என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jos Buttler"
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரை விடுவித்தது.
- ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என பட்லர் கூறினார்.
ஐபிஎல் 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி மட்டும் 6 வீரர்களை தக்க வைத்தது.
அந்த வகையில் 1. சஞ்சு சாம்சன் (ரூ. 18 கோடி), 2, ஜெய்ஸ்வால் (ரூ. 18 கோடி), 3. ரியான் பராக் (ரூ. 14 கோடி), 4. துருவ் ஜுரேல் (ரூ. 14 கோடி), 5. ஹெட்மையர் (ரூ. 11 கோடி), 6. சந்தீப் சர்மா (ரூ. 4 கோடி). ஆகியோரை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி என தன்னை விடுத்தது குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு வேளை இதுவே கடைசியாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணிக்கு நன்றி. எனது கிரிக்கெட் பயணத்தின் சிறந்த தருணம் 2018ல் தான் தொடங்கியது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிங்க் ஜெர்ஸியில்தான் நான் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளேன். என்னையும் என் குடும்பத்தையும் அணைத்து அரவணைத்துக்கொண்டதற்கு நன்றி.
- ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் பங்கேற்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணி கேப்டனாக விக்கெட் கீப்பரும், அதிரடி வீரருமான பிலிப் சால்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டி20 அணி கேப்டனான ஜோஸ் பட்லர் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- டி20 மற்றும் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நீடிக்கிறார்.
- ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டன் அகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
லண்டன்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 இருபது ஓவர், 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் செப்.11-ந் தேதி நடக்கிறது.
இந்த போட்டி தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் நீடிக்கிறார். இரு அணியிலும் ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹூல், ஜான் டர்னர் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
20 ஓவர் அணியில் டான் மவுஸ்லி, புதுமுக வீரராக இடம் பெற்றுள்ளார். 3 மாத தடைக்கு பிறகு ஆல்-ரவுண்டர் பிரைடன் கார்சி அணிக்கு திரும்பியுள்ளார். அதே நேரத்தில் அதிரடி ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டன் அகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் சேர்க்கப்படவில்லை.
இங்கிலாந்து டி20 அணி:-
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டன், சாகிப் மஹ்மூத், டான் மௌஸ்லி, ஆடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.
ஒருநாள் அணி:-
ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.
- இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம்.
- பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், அவருக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை.
டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி ரோகித், சூர்யகுமார் ஆகியோரிடன் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இதுவே அதிகமான ஸ்கோர்தான்.
கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் ஜோடி களமிறங்கினர். இந்த ஜோடி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இதனால் 3 ஓவரில் 26 ரன்கள் எடுத்தது. உடனே சுதாரித்து கொண்ட ரோகித், அக்சர் படேலை ஓவர் வீச அழைத்தார். அதன் விளைவு முதல் பந்திலேயே பட்லர் அவுட் ஆனார்.
இதனை தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சுழற்பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 16.4 ஓவரில் இங்கிலாந்து 103 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் சுழலுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மொயின் அலிக்கு ஒரு ஓவர் கூட கொடுக்காததே தோல்விக்கு காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியை கூடுதலாக 20-25 ரன்களை அடிக்கவிட்டோம். பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தபோதும், மொயின் அலிக்கு ஒரு ஓவரை கூட கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், இந்தியாவை நிச்சயம் கட்டுப்படுத்தியிருப்போம்.
இதுதான், நான் செய்த பெரிய தவறு. மொயின் அலிக்கு ஓவர்களை கொடுத்திருந்தால், வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்'' எனக் கூறினார்.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
ஓவல்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கான் 38 ரன், பாபர் அசாம் 36 ரன், முகமது ரிஸ்வான் 23 ரன்கள் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர்.
பிலிப் சால்ட் 24 பந்தில் 45 ரன்னும், ஜாஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். வில் ஜாக்ஸ் 20 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், 15.3 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.
