search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelry magic"

    • ராஜ்குமார் (வயது 40). இவர் நேற்று செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
    • தனது வீட்டு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை சேர்மன் மதுரை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40). இவர் நேற்று செவ்வாய்ப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    அதில், தனது வீட்டு பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்து உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வீட்டில் அனைவரும் இருக்கும் போது நகைகள் எப்படி மாயமானது? வீட்டுக்கு கடந்த 2 நாட்களில் யார்? யார்? வந்து சென்றார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×