என் மலர்
நீங்கள் தேடியது "Joe Biden"
- டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- ஜோ பைடன் நிர்வாகத்தின் பல உத்தரவுகளை ரத்து செய்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பதவியேற்றதும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் பல உத்தரவுகளை ரத்து செய்தார்.
இந்த நிலையில் ஜோ பைடனின் மகன் ஹண்டர், மகள் ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை ரத்து செய்வதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறும்போது, ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக ரகசிய சேவை பாதுகாப்பு உள்ளது. இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர். அவர் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இது அபத்தமானது.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன் இனி ரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார். அதேபோல் ஆஷ்லே பைடனுக்கு பாதுகாப்பு சேவை நீக்கப்படுகிறது என்றார்.
- கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும்.
- அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை.
வாஷிங்டன் :
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் செலுத்தி கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புதிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. உங்கள் பழைய தடுப்பூசி அல்லது உங்கள் முந்தைய கொரோனா தொற்று உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்காது.
அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை. வானிலை குளிர்ச்சியாகி வருகிறது. மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள்.
எனவே கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.
- குஜராத் பால விபத்தில் பலியானோருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார்.
- குஜராத் பால விபத்துக்கு ரஷியா, சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகள் இரங்கல் தெரிவித்தன.
வாஷிங்டன்:
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. ஆனால், 5 நாட்களில் பாலம் இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்தப் பால விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 177 பேர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.
இந்தத் துயர சம்பவத்திற்கு உலக நாடுகளில் இருந்து இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்,
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தூபா, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சகம், போலந்து நாட்டின் வெளிவிவகார மந்திரி பிக்நியூ ரா உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், குஜராத் பால விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று நமது இதயம் இந்தியாவுடன் இருக்கிறது. பாலம் இடிந்ததில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஜில் மற்றும் நானும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பல உயிர்களை இழந்ததற்காக குஜராத் மக்களுடன் இணைந்து துக்கப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
- தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
- டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் வரும் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெலிவிஷனில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்க தேர்தல் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால், அது நாட்டை குழப்பத்துக்கான பாதையில் தள்ளிவிடக்கூடும். இது இதுவரை நடக்காதது. இது சட்டவிரோதமானது. இது அமெரிக்காவுக்கும் எதிரானது.
தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.
2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றது என்று டிரம்ப் சொல்கிற பெரிய பொய்தான், 82 வயதான சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி மீதான தாக்குதலுக்கும், நாடாளுமன்ற தாக்குதலுக்கும் காரணம் ஆகும்.
கடந்த 2 ஆண்டுகளில் அரசியல்வன்முறை மற்றும் வாக்காளர்கள்மீதான அச்சுறுத்தலுக்கும் இந்தப் பொய்தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் இதை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி நிராகரித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கெவின் மெக்கார்த்தி கூறுகையில், "ஜனாதிபதி பைடன் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஏனென்றால் அவர் தனது விலைவாசி உயர்வுகளுக்கு வழிவகுத்த தனது கொள்கைகள் பற்றி அவரால் பேச முடியாது" என தெரிவித்தார்.
- டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் எலான் மஸ்க்
- சமூக ஊடக தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை குறைக்க ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை
வாஷிங்டன்:
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கி உள்ளார். டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக எலான் மஸ்க் பற்றியே இணையதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பொய்களை பரப்பும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, "நாம் அனைவரும் இப்போது எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை பற்றியே கவலைப்படுகிறோம். அவர் வாங்கியிருக்கும் டுவிட்டர் உலகம் முழுவதும் பொய்களை அனுப்புகிறது, பொய்களை வேகமாக பரப்புகிறது. டுவிட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. ஆபத்தில் இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்துகொள்ள முடியும்" என்றார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ஜோ பைடன் நிர்வாகம் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் "வெறுக்கத்தக்க பேச்சு" மற்றும் "தவறான தகவல்கள்" ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
- தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
- 3வது முறையாக சீன அதிபரான பிறகு ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.
வாஷிங்டன்:
இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார். அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது.
- ஜி-20 மாநாட்டில் அதிபர் ஜோபைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார்.