ஆட்ட நாயகன் விருது அடில் ரஷீத்துக்கும், தொடர் நாயகன் விருது ஜாஸ் பட்லருக்கும் வழங்கப்பட்டது.
- தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
- ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும்.
கொல்கத்தா:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக பட்லர் களம் இறங்கினார். இங்கிலாந்தை சேர்ந்த அவர் கடைசி வரை களத்தில் தனி நபராக நின்று அணியை வெற்றிபெற வைத்து சாதித்தார். அவர் 60 பந்துகளில் 107 ரன் எடுத்தார். இதில் 9 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.
தொடக்கத்தில் மெதுவாக பட்லர் விளையாடினார். முதல் 6 ஓவரில் 12 பந்துகளில் 20 ரன்களை மட்டுமே எடுத்தார். 7 முதல் 14-வது ஓவர்கள் வரையில் 21 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். கடைசி 6 ஓவர்களில் 27 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார்.
ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு அதே நேரத்தில் அதிரடியையும் வெளிப்படுத்தினார். கடைசி 3 ஓவர்களில் பட்லர் ஸ்டிரைக்கை தக்க வைத்துக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மறுமுனையில் இருந்த ஆவேஷ்கானை பேட்டிங் செய்யாதவாறு பார்த்துக் கொண்டு புத்தி சாலித்தனமாக ஆடினார். தனி ஒருவராக கடைசி வரை போராடி சாதனை வெற்றியை பெற வைத்தார்.
ஐ.பி.எல். போட்டியில் பட்லர் தனது 7-வது சதத்தை பதிவு செய்தார். இந்த தொடரில் அவரது 2-வது சென்சுரி ஆகும் ஐ.பி.எல்.லில் அதிக சதம் அடித்த வீரர்களில் பட்லர் 2-வது இடத்தில் உள்ளார். கோலி 8 சென்சுரியுடன் முதல் இடத்திலும் கிறிஸ் கெய்ல் 6 சதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஒட்டுமொத்த 20 ஒவரில் பட்லருக்கு 8-வது சதமாகும். அவர் கிறிஸ் கெய்ல் (22 சதம்), பாபர் ஆசம் (11), விராட்கோலி (9), ஆகியோருக்கு அடுத்தப்படியாக உள்ளார்.
கடைசி 6 ஓவரில் ராஜஸ்தான் 96 ரன் எடுத்தது. இதுவும் சாதனையாகும். இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அந்த அணி பஞ்சாப்புக்கு எதிராக கடைசி 6 ஓவரில் 92 ரன் எடுத்தது.
இதே போல கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைனும் சதம் அடித்து சாதனை புரிந்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போய் விட்டது.
- முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது.
- கடைசி பந்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுனில் நரேன் 109 ரன்கள் குவித்தார். இதில் 13 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.
அதைத் தொடர்ந்து 224 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஜெய்ஸ்வால் 19 (9) ரன்னில் அவுட்டாகினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
அதனை தொடர்ந்து பட்லர் -ரியான் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்து. அதிரடியாக விளையாடி ரியான் பராக் 34 ரன்களில் அவுட்டாகினார். அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 8, சிம்ரோன் ஹெட்மயர் 0, ரோவ்மன் போவல் 26, ரன்களில் அவுட்டாகினர்.
இருப்பினும் தொடர்ந்து ஒற்றை ஆளாக நின்ற பட்லர் கொல்கத்தா பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட அபாரமான சதமடித்து 9 பவுண்டரி 6 சிக்சருடன் 107* (60) ரன்கள் விளாசி கடைசி பந்தில் ராஜஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை (224) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தங்களுடைய சொந்த சாதனையை ராஜஸ்தான் அணி சமன் செய்தது. இதற்கு முன் 2020 சீசனில் பஞ்சாப்புக்கு எதிராக 224 ரன்களை சேசிங் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது.
- ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 183 ரன்கள் சேர்த்தது. அதை தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் 19.1 ஓவரில் எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பட்லர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் சதமடித்து அசத்தினார்.
