என் மலர்
நீங்கள் தேடியது "job permanent"
- கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப மேலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு மறுத்துவருகிறது.
- பெண்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் ஓர் அங்கமான வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் வட்டார தொழில்நுட்ப மேலாளர்களாகவும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களாகவும் பணியாற்றி வருபவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பணி நிலைப்பு வழங்கப்படாததுடன், அண்டை மாவட்டங்களுக்கு இடமாற்றம் கூட மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒப்பந்தப் பணியாளர்கள் என்றாலே அவர்களை கொத்தடிமைகளைப் போல அரசு நடத்துவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் வேளாண்துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், வட்டார தொழில்நுட்ப மேலாளர்களும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களும் கடந்த 2012-ம் ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் அவர்களுக்கு முறையே ரூ.20,000, ரூ.8,500 ஊதியமாக வழங்கப்பட்டது. அதன்பின் 13 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ஒரே ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்பட்டு அவர்களின் ஊதியம் முறையே ரூ.25,000, ரூ.15,0000 ஆக உயர்த்தப்பட்டதைத் தவிர அவர்களுக்கான எந்த உரிமையும் இதுவரை வழங்கப்படவில்லை. இதே பணியை செய்பவர்களுக்கு அசாம் மாநிலத்தில் முறையே ரூ.64,927, ரூ.37,821 ஊதியமாக வழங்கப்படும் நிலையில், அதில் பாதி கூட தமிழகத்தில் வழங்கப்படவில்லை.
பணி நிலைப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மகப்பேறு காலங்களில் விடுப்புடன் கூடிய ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழில்நுட்ப மேலாளர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட அவர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அரசு மறுத்துவருகிறது. இது மனிதநேயமற்ற செயலாகும். இது தான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
வேளாண் துறை தொழில்நுட்ப மேலாளர்களின் உணர்வுகளை மதித்தும், அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும். ஒரு மாவட்டத்திலிருண்டு இன்னொரு மாவட்டத்திற்கு சென்று பண்ணியாற்றும் தொழில்நுட்ப மேலாளர்களை, குறிப்பாக பெண்களை அவர்களின் சொந்த மாவட்டத்திற்கே பணியிட மாற்றம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர், அக்.17-
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு (மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.) சார்பில் இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக மின்சார வாரியத்திலுள்ள தொழிலாளர்களிடம் அரசிற்கு எதிராக சென்னையில் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் பணிநிரந்தரம் கிடைக்கும் என பொய் தகவலை பரப்பி தற்கொலை எண்ணத்திற்கு தூண்டி விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் சூழலில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் இது தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார். செயலாளர் ராஜலிங்கம் இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில், மருத்துவர் சமூக மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் உள்ள ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும். சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திருக்கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் தபால் தலை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணைத் தலைவர் பிரபாகரன், துணைச் செயலாளர் ஜீவரத்தினம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ரகுராமன் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் மனோகரன், சின்னராஜா, ரமேஷ், மோகனகுமார், நிர்மல், பார்த்திபன், சரவணன், மணிகண்டசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.