-ந் தேதி தனது காரில் கேரளா மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு சென்றபோது மற்றொரு காரில் வந்த மர்ம நபர்கள் மூன்றடைப்பு அருகே நான்கு வழிச்சாலை மேம்பா லத்தில் வைத்து வழிமறித்து சுஷாந்தை தாக்கி அவரிடம் இருந்த ரூ.1½ கோடியை கொ ள்ளையடித்து சென்றனர்.

    இதுதொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை யர்களை பிடிக்க டி.எஸ்.பி. ராஜூ தலைமை யில் 6 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. இதில் 4 தனிப்படையினர் கேரள மாநிலம் திருவனந்தபுரம், மூணாறு, நெய்யாற்றங்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளை யர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலம் ஆலப்புழா வை சேர்ந்த செபின் ராஜூ(26), எட்வின் தாமஸ்(27) ஆகிய 2 பேரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூணாறு பகுதியில் போலீசார் சினிமா பாணியில் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருச்சூரைச் சேர்ந்த மேலும் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் பகுதியில் பதுங்கி இருந்த அவரை செல்போன் சிக்னல் அடிப்படையில் போலீசார் கைது செய்த நிலையில் அவரிடமும் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இல்லை. அவரிடம் போலீ சார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். கொ ள்ளையில் தொடர்புடைய மேலும் 4 பேர் கும்பலை கேரளாவில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • விழுப்புரத்தில் பரபரப்பு நகை வியாபாரி காருக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் திருவாமாத்தூர் சானந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 38). இவர் விழுப்புரத்தில் தங்க நகை செய்து விற்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் தனது காரில் வெளியூருக்கு சென்று விட்டு இரவு வீட்டின் முன்பு காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் தூங்கச் சென்றார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கு வந்து காருக்கு தீ வைத்து விட்டு சென்றனர். தீ லேசாக எரிய தொடங்கி மளமளவென பயங்கரமாக எரிந்தது. 

    அப்போது திடீரென்று வீட்டின் வெளியே தீப்பற்றி எரிவதை அறிந்த குமாரசாமி திடுக்கிட்டு எழுந்து வீட்டின் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மர்மமான முறையில் எரிவதை கண்டு குமாரசாமி அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் தீயை போராடி அணைத்தார். இந்த விபத்தில் காரின் முன் பக்கம் முழுவதும் தீக்கிரையானது. மேலும் இது குறித்து குமாரசாமி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காருக்கு தீ வைத்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 

    ×