வாஷிங்டன்:
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலியில் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் போது ஜோபைடன்-ஜின்பிங் சந்தித்து பேச இருப்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லியன் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த போது, இந்திய பிரதமர் மோடி வெள்ளை மாளிகைக்கு சென்று ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவாரா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு ஜேக் சுல்லியன் பதில் அளித்து கூறியதாவது:-
அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதனால் ஜி-20 மாநாட்டில் அதிபர் ஜோபைடன் நிச்சயம் கலந்து கொள்ளும் நோக்கத்துடன் உள்ளார்.
ஜோபைடன் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி பல முறை வந்துள்ளார். அவர்கள் பல்வேறு முறை நேரடியாக சந்தித்தோ, தொலைபேசி மற்றும் வீடியோ மூலமாகவோ பேசி உள்ளனர்.
பல்வேறு நெருக்கடியான விஷயங்களில் இருவருக்கும் இடையே சரியான மற்றும் பலனளிக்க கூடிய நட்புறவு இருந்து வருகிறது.
இந்தியா-அமெரிக்கா நல்லுறவை வலுப்படுத்த இருவரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த ஆண்டு ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க அதிபர் ஜோபைடன் ஆவலுடன் உள்ளார். அடுத்த ஆண்டும் மோடியை ஜோபைடன் சந்தித்து பேசுவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது.
- நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை, செனட் சபைகளுக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களும், செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி 211 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நெருங்கியது. ஜனநாயக கட்சி 204 இடங்களை பெற்றது.
சென்ட் சபையை அதிபர் ஜோபைடனின் ஜனநாயக கட்சி கைப்பற்றியது. அக்கட்சி 50 இடங்களை பெற்றுள்ளது. குடியரசு கட்சி வசம் 48 இடங்கள் உள்ளன. இரு கட்சிகள் இடையே கடும் இழுபறி நிலவிய நிலையில் நெவாடாவில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றதால் சென்ட் சபையை கைப்பற்றியது.
- இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது.
- மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் அமெரிக்க, சீன அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியா நாட்டின் பாலியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் பாலியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசி வருகிறார். மாநாடு நாளை தொடங்கவுள்ள நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சதுப்பு நிலக்காட்டை பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர்.
- மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பார்வையிட்டனர். அப்போது மோடி தலைவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், மோடிக்கு 'சல்யூட்' அடித்தார். உடனே மோடியும், இருக்கையில் அமர்ந்தவாறு தனது கையை தூக்கியவாறு 'ஹாய்' என்று கூறினார்.
இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் வணக்கம் கூறிக்கொண்ட இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் 'வைரல்' ஆகி வருகிறது.
- பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன்.
- பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது.
அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் கடந்த 8-ம் தேதி இடைக்கால தேர்தல் நடந்தது.
இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இதில் அதிபர் ஜோபைட னின் ஜனநாயக கட்சி செனட் சபையை கைப்பற்றியது. பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை பெற 218 இடங்கள் தேவை.
பிரதிநிதிகள் சபை தேர்தல் முடிவு வெளியானபோது ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி இடையே சிறிய அளவில் வித்தியாசம் மட்டும் இருந்தது. இதில் குடியரசு கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.
இந்தநிலையில் பிரதிநிதிகள் சபையை முன்னாள் அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி கைப்பற்றியது. அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 இடங்களை பெற்றுள்ளது. ஜனநாயக கட்சி 211 இடங்களை கைப்பற்றியது.
பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் மெலிதான பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டிரம்பின் குடியரசு கட்சி குறைந்தபட்சம் 218 இடங்களை குறுகிய பெரும்பான்மையுடன் வெல்லும் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து குடியரசு கட்சிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, "குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு அதன் தலைவர் கெவின் மெக்கார்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினருடன் பணிபுரிய தயாராக உள்ளேன். ஜனநாயக கட்சியினர் அல்லது குடியரசுக் கட்சியினர் என யாராக இருந்தாலும் அவர்கள் என்னுடன் இணைந்து பணிபுரிய ஆவலுடன் இருப்பின், யாருடன் வேண்டுமானாலும் பணிபுரிவேன்" என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- அதிபர் ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் எளிமையாக திருமணம் நடந்தது.
- இதில் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் பங்கேற்றனர்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது. அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
அதிபர் மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. முதல் முறையாக அதிபர் பேத்திக்கு திருமணம் நடைபெற உள்ளது.
பதவியில் இருக்கும் அதிபரின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.