இந்த சதத்தின் மூலம் பட்லர் தன்னுடைய 6-வது ஐபிஎல் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக தன்னுடைய 100-வது ஐபிஎல் போட்டியில் சதமடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் ராஜஸ்தானுக்கு அதிக ஆட்டநாயகன் (11) விருது வென்ற வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.
இந்நிலையில் அந்த தருணத்தில் சிக்சர் அடிப்பதற்கு ஹெட்மயர் செய்த உதவி பற்றி ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அந்த சிக்சரை விட என்னுடைய சதத்தை ஹெட்மயர் கொண்டாடியது சிறப்பாக இருந்தது. உண்மையாக அவர் தான் நீங்கள் ஒரு சிக்சர் அடிக்க வேண்டும். எனவே ஸ்டம்புகளுக்கு குறுக்கே சென்று பந்தை அந்த பகுதியில் அடியுங்கள் என்று என்னிடம் கூறினார்.
சில நேரங்களில் கிரிக்கெட்டில் விளையாடும் உங்களுடைய தலையை பல்வேறு விஷயங்கள் அதிகமாக சுற்றும். ராஜஸ்தான் அணிக்காக நீண்ட காலமாக விளையாடும் எனக்கு நிறைய ஆதரவுகள் இருக்கிறது. அங்கே அனைவரும் நீங்கள் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியில் பங்காற்றி இந்த சீசனை நன்றாக துவங்குவதற்கு வாழ்த்துகின்றனர்.
இவ்வாறு பட்லர் கூறினார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது.
- ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் (50 ஓவர்) அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் சந்திக்கிறது.
இந்நிலையில், உலக கோப்பை தொடருக்கான தற்காலிக இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பென் ஸ்டோக்ஸ் தற்போது அந்த முடிவை திரும்பப் பெற்றுள்ளார் . இதனால் பென் ஸ்டோக்ஸ் உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் அணியில் இடம்பெறவில்லை.
உலக கோப்பைக்கான தற்காலிக இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ்.
- ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்சில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர் கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
- நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே டெல்லி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.
இதையடுத்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்னில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஜாஸ் பட்லர் டக் அவுட்டானது மூலமாக ஒரு சீசனில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த சீசனில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இந்த சீசனில் அவர் 392 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்சில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர், கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் ஆரஞ்சு கேப் இவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 0 ரன்னில் ரன் -அவுட் ஆனார்.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 29 பந்தில் 48 ரன்களும் எடுத்தனர்.
தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் (0 ரன்) ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பட்லர் ரன் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பிய போது கோபத்தில் பவுண்டரி எல்லைக்கோட்டை பேட்டால் அடித்தார். இதன் காரணமாக ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் லெவல் 1 குற்றங்கள் பொதுவாக கிரிக்கெட் உபகரணங்கள், ஆடைகள் அல்லது மைதான பொருத்துதல்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்வதை உள்ளடக்கியது; நடவடிக்கை அல்லது வாய்மொழி துஷ்பிரயோகம் மூலம் நடுவரின் முடிவில் எதிர்ப்பை வெளிப்படுத்துதல், ஆபாசமான, புண்படுத்தும், அல்லது அவமதிக்கும் மொழியைப் பயன்படுத்துதல் மற்றும்/அல்லது ஒரு ஆபாசமான சைகை செய்தல் மற்றும் அதிகப்படியான கவர்ச்சியில் ஈடுபடுதல் அல்லது பெவிலியன்/டிரஸ்ஸிங் ரூம் ஷெட்களை நோக்கி ஆக்ரோஷமாக சைகை செய்தல் அல்லது ஆக்ரோஷமாக அல்லது ஏளனமாக செயல்படுதல் உள்ளிட்ட குற்றங்கள் லெவல் 1 குற்றங்களாக உள்ளதாக கூறப்படுகிறது.
- ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 3-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி பீல்டிங்கின் போது சஞ்சு சாம்சனிடம் நான் ஓவர் போடவா போடவா என பட்லர் சைகை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்