என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry Picking"

    • பெண் மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.
    • திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    போரூர்:

    சென்னை கே.கே.நகர் அடுத்த விஜயராகவபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 85). தனியாக வசித்து வரும் மூதாட்டி காந்தியின் வீட்டிற்கு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். மேலும் தன்னை உறவுக்கார பெண் என்று கூறி மூதாட்டி காந்தியிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

    இதை உண்மை என்று நம்பிய காந்தி அவரை வீட்டிற்குள் அனுமதித்தார். பின்னர் அந்த பெண், மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.

    பின்னர் அந்த பெண் அவரது அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி காந்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது.
    • திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி ரம்யா (வயது36). இவர்கள் அதே பகுதியில் கோழிக்கடை நடத்தி வருகிறார்கள். சம்பவத்தன்று ஆலம்பட்டி-திருமங்கலம் மெயின் ரோட்டில் பாய்ஸ் டவுன் பகுதியில் ரம்யா நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது அங்கு இருசக்கர வாகனத் தில் வந்த 2 மர்ம நபர்கள், ரம்யா கழுத்தில் அணிந்தி ருந்த 6 பவுன் தங்க தாலி செயினை பறித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×