என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JK"

    • பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ஜம்மு பகுதியில் ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும். கடந்த வாரம் கதுவாவில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு பகுதியில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கி சூடு இதுவாகும்.

    இதுதொடர்பாக அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா கூறுகையில்,

    பாகிஸ்தான் ஆதரவளிக்கும் பயங்கரவாதத்திற்கு அரசாங்கம் பதில் அளிக்கும். ஜஜம்மு-காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை- அசாம் முதல்வர் என்று தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலையும் அளிக்கிறது.
    • மீண்டும் மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

    புதுடெல்லி:

    ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒரு ராணுவ வீரர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    காஷ்மீரில் நடந்த மற்றொரு பயங்கரவாத தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலையும் அளிக்கிறது. இந்த தொடர் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீரின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன.

    நமது ராணுவ வீரர்களும். அவர்களின் குடும்பங்களும் பா.ஜனதாவின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

    நாட்டுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனின் கோரிக்கையாக உள்ளது. இந்த துயரமான நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.

    இவ்வாறு ராகுல் காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

    • எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை.
    • பயங்கரவாதி சுட்டதில் சில போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லை பகுதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு வழங்கப்படுவதற்காக நடத்தப்படும் இந்த கடத்தலை இந்திய ராணுவத்தினர் தடுத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். டிரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்துவது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில், எல்லை பகுதிகளில் டிரோன்களில் ஆயுதங்கள் கடத்தியது தொடர்பாக இன்று ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கதுவா, சம்பா, தோடா உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடந்தது. ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஜம்மு சர்வதேச எல்லை பகுதியில் டிரோன் மூலம் கடத்தப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்யும்போது நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தளபதி அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு எல்லைப் பகுதியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து பயங்கரவாதியை அழைத்து சென்றபோது அவர் ஒரு போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து சுட்டப்படி தப்பிக்க முயன்றார். இதையடுத்து, போலீசார் சுட்டதில் பயங்கரவாதி உயிரிழந்தார். பயங்கரவாதி சுட்டதில் சில போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தேர்தலுக்கான 8-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 9 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 17-ம் தேதியில் இருந்து இதுவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதில் 73.8 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இந்நிலையில், இன்று 8ம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெறுகிறது. 331 பஞ்சாயத்து தலைவர்கள், 2007 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்து அமைப்புகளில் 43 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 681 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்ற பதவிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 2633 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



    தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 361 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அந்த வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #JKPanchayatPolls

    காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி பசரத் அகமதுவை கடத்தி சென்ற தீவிரவாதிகள் அவரை சுட்டுக்கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர். #JK #MilitantsAttack
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் கடந்த வாரம் 2 வாலிபர்களை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர். இதில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பாணியில் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் கடத்தி கொன்றனர்.

    காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தை சேர்ந்தவர் பசரத் அகமது. முன்னாள் சிறப்பு போலீஸ் அதிகாரி. அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகத் அகமது, ரியாஸ் அகமது ஆகியோரும் கடத்தப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதில் பசரத் அகமதுவை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை போலீசார் கண்டெடுத்தனர்.

    கடத்தப்பட்ட சகித் அகமது, ரியாஸ் ஆகிய இருவரையும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். #JK #MilitantsAttack

    ஜம்மு காஷ்மீரில் மூன்றாம் கட்ட பஞ்சாயத்து தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. #JKPanchayatPolls
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் கடந்த 17-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தொடங்கியது. மொத்தம் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், முதல் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

    358 பஞ்சாயத்து தலைவர் மற்றும் 1652 வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 5239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.



    மொத்தம் 2773 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 727 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இன்று தேர்தல் நடைபெறும் பஞ்சாயத்துகளில் 6 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 1437 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நவம்பர் 17-ம் தேதி நடைபெற்ற முதற்கட்டதேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 71.1 சதவீத வாக்குகளும் பதிவானது குறிப்பிடத்தக்கது. #JKPanchayatPolls
    கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார். #AndreaJeremiah
    பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புதிய படத்தை ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்.

    கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். ஜேகே, அசுதோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    ஆக்‌ஷன், திரில்லர் கலந்த பேண்டஸி படமாக உருவாகும் இந்த இதில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் சத்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.



    சென்னை, கொச்சின், பரோடா (குஜராத்), ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. #AndreaJeremiah

    ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிகுன் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பயங்கரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.



    அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சண்டை நடந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. #JKEncounter
    காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட கிரால்ஹார் பகுதி வழியாக ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர்.



    சற்றும் எதிர்பாராத வகையில் காரில் இருந்தவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் காரினுள் இருந்த இரு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். #MilitantsKilled
    தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு இணையாக கைவசம் பல்வேறு படங்களை வைத்திருக்கும் வரலட்சுமி அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக கமல் தனது படத் தலைப்பை விட்டுக் கொடுத்திருக்கிறார். #RaajaPaarvai #Varalakshmi
    விஜய்யின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, `மாரி 2' விமலின் கன்னி ராசி, ஜெய்யின் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன. 

    கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நடிப்பதற்கு சவாலான வேடங்களில் நடிக்கும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிகின்றன. வரலட்சுமி அடுத்து ஜே.கே. இயக்கத்தில் பார்வை திறனற்றவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் வரலட்சுமி தான் கதையின் நாயகி. இந்த படத்துக்கு முதலில் ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினார்கள். 



    ஆனால் கமலின் அனுமதிக்காக காத்திருந்ததால் தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்த தலைப்புக்கு கமல் சம்மதமும் அனுமதியும் அளித்துவிட்டார். படக்குழு விரைவில் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்க இருக்கிறது. #RaajaPaarvai #Varalakshmi #KamalHaasan

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயணிகளுடன் வந்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Accident
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் இன்று காலை பயணிகளை ஏற்றி வந்த சிறிய ரக பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டு மீட்பு பணிகள் துவங்கப்பட்டன.

    இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் சுமார் 30 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என கூறப்படும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் பகுதியில் ஒரே மாதத்துக்குள் நடக்கும் 3-வது மிகப்பெரிய விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #Accident
    ஜே.கே. இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #VaralakshmiSarathkumar
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் மிஸ்டர். சந்திரமௌலி படம் வருகிற வெள்ளியன்று ரிலீசாக இருக்கிறது.

    வரலட்சுமி நடிப்பில் அடுத்ததாக சண்டக்கோழி 2, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், கன்னிராசி, வெல்வட் நகரம், சர்கார், மாரி 2, நீயா 2, பாம்பன், சக்தி என படங்கள் வரிசைக்கட்டி வருகின்றன. 



    இந்த நிலையில், வரலட்சுமியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி வரலட்சுமி அடுத்ததாக ஜே.கே. என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. சாய் சமரத் மூவிஸ் சார்பில் ஜெயப்பிரகாசா, பவித்ரா கே.ஜெயராம் தயாரிக்கும் இந்த படத்திற்கு மேத்யூ ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். #VaralakshmiSarathkumar

    